Published:Updated:

முன்னோர்கள் சொன்னார்கள்

முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்
முன்னோர்கள் சொன்னார்கள்

நீண்ட ஆயுள், உடல் வலிமை, உள்ளத்தெளிவு இவை மட்டும் போதாது. அன்றாட வாழ்வில் குறையின்றி செயல்பட செல்வமும் வேண்டும். செல்வம் ஒரு பொருட்டல்ல என்று சொல்பவர்களுக்கும், வாழ்க்கையை நிறைவு செய்ய பணம் வேண்டும். பிறக்கும்போதே அவன் செல்வச் சீமானாக இருப்பதை ஜாதகம் சுட்டிக் காட்டும். அவனது சிந்தனை, பணம் ஈட்டுவதில் முனைப்பாக இருக்கும். முயற்சி இல்லாமல் எதுவும் நடைபெறாது. அதேநேரம், முயன்றும் பலன் அடையாதவர்களும் உண்டு. அவனது முயற்சி வெற்றி பெறுமா என்பதை, ஜாதகத்தில் தென்படும் 11-ம் வீடு சுட்டிக்காட்டும். உழைக்காமல் ஊதியம் பெறும் அதிர்ஷ்டத்தை அது சொல்லாது; உழைத்து ஊதியம் பெறுவது மனித இலக்கணத்தில் ஒன்று.

11-ம் வீட்டை `லாப ஸ்தானம்' என்கிறது ஜோதிடம். விரும்பியதை அடைவது `லாபம்' என்கிறது அது. 11-ம் வீட்டுக்கு உடையவன் கேந்திரம் (1, 4, 7, 10-ம் வீடுகள்) அல்லது த்ரிகோணம் (1, 5 , 9 -ம் வீடுகள்) அதில் இருக்கவேண்டும். 11-ம் வீட்டில் பாப கிரகங்கள் ஒதுங்கவேண்டும். அப்படியிருந்தால், பணத் தட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை அமையும் என்கிறது ஜோதிடம் (லக்னேச்வரே கேத்திரகாத த்ரிகோணேவா ஸமன்விதே...). அளவுக்கு அதிகமான பணம், வாழ்க்கையின் அமைதியைக் குலைத்துவிடும். தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குப் பணம் இருப்பதை 'தட்டுப்பாடு இல்லாத' என்ற சொல் சுட்டிக்காட்டும். வாழ்வின் இலக்கு மகிழ்ச்சி. அதை ஈட்ட உதவும் வகையில் பணம் இருப்பது அதன் அளவு.

11-ம் வீட்டுக்கு, மற்றவற்றுக்கு இல்லாத ஒரு தனித்தகுதி உண்டு.அதில் ஒதுங்கிய பாப கிரகங்களும் நன்மையைச் செய்யும் தகுதியைப் பெற்று விளங்கும் (ஸர்வேஷாம் சுப ஏகாதச ஸ்தான பலஸித்தி...). வாழ்க்கைத் தேவைகளின் ஒட்டுமொத்த செழிப்பை சுட்டிக் காட்டும் 11-ம் வீடு. குறிப்பாக தன லாபத்தை 11-ம் வீடு இறுதி செய்யும்.

தாம்பத்திய வாழ்வின் செழிப்புக்கு தன லாபத்தின் பங்கும் தேவைப்படும். தேவையான பொருத்தங்களில் நிறைவு இருந்தாலும், தன லாபத்தின் பங்கு இல்லை எனில், முழு வெற்றியை எட்ட இயலாது. ஆண், பெண் ஜாதகங்களை திருமண இணைப்புக்குத் தகுதி நிர்ணயம் செய்யும்போது, 11-ம் வீட்டையும் ஆராயவேண்டும். அதன் பங்கும் இணையும் போதுதான் செழிப்பு உறுதியாகும். ஆண், பெண் ஆகிய இருவரது 7, 8-ம் வீடுகளை மட்டும் ஆராய்ந்து முடிவெடுக்கும் எண்ணம், ஜோதிட பிரபலங்களில் தென்படக் கூடாது. மன ஒற்றுமை இருந்தாலும், செயல்பாட்டில் வெற்றி பெற பணம் வேண்டும். அதைப் புரிந்துகொள்ள 11-ம் வீட்டின் ஆராய்ச்சியும் தேவை.

