Published:Updated:

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!
பிரீமியம் ஸ்டோரி
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

குலம் தழைக்க அருளும் கொண்டத்து பத்ரகாளி!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

குலம் தழைக்க அருளும் கொண்டத்து பத்ரகாளி!

Published:Updated:
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!
பிரீமியம் ஸ்டோரி
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

குழந்தை வரம் வேண்டிவரும் பெண்களின் மடியும் மனதும் நிறைத்து அருளுகிறாள், கொண்டத்து பத்ரகாளியம்மன்.

ஈரோடு நகரில் காவிரிக்கரையின் தென்கோடியில் ரயில்வே சந்திப்புக்கு மிக அருகிலிருக்கிறது, கொண்டத்து பத்ரகாளியம்மன் கோயில். தீக்குண்டம் இறங்கும் நேர்த்திக்கடன், கல்யாண வரம், குழந்தை வரம் என்று அம்மனின் சிறப்புகள் அவள் சந்நிதிக்கு ஆயிரமாயிரம் பக்தர்களை அழைத்துவந்தபடி இருக்கிறது.

கோயிலின் பரம்பரை டிரஸ்ட்டியான சகுந்தலா, அதன் தலவரலாறு சொன்னார். ‘‘கிட்டத்தட்ட 125 ஆண்டுகளுக்கு முன், எங்கள் பரம்பரையைச் சேர்ந்த முப்பாட்டன் நம்பியா பிள்ளை, தன் சிறு பிராயத்தில் மணலில் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரும் அவருடன் விளையாடிய சிறுவர்களும் ஒரு கற்சிலை மணலில் புதைந்திருந்ததைப் பார்த்திருக்கிறார்கள். மற்ற சிறுவர்கள் அதைத் தோண்டி எடுக்கப்பார்க்க, எவராலும் இயலவில்லை. நம்பியா பிள்ளை அருள் வந்தவராக, அத்தனை வேகத்துடனும் பலத்துடனும் மணலில் புதைந்திருந்த அந்தச் சிலையை வெளியே எடுத்திருக்கிறார். ஆனால், அதை என்ன செய்வது என்று தெரியாமல், அங்கேயே வைத்துவிட்டு வந்திருக்கிறார். அன்று இரவே நம்பியா பிள்ளையின் கனவில் வந்த பத்ரகாளியம்மன், ‘நான் கொண்டத்து பத்ரகாளியம்மன்.

என்னை இதே இடத்தில் வைத்து பூஜை செய்’ என உத்தரவிட்டிருக்கிறாள். இந்த விவரத்தை அவர் வீட்டில் இருந்தவர்களிடம் சொல்ல, அதன்பிறகுதான் பெரியவர்கள் இந்தச் சிலையை வந்து பார்த்திருக்கிறார்கள். உடனடியாக, ஒரு ஓட்டுக் கட்டடத்தில் அந்தச் சிலையை நிறுவி பூஜை செய்து வந்திருக்கிறார்கள்.

அம்மன் சிலைக்கு அருகில் வேம்பும் அரசும் தானாக ஒன்றாகக் கிளம்ப, அதையும் வழிபடத் தொடங்கி இருக்கிறார்கள் ஊர்மக்கள். அம்மரத்தில் பல தம்பதிகள் வந்து தொட்டில் கட்டி குழந்தை வரம் வேண்டி மனமுருக வேண்டத் தொடங்கியிருக்கிறார்கள். இப்படிப் பலரும் பல வேண்டுதல்களுக்காக அம்மனிடம் சரணடைய, அவற்றையெல்லாம் அன்னை நிறைவேற்றித் தர, அதே நம்பிக்கையோடு நிறைய பக்தர்கள் அவளைத் தேடி வர ஆரம்பித்தார்கள். கேட்டதைத் தந்த அம்மனுக்குக் காணிக்கையாக, பக்தர்கள் தாங்களே முன்வந்து ஆளுக்கொரு கட்டடமாக எழுப்பி இந்தக் கோயிலை எடுத்துக் கட்டியிருக்கிறார்கள்’’ என்றார் சகுந்தலா.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பக்தர்களோடு விரதம் இருக்கும் பத்ரகாளி!

கொண்டத்து பத்ரகாளியம் மனுக்கு மூன்றுகால பூஜை செய்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் முதல் வாரம் கோயில் திருவிழா தொடங்குகிறது. 15 நாட்கள் நடக்கும் இந்தத் திருவிழாவுக்கு ஒரு வாரம் முன்னதாக பூச்சாட்டுதல் நடக்கிறது. அதற்கடுத்த திங்கட்கிழமை கொடியேற்றத் துடன் திருவிழா தொடங்குகிறது. அடுத்த வாரம் ஞாயிறு அன்று அபிஷேகமும், அடுத்த நாள் அக்னிகபாலமும் எடுக்கிறார்கள். இந்த அக்னிச் சட்டியை எடுத்துக்கொண்டு விடிய விடிய ஊரையே சுற்றிவந்து மறுநாள் விடிகாலை ஐந்து மணிக்கு இறக்கி வைக்கிறார்கள். பிறகு அம்மனுக்கு வெறும் சாதம் மட்டும் (சுத்த அன்னம்) வைத்து நைவேத்யம் செய்கிறார்கள். காரணம்,  பக்தர்களுடன் சேர்ந்து தானும் மூன்று நாட்கள் விரதம் இருக்கிறாள் பத்ரகாளி.

