பூரி என்றதும் நம் நினைவுக்கு வருவது அருள்மிகு ஜகந்நாதர் திருக்கோயிலும், பிரசித்தி பெற்ற ரத யாத்திரையும்தான். அந்தத் தலத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது, மிகப் பழைமையானதும், புராணப் பெருமை மிகுந்ததுமான அருள்மிகு சாட்சிகோபாலன் திருக்கோயில். ஊர்ப் பெயரும் சாக்ஷிகோபால் என்றே வழங்கப்படுகிறது; ரயில்வே பாதையில் பூரிக்கு முன்னதாக வருகிறது சாக்ஷிகோபால் ரயில் நிலையம். ஸ்ரீகிருஷ்ணரின் கொள்ளுப் பேரனானன வஜ்நபி என்பவர், விரஜ மண்டலத்தில் பிரதிஷ்டை செய்த இரண்டு கோபாலன் விக்கிரகங்களில் ஒன்று இந்த சாட்சிகோபாலன் என்கிறது தலபுராணம் (மற்றொன்று மதனகோபாலன்). இந்தக் கோயில் 5,000 வருடங்கள் பழைமையானது என்கிறார்கள்.

வித்யாநகரம் என்ற ஊரைச் சேர்ந்த அந்தணர்கள் இருவர் தீர்த்த யாத்திரைக்குப் புறப்பட்டனர். அவர்களில் முதியவரான அந்தணர் செல்வந்தராகத் திகழ்ந்தார். மற்றவரோ இளைஞர்- பரம ஏழை. இந்த இளைஞர் தன்னுடன் பயணித்த முதியவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்தபடி யாத்திரையைத் தொடர்ந்தார். இருவரும் காசி, கயா, பிரயாகை, மதுரா ஆகிய திருத்தலங்களைத் தரிசித்துவிட்டு, கடைசியாக பிருந்தாவனத்துக்கு வந்தனர். அங்கே குடிகொண்டிருந்த கோபாலனின் அழகில் மெய்ம்மறந்த இருவரும் அந்தத் தலத்திலேயே தங்கிவிட்டனர். இந்த நிலையில் முதியவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. அவருக்குத் தேவையான சிசுருஷைகள் செய்து நன்கு கவனித்துக்கொண்டான் இளைஞன். அவனுடைய பணிவிடைகளால் வெகு சீக்கிரமே குணம் அடைந்த பெரியவர், தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்து தருவதாகக் கூறினார். ஆனால் அந்த இளைஞனோ, தான் எந்தவித பிரதிபலனை யும் எதிர்பார்க்காமல் பணிவிடை புரிந்ததாகவும், அடியவருக்கு செய்யும் பணிவிடை அந்த அனந்தனுக்கே செய்ததற்குச் சமமாகும் என்றும் கூறினான். மேலும், தன்னுடைய ஏழ்மை பெரியவரின் அந்தஸ்தை நெருங்கவிடாது என்றும் அவன் கருதினான். பெரியவரோ தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார். அவனைச் சம்மதிக்க வைத்ததுடன், கோயிலுக்குச் சென்று கேசவனின் சந்நிதானத்திலேயே, தனது முடிவை எவராலும் மாற்ற முடியாது என்று சத்தியப் பிரமாணம் செய்துவிட்டார்.

ஒருவாறு, யாத்திரை முடிந்து இருவரும் ஊர் திரும்பினார்கள். முதியவர் தன் குடும்பத்தாரிடம் நடந்ததையும், தனது சத்தியத்தைக் குறித்தும் விவரித்தார். அதற்கு, அவருடைய குடும்பத்தினர் கடும் ஆட்சேபம் தெரிவித்ததுடன், படிப்படியாக பெரியவரின் மனதையும் மாற்றிவிட்டனர். இதுதெரியாமல், பெரியவர் முன்பு சொன்ன வாக்குறுதியை மனதில் கொண்டு பெண் கேட்டு வந்தான் இளைஞன். ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து அவனைத் துரத்தி அடித்தது. அவன் பஞ்சாயத்தைக் கூட்டினான். பஞ்சாயத்து முன்னிலையில் தான் வாக்குறுதி ஏதும் தரவில்லை என்று மறுத்துப் பேசினார் பெரியவர். பின்னர், ‘ஏதேனும் சாட்சிகள் உண்டா?’ என அந்த இளைஞனிடம் கேட்கப்பட்டது.

‘‘கோபாலனே சாட்சி’’ என்றான் இளைஞன். ‘‘எனில், அந்த கோபாலனையே அழைத்து வா’’ என்றனர் பஞ்சாயத்து பெரியவர்கள். இளைஞன் கோபாலனின் கோயிலுக்கு ஓடினான். அவரிடமே முறையிட்டான். ‘‘தனவந்தரின் மகளை மணக்க வேண்டும் என்பதல்ல என் நோக்கம். உம்மை சாட்சியாக வைத்து பெரியவர் அளித்த சத்தியம் பொய்யாகிவிடக்கூடாது. ஆகவே, நீர் என்னுடன் வர வேண்டும்’’ என இறைஞ்சினான்.