லக்னாதிபதி கேந்திரத்திலோ, த்ரிகோணத் திலோ அமைவது என்பது, அவனது திறமையின் வலுவைச் சுட்டிக்காட்டும். விரும்பியதை அடைந்து சுவைக்கும் தகுதி இருப்பதை வரையறுக்கும். அதை ஈட்டித் தரும் வகையில், 11-ம் வீடு லாபத்தைப் பெறும் என்பதை நிர்ணயிக்க வேண்டும். இரண்டுக்கு உடையவன், கேந்திரத்தில் இருக்கவேண்டும். 11-ம் வீட்டுக்கு உடையவன் இரண்டில் இருக்கவேண்டும். இரண்டுக்கு உடையவனும், 11-க்கு உடையவனும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் அமையப்பெற்றாலும் செல்வச்செழிப்பு இருக்கும். இரண்டுக்கு உடையவன் 1, 4, 7, 10-ல் அமைய வேண்டும். இரண்டுக்கு உடையவனின் 1, 4, 7, 10-ல், 11-க்கு உடையவன் இருக்க வேண்டும். ஆக, இரண்டுக்கு உடை யவனும், 11-க்கு உடையவனும் ஒருவருக்கு ஒருவர் கேந்திரத்தில் (1, 4, 7, 10) இடம் பெற்றிருக்க வேண்டும் என்கிறது ஜோதிடம். லாபாதிபதியின் (11-க்கு உடையவன்) தொடர்பு, தனாதிபதிக்கு (2-க்கு உடையவன்) இருப்பதும், இருவரும் ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் தொடர்பு உடையவர்களாக மாறுவதும் செல்வச் செழிப்பை இடையூறின்றி நிறைவு செய்யும்.

ஜாதகத்தில் ஒன்றிலிருந்து ஏழாம் வீடு வரை ஒரு பகுதி; 8-ல் இருந்து 12 வரை ஒரு பகுதி. முதல் பகுதி கண்ணுக்குப் புலப் படும்; இரண்டாவது புலப்படாத பகுதி (த்ருச்யார்த்தம், அத்ருச்யார்த்தம்). இவற்றை இணைப்பது லக்னமும், ஏழும். இப்படியும் ஒரு விளக்கம் உண்டு. ஒன்றில் இருந்து 7 வரை ஒரு பகுதி; 7-ல் இருந்து ஒன்று வரை மறு பகுதி. லக்னத்தின் தகுதியை 7-ஐ வைத்து நிர்ணயிக்க வேண்டும். 7-ன் தகுதியை லக்னத்தை வைத்து முடிவெடுக்க வேண்டும். இரண்டு பகுதியும் ஒன்றிணைந்து பலனை இறுதியாக்க வேண்டும். ஒன்றுக்கும் ஏழுக்கும் தொடர்பு, இரண்டுக்கும் பதினொன்றுக்கும் தொடர்பு, மூன்றுக்கும் எட்டுக்கும் தொடர்பு, நான்குக்கும் பத்துக்கும் தொடர்பு, ஐந்துக்கும் ஒன்பதுக்கும் தொடர்பு, ஆறுக்கும் பன்னிரண்டுக்கும் தொடர்பு உண்டு. புலப்படும் பகுதியும், புலப்படா பகுதியும் இணைந்தே பலனை இறுதி செய்யும். லாபத்தைப் (11-ஐ) பார்த்துதான் பண வரவை (இரண்டை) நிர்ணயிக்கவேண்டும். 8-ஐ ஆராய்ந்து மூன்றின் ஒத்துழைப்பை தெரிந்துகொள்ளவேண்டும். 10-ஐ (வேலையை) ஆராய்ந்து, அவனது மகிழ்ச்சியை எடைபோட வேண்டும். 9-ஐ (அதிர்ஷ்டம்) ஆராய்ந்து, 5-ஐ (பூர்வ புண்ணியத்தை) தெரிந்துகொள்ள வேண்டும். 12-ஐ ஆராய்ந்து (இழப்பை) 6-ஐ (இடையூறு) இறுதி செய்ய வேண்டும். கண்ணுக்குப் புலப்படாத பகுதியை விரிவாக ஆராய்ந்து, புலப்படும் பகுதியின் தரத்தை நிர்ணயிக்கவேண்டும்.