பத்தாயிரம் பக்தர்கள் இறங்கும் தீக்குண்டம்!


செவ்வாய்க்கிழமை தீக் குண்டத்துக்கான குழிவெட்டி, சுத்தப்படுத்தி, கோலம் போட்டு, காவியடித்து என வேலைகளைத் தொடங்கியவுடனேயே, பக்தர்கள் விறகுகளைக் கொண்டுவந்து கொடுத்துவிடுகிறார்கள். கிட்டத்தட்ட 30 டன் விறகுகள் பக்தர்களின் காணிக்கையாக வந்து சேர்ந்துவிடுகிறது. புதன் கிழமை அதிகாலை தொடங்கி, சுமார் எட்டாயிரத்தில் இருந்து பத்தாயிரம் பக்தர்கள்வரை தீக்குண்டத்தில் இறங்குகிறார்கள்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

குழந்தை வரம்!

இந்த ஆலயத்தில் இருக்கும் வராகி அம்மனுக்கு, அமாவாசையிலிருந்து ஐந்து நாட்கள் கழித்து பஞ்சமி திதியன்று, தலைவாழை இலைபோட்டு அதில் மஞ்சள் அரிசி, பழம், பத்தி வைத்து ஒரு தேங்காயை உடைத்து இரண்டு மூடிகளிலும் நெய்யை ஊற்றி தீபமிட்டு வணங்குகிறார்கள். பிறகு பிரசாதமாக மாதுளம்பழம், கேரட் துருவல், உலர்திராட்சை, பேரீச்சம்பழம், நாட்டுச்சர்க்கரை கலந்த கலவை வழங்கப்படுகிறது. இந்தப் பிரசாதத்தை சாப்பிடுவது, பத்ரகாளி அம்மனுக்கு விளக்கிடுவது, தீக்குண்டம் இறங்குவது... இவற்றை செய்து குழந்தை வரம் வேண்டி நின்றால், அது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

அதேபோல், இந்தக் கோயிலில் உள்ள சிந்தாமணி துர்க்கை, கல்யாணத்தடையை நீக்கிஅருள்புரிவதில் பிரசித்திபெற்று விளங்குகிறாள். செவ் வாய்க்கிழமைதோறும்  ராகு காலத்தில் தீபம் ஏற்றி தொடர்ந்து 12 வாரங்கள் வழிபட்டால், அந்த காலகட்டத்துக்குள் ளாகவே கல்யாணப் பேச்சு நல்லபடியாக முடியும் என்கிறார்கள்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

ஈரோட்டைச் சேர்ந்த ராஜாமணி என்ற பக்தை பேசியபோது... ‘‘கல்யாணமாகி 15 வருஷமா குழந்தை இல்லை. அந்த கஷ்டத்தை தாங்கமுடியாம தவிச்சு, இங்க வந்து அழுது வேண்டி கிட்டு போனேன். அன்னிக்கு இரவே, என் கனவுல வேப்பிலை யோட ஒரு அம்மா வந்தாங்க. இதே கோயில் வாசல்ல என்கிட்ட நெய் தீபத்தை கொடுத்து ஏத்தச் சொன்னாங்க. நானும் அவங்க சொன்ன மாதிரியே தீபங்களை ஏத்தி வெச்சுக்கிட்டே இருக்கேன். அப்போ அவங்க, ‘இதே மாதிரி எனக்கு விளக்கு போடு, நீ கேக்கிறது கிடைக்கும்’னு சொல்லிட்டு மறைஞ்சிட்டாங்க.

மறுநாள் இந்தக் கனவை எல்லார்கிட்டயும் சொன்னேன். ‘வந்தது பத்ரகாளிதான், உடனே கோயிலுக்கு போய் விளக்கு போடு’ன்னு சொன்னாங்க. மறுநாள் ஆத்தாளை தேடி ஓடிவந்து விளக்குப் போட்டேன். அதுக்கப்புறம் எனக்குக் குழந்தை பிறந்தது. அவளுக்கு நன்றிக்கடனாதான், இங்க தினமும் கோயில் பணிகள் செஞ்சிட்டு இருக்கேன்'' என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

- வீ.மாணிக்கவாசகம், படங்கள்: ரமேஷ் கந்தசாமி

எப்படிச் செல்வது?

ஈரோடு பேருந்து நிலையத் தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தக் கோயிலுக்குச் செல்ல, ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்து கிடைக்கும். ஈரோடு ரயில் நிலையம் செல்லும் எந்தப் பேருந்திலும் ஏறி, காளைமாட்டு சிலை என்கிற இடத்தில் இறங்கினால் நடக்கும் தூரத்தில் கோயில் உள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 5.30 மணி முதல் மதியம் 1 மணி வரை; மதியம் 2.30 மணி முதல் 8 மணி வரை.