Published:Updated:

திரௌபதி அம்மன் கோயில் குடமுழுக்குத் திருவிழா!

திரௌபதி அம்மன் கோயில் குடமுழுக்குத் திருவிழா!
திரௌபதி அம்மன் கோயில் குடமுழுக்குத் திருவிழா!

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் குடமுழுக்குத் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க சிறப்பாக நடைபெற்றது. 

முன் ஜன்ம சாபத்தால் சக்தியின் அம்சமாகப் பிறந்தவள் திரௌபதி. மகாபாரதத்தில் சொல்லொணாத் துயரங்களை அடைந்து, தான் கொண்ட சபதத்தில் வெற்றி பெற்றவள். யாக சாலையில் பிறந்ததால் யாகசேனா என்றும் கரிய நிறம் கொண்டதால் கிருஷ்ணை என்றும், பாஞ்சால நாட்டின் இளவரசி என்பதால் பாஞ்சாலி என்றும் துருபதனின் மகள் என்பதால் திரௌபதி என்றும் பெயர் பெற்றவள் சப்த கன்னியர்களுள் ஒருவராக விளங்குகிறாள். 

சிவபெருமானைக் கண்டு முக்தியடைந்த திரௌபதியை பலர் குலதெய்வமாகப் போற்றி வணங்குகிறார்கள். பலருக்குக் காவல் தெய்வமாகவும் இருக்கிறாள்.

அப்படி, திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊத்துக்கோட்டைக்கு அருகே உள்ள போந்தவாக்கம் கிராமத்தில் அமைந்திருக்கிறது தர்மராஜா சமேத திரௌபதி அம்மன் கோயில். பழைமை வாய்ந்த இக்கோயிலில் குடமுழுக்குத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் திரளாகப் பங்கேற்று திரௌபதி அம்மனைத் தரிசித்து அருள் பெற்றனர்.   

குடமுழுக்குத் திருவிழா நிறைவடைந்ததை முன்னிட்டு அம்மன் திருவீதி உலா அரங்கேறியது... 

பக்தர்கள் அம்மனது அருள் பெற்றனர்.