2, 3, 4, 5, 6 ஆகியவற்றின் பலன்களை, 11, 8, 10, 9, 12 ஆகிய வீடுகளில், அவற்றின் அதிபர்களின் தரத்தை இணைந்து ஆராய்ந்தால் மட்டுமே இறுதி பலனைத் தெரிந்து கொள்ள முடியும். பன்னிரண்டுக்கு 6-ம், பதினொன்றுக்கு 2-ம், பத்துக்கு 4-ம், ஒன்பதுக்கு 5-ம், எட்டுக்கு மூன்றும் - ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாத தொடர்பு உடையவை. அதுபோல், லக்னமும் 7-ம் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாத தொடர்பு உடையவை. பன்னிரண்டு வீடுகளில் ஒரு வீட்டின் பலனை ஆராய, அதனுடன் தொடர்புடைய வீடுகளின் அதிபதிகளுடைய தரத்தை ஆராய்ந்து, அந்த பலனை இணைத்துப் பார்த்து, இறுதி முடிவெடுக்க வேண்டும்.

லக்னத்தை வைத்து ஆயுளை நிர்ணயிக்கும் போது 7-யும் (அதாவது மாரக ஸ்தானம்) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டி யிருக்கும். தனாதிபதியின் தரத்தை (செல்வ அளவு) நிர்ணயிக்க, 11-ம் பாவாதிபதியின் தரத்தை (லாபாதிபதி) இணைத்து பலனை இறுதியாக்க வேண்டும். சந்திர கேந்திரத்தில் குரு; பணம் தேவைக்கு அதிகமாகக் குவிந்து விடும். 5-க்கு உடையவன் உச்சம்; அதிர்ஷ்டம் கொட்டும். இரண்டுக்கு உடையவன் குருவோடு இணைந்திருக்கிறான்; செல்வச் செழிப்பும், மகிழ்ச்சியும் பொங்கி வழியும் - இப்படியெல்லாம் ஜோதிட பிரபலங்கள் பலன் சொல்ல முற்படக் கூடாது.

திருமணப் பொருத்தத்தில் கிடைக்கும் பலன்கள், கிரகங் களின் ஆராய்ச்சியில் மலர்ந்த முடிவில் வெற்றி பெறும். பத்துப் பொருத்தம் பயனற்றது. அதைப் பயனுள்ளதாகச் செய்ய, அந்தந்த வீட்டின் அதிபதியின் ஆராய்ச்சியில் விளைந்த பலன்தான் அதைப் பயனுள்ளதாக்கும். வாழ்க்கைக்குத் தேவையான உருப்படிகளை ஈட்டித் தரும் கிரகங்களின் திறமைதான் பொருத்தத்தைப் பயனுள்ளதாக்கும். ஒன்றுக்கொன்று ஒத்துப்போகும் மனநிலை, வாழ்க்கையைச் செழிப்பாக்காது. வாழ்க் கைக்குத் தேவையானவற்றை அடைவதில் வெற்றி பெற்றால்தான், ஒத்துப்போகும் மன நிலையும் பொருளுடையதாகும்.

முன்னோர்கள் சொன்னார்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜாதகத்தின் தரம், ஒத்துப்போகும் மனநிலை என்று இரண்டு பகுதிகள் உண்டு. இவற்றில் ஒன்றை இழந்தாலும் வெற்றி இருக்காது.