அவன் பக்தியை உலகுக்கு உணர்த்த எண்ணிய கோபாலன், தனது அருளாடலைத் துவங்கினார். இளைஞனுடன் வருவதற்கு ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது, இளைஞன் திரும்பிப் பார்க் காமல் நடக்கவேண்டும். கோபாலன் பின்தொடர்வார். இடையில் அவன் திரும்பிப் பார்த்தான் எனில், அந்த இடத்திலேயே நின்று விடுவார். இதுதான் கோபாலன் விதித்த நிபந்தனை. இளைஞனும் ஒப்புக்கொண்டு பிருந்தாவனத்தில் இருந்து நடக்க ஆரம்பித்தான். கோபாலனும் காற்சலங்கை ஒலிக்க அவனைப் பின் தொடர்ந்தார்.

இருவரும் வித்யா நகரின் எல்லையை அடைந்தனர். அங்கே ஒரு மணல் மேடு. கோபாலனின் பாதம் மண்ணில் ஆழப் பதிந்ததால், அவருடைய கால் சலங்கை ஒலியெழுப்பவில்லை. இதனால் சந்தேகம் கொண்ட இளைஞன் திரும்பிப்பார்க்க, அங்கே புன்னகையோடு பக்தவத்சலனாம் கோபாலன் நின்றுகொண்டிருந்தார். மறுகணம் பேரொளி வீசும் விக்கிரகமாகச் சமைந்தார். இந்த தகவல் கிராமத்தவருக்கும் தெரிந்தது. அனைவரும் ஓடோடி வந்து கோபாலனைத் தரிசித்தனர்.

பக்தனுக்காக பரம்பொருளே சாட்சி சொல்ல வந்ததைக் கண்டு மெய்சிலிர்த்தனர். முதியவர் இறைவனின் திருவடியில் விழுந்து, தன்னை மன்னிக்க வேண்டி னார். அத்துடன், அந்த இடத்திலேயே தன் மகளை இளைஞனுக்கு கன்னிகாதானம் செய்து வைத்தார். இப்படி பக்தனுக்காக சாட்சி சொல்ல வந்ததால், இறைவன் `சாட்சி கோபாலன்' என்று திருப்பெயர் கொண்டார்.

ஒடிசாவின் கஜபதி வம்சத்தைச் சேர்ந்த புருஷோத்தம தேவ் என்ற அரசன், சாட்சி கோபாலன் விக்கிரகத்தை வித்யா நகரில் இருந்து எடுத்துவந்து கட்டாக்கில் உள்ள தனது கோட்டை யில் ஸ்தாபித்ததாகவும், மகான் சைதன்யர் பூரி தலத்துக்குச் செல்லும் வழியில் இந்த ஸ்வாமியைத் தரிசித்ததாகவும் கூறுவர். பின்னர், அந்நிய படையெடுப்பின்போது, பாதுகாப்புக் கருதி ஒவ்வோர் இடமாகக் கொண்டுசெல்லப்பட்ட இந்த மூர்த்தி, கடைசியாக இப்போது இருக்கும் தலத்துக்கு வந்துசேர்ந்தார். பின்னர் இவ்வூரைச் சேர்ந்த பிரம்மசாரி ஒருவர், நிறைய நன்கொடை கள் பெற்று, கி.பி 1860-ல் அருள்மிகு சாட்சி கோபாலனுக்குக் கோயில் எழுப்பினான். முதலில் கோபாலனின் சிலை மட்டுமே இருந்தது; பிற்காலத்தில் ராதையின் சிலையும் ஸ்தாபிக்கப் பட்டது என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.

இனி, கோயிலைத் தரிசிப்போமா?

கோயிலுக்கு நூறடி தூரத்துக்கு முன்பாகவே, வண்டியில் இருந்து நாம் இறங்கியதுமே நம்மைச் சூழ்ந்துகொள்கிறார்கள் பாண்டாக்கள். நடந்து வருபவர்களையும் விடுவதில்லை. அவர் களுக்குப் பணம் கொடுத்தால்தான் கோயிலுக்குள் போக முடியும் என்ற அளவுக்கு நம்மை தடுத்து நிறுத்திவிடுகிறார்கள். ‘போலீசை கூப்பிடுவோம்’ என்று நாம் அதட்டியபிறகே, ஏதேதோ முணகிய படி நம்மைவிட்டு அகலுகிறார்கள்!

பூரி ஜகந்நாதர் ஆலயத்தைப்போன்றே ஆனால் அதைவிடவும் சிறியளவில் காட்சி தருகிறது சாட்சிகோபாலன் கோயில். கோயிலுக்கு வெளியிலேயே கொடிமரம் உள்ளது; கலிங்க பாணியில் அமைக்கப்பட்டிருக்கிறது. கருவறையில், சுமார் ஐந்தடி உயரத்தில், கையில் புல்லாங்குழ லுடன் அருளும் வேணுகோபாலனை நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம், அவ்வளவு அழகு! அவருக்கு இடப்புறத்தில் ராதை. கோதுமைப் பதார்த்தங்களே இவருக்கு நைவேத்தியம் செய்யப்படுகின்றன. இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமானது, கார்த்திகை மாதம் வளர்பிறை நவமி திருநாளில் வரும் ‘ஆம்லா நவமி’ ஆகும்.

பூரி ஜகந்நாதரைத் தரிசிக்கச் செல்பவர்கள், இந்த ஆலயத்துக்கும் வந்து சாட்சிகோபாலனைத் தரிசித்தால்தான், யாத்திரை முழுமை அடையும் என்பது நம்பிக்கை. எனவே, பூரி ஜகந்நாதரைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள், மறவாமல் சாட்சிகோபாலனையும் தரிசித்து, அருள்பெற்று-வரம்பெற்று வாருங்கள்.