கையேடுகளை வைத்துக் கொண்டு பொருத் தத்தை மட்டும் பார்த்தால், தாம்பத்தியம் செழிக்காது. பொருத்தத்துக்கு அடிப்படை கிரகங்களின் ஆராய்ச்சி. அது இல்லாமல் பொருத்தத்தை விளக்கும் பிரபலங்கள் தென்படக் கூடாது. உப்புசப்பில்லாத 10 பொருத்தத்தை ஆராய்ந்து, பத்துக்கு ஐந்து பழுதில்லை என்று முடிவெடுக்கும் எண்ணம் வரக்கூடாது. முன்னாளில் இவ்வளவு ஜோதிடர்கள் பெருகவில்லை. இன்னாளில் ஜோதிடர்களின் எண்ணிக்கை அதிகமாகத் தென்படுகிறது.

மூடநம்பிக்கை என்று முத்திரை குத்திய பகுத்தறிவுவாதியும் பொருத்தம் பார்ப்பதில் இணைந்திருக்கிறான்; பத்து பொருத் தத்தை அறிவு சார்ந்த முறையில் பார்க்கிறான். பல ஏடுகளும், பல சானல்களும் இந்த 'மூட நம்பிக்கைக்கு' முதன்மை அளித்திருக்கின்றன. படிப்பும், பட்டமும், பட்டயமும், இட ஒதுக்கீடும் இல்லாத துறை இது ஒன்றுதான். இதில் இருப்பவர்கள் இடையே போட்டியோ, பொறாமையோ தென்படுவதில்லை. கணினியை வைத்துக் கொண்டு அதற்கு விஞ்ஞான வடிவம் அளித்திருக்கிறார்கள். பொதுவான காலத்தின் வரைபடத்தை தனி மனிதனின் ஜாதகமாக மாற்றி, அவர் களை ஏற்கவைப்பதில் சிறந்தவர்களாக விளங்கும் ஜோதிட பிரபலங்களும் உண்டு.கணினி, கணக்கை கச்சிதமாக அளந்து சொல்லும்; தனி மனிதனின் சிந்தனையை அது சொல்லாது. முற்றும் துறந்த முனிவர்கள், ரிஷிகள் ஆகியோரின் சிந்தனையில் வளர்ந்த தகவல்களை, இன்றைய கணினி ஆருடம் சொல்லாது. தற்போது, ஜோதிடரின் பரிந்துரையை எதிர்பார்க்காமல், கணினியே பத்துப் பொருத்தத்தை அலசி ஆராய்ந்து விடுகிறது.

தனாதிபதி 11-ம் வீட்டிலும், லாபாதிபதி 2-ம் வீட்டிலும் இருக்கவேண்டும். அவர்கள் தங்களது தகுதியை இழக்காதவர்களாக இருக்க வேண்டும். இந்த அமைப்பு ஜாதகத்தில் தென்பட்டால், பொருளாதாரத்தில் நிறைவைப் பெறுவான் (தனேசே லாபராகி ஸ்தேவாபேசே சதனம்கதே...). இங்கு புலப்படும் பகுதியும், புலப்படாத பகுதியும் (த்ருச்யார்த்தமும் அத்ருச்யார்த்தமும் - 2, 11-ம் வீடுகள்) இணைந்து இருக்கின்றன. அந்த இணைப்பு பலனை அளித்துவிடுகிறது. 11-ல் அமர்ந்த கிரகம் சுபனாவான். 11-க்கு உடையவனும் சுபனாவான். இரண்டில் அமர்ந்த கிரகம், 11-ல் வந்தபோது, அவனும் சுபனாவான். அது அவனுக்கு விரும்பிய பலனை அளித்து விடுகிறது. லக்னத்துக்கு உடையவன் சுப கிரகமாக இருந்து, இரண்டாம் வீட்டில் அமர்ந்தால், புதையல் மூலம் பெரும் செல்வம் சேரும் என்கிறது ஜோதிடம் (லக்னேச்வரே கோபனகேசரேந்த்ரே...). லக்னத்துக்கு உடையவன் அம்சகம் பெற்ற ராசிநாதன். சுப கிரக நவாம்சத்தைப் பெற்று குரு பார்வையுடன் இருந்தால், பலருக்கும் கடன் கொடுக்கும் அளவுக்கு பணத்தின் சேமிப்பு இருக்கும். (ரிணப்ரதோ விலக்னேச ஸம்யுக்தநவபாகம்...).

முனிவர்களின் தகவல்களை வைத்துக் கொண்டு, பலபேரின் சிந்தனையை அடையாளம் கண்டு செயல்பட விரும்புகிறார் கள். வேலையில் அமர விரும்பும் நேர்க்காணலில், அவனது சிந்தனையின் போக்கை அறிந்துகொள்ள ஜோதிடத்தைப் பயன்படுத்துகிறார்கள். திருடன், ஏமாற்றுபவன் போன்றோரை தெரிந்துகொள்ளவும் ஜோதி டத்தைக் கையாளுகிறார்கள். ஆனால், நம்மவர்களில் பெரும்பாலானவர்கள், பத்துப் பொருத்தத்தை குலுக்கிப் போட்டு, ஒற்றையா இரட்டையா என்ற விளையாட்டோடு நிறுத்திக்கொள்கிறார்கள். சீட்டுக் கம்பெனி நடத்துவோரில் சிலர், சமூக சேவகர்களில் சிலர், சீர்திருத்தவாதிகளில் சிலர் இருக் கிறார்கள். இவர்களது ஜாதகத்தை ஆராய்ந்து முடிவெடுத்தால், வருங்கால விபரீத விளைவு களில் இருந்து தப்ப இயலும்! ஜோதிடர்களை அடையாளம் கண்டுகொள்ள இயலாத இன்றையச் சூழலில், அவர்களது ஜாதகத்தை ஆராய்ந்து செயல்பட்டால், விபரீத விளைவுகளைத் தவிர்க்கலாம் என்று புதுதலைமுறையினர் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

அருள்வாக்கு, குறி சொல்லுதல், கட்டை விரல் ரேகை ஜோதிடம் ஆகியன சமுதாய செல்வாக்கைப் பெற்று விளங்குவதால், உண்மை ஜோதிடமும் மூடநம்பிக்கையாக மாறிவிட்டது. பன்னிரண்டு கட்டங்களில் பரவலாக அமர்ந்த ஒன்பது கிரகங்கள், ஒருவனது இறந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் ஆகியவற்றின் வரைபடத்தை உருவாக்கிவிடுகின்றன. முற்பிறவி கர்ம வினையே, அவன் பிறக்கும் வேளையில் அவர்களை அமரவைத்திருக்கிறது.

இரண்டுக்கு உடையவன், இரண்டில் இணைந்த கிரகம், இரண்டை பார்க்கும் கிரகம், இரண்டுக்கு உடையவனின் ராசி நாதன், இரண்டுக்கு உடையவனின் அம்சக நாதன், லக்னத்துக்கு உடையவன், காரகக் கிரகம்-ஆகிய அத்தனை கிரகங்களின் ஷோடச பலன்கள், இரண்டாம் வீட்டுக்கு உடையவனுக்கும், லக்னாதிபதிக்கும், காரக கிரகத்துக்குமான தொடர்பு ஆகியவற்றை நன்கு ஆராயந்தால், ஜாதகங்களின் பொரு ளாதார நிலை துல்லியமாகக் கிடைத்துவிடும். இரண்டுக்கு உடையவனின் தகுதியை மட்டுமே ஆராய்ந்தால், தோராயமான பலனைச் சொல்ல வேண்டி வரும். ஆராய்ந்து சொல்லும் பொறுப்பு ஜோதிடருக்கு உண்டு. சிந்தனை வளம் பெற்றவருக்கு ஜோதிடம் கைகூடும். சிந்தனை வளம் பெறாதவர்களுக்கு, அது எட்டாக் கனியாகவே இருக்கும்!

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism