Published:Updated:

நாரதர் உலா

நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா

பரக்கலக்கோட்டையில் பக்தர்கள் பரிதவிப்பா?

நாரதர் உலா

பரக்கலக்கோட்டையில் பக்தர்கள் பரிதவிப்பா?

Published:Updated:
நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா
நாரதர் உலா

ள்ளே வரும்போதே, ‘‘வாரத்தில்  ஒரே ஒரு நாள், அதுவும் இரவு வேளையில்  மட்டுமே வழிபாடு நடைபெறும் கோயில் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’’ என்ற கேள்வியுடன் நம்

நாரதர் உலா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறைக்குள் பிரவேசித்தார் நாரதர்.

‘‘தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பக்கமுள்ள பொது ஆவுடையார் கோயிலைப் பற்றித்தானே சொல்ல வருகிறீர்? அந்தக் கோயிலில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடப்பதாகக் கேள்விப்பட்டோமே... அங்கு போய்வந்தீரா என்ன?’’ என்று கேட்டோம்.

‘‘என் காதுக்கு விஷயம் வந்த பிறகு நானாவது, போகாமல் இருப்பதாவது?’’ என்ற நாரதர், தொடர்ந்து...

‘‘தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ளது பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோயில். அந்தக் கோயில், வாரத்தில் ஒருநாள் திங்கட்கிழமை அன்று இரவு மட்டும்தான் திறந்திருக்கும். வாரத்தில் ஒருநாள் என்பதால் உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்தெல்லாம் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்கூட கோயில் நிர்வாகம் தரப்பில் செய்து தரப்படவில்லை என்று பக்தர்கள் குறைப்பட்டுக்கொள்கிறார்கள். முக்கியமாக, போதிய டாய்லெட் வசதிகள் இல்லாததால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்’’ என்றார்.

‘‘கோயில் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது?’’

‘‘முன்பு இந்தக் கோயில், கிராம நிர்வாகக் கமிட்டியிடம்தான் இருந்தது. கோயிலில் நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்து கிராமப் பொதுமக்கள் கோயில் நிர்வாகத்திடம் வரவு செலவுக் கணக்கு கேட்டிருக்கின்றனர். கணக்கு கேட்ட பாவத்துக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதுதான் மிச்சம். இப்போது அறநிலையத்துறை, கோயில் நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது’’ என்ற நாரதரிடம், ‘‘அப்படியுமா பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்கவில்லை?’’ என்று கேட்டோம்.

‘‘இல்லையே! கோயில் நிர்வாகம் அறநிலையத்துறையின் கீழ் வந்த பிறகும் அநியாயங்கள் தொடர்ந்து நடக்கத்தான் செய்கின்றன. கோயிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாகச் செலுத்தும் காணிக்கையில் பாதி ஸ்வாஹா செய்யப்படுவதாக பரவலாகப் பேசிக்கொள்கிறார்கள்.’’

‘‘போக்குவரத்து வசதி எல்லாம் எப்படி?’’

நாரதர் உலா

‘‘விழாக் காலங்களில் மட்டும்தான் ஓரளவுக்குப் போக்குவரத்து வசதி செய்யப்படுகிறது. வாரத்தில் ஒருநாள் மட்டும் என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அதுவே ஒரு பெரிய விழாவாகத்தான் இருக்கிறது. இருந்தும் போதிய அளவுக்குப் போக்குவரத்து வசதிகள் செய்து தருவதில் கோயில் நிர்வாகம் அக்கறை காட்டவில்லை என்று பக்தர்கள் குறைப்பட்டுக்கொள்கிறார்கள்.

ஊருக்குள் இருந்து கோயிலுக்கு ஆற்றங்கரையோரமாக நடந்துதான் வரவேண்டும். ஆனால், போதிய மின்விளக்கு வசதி இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு விளக்குகளும் எப்போது எரியும் என்றே தெரியாது!‘‘வேறு ஏதாவது செய்தி உண்டா?’’

‘‘இன்னொரு விஷயத்தையும் சொல்லித்தான் ஆகவேண்டும். ‘அன்னதானத் திட்டத்தின் கீழ் தினமும் 100 பேருக்குச் சாப்பாடு போடுகிறோம்’ என்று சொன்னார்கள். ஆனால், நாம் பார்த்தபோது அதிகபட்சமாக 50 பேர்தான் சாப்பிட்டிருப்பார்கள். அடுத்து வருபவர்களுக்கு இல்லை என்று கைவிரித்துவிடுகிறார்கள். திங்கட்கிழமை இரவு நடைபெறும் வழிபாட்டுக்கு அன்று காலை முதலே பக்தர்கள் வந்து குவிகின்றனர். அவர்களுக்கு மதியம் மற்றும் இரவு நேரத்தில் வழங்கப்படும் புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம் ஆகியவை பெயரளவில்தான் வழங்கப்படுகின்றன. மேலும், பூஜைகள் முடிந்த பிறகு பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கு போதிய வசதி இல்லாததால், பெண்களும் குழந்தைகளும் மிகவும் சிரமப்படுகின்றனர்’’ என்ற நாரதர் தொடர்ந்து...

 காணிக்கையாக ஆடு, மாடு, கோழி, நெல், தானியங்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து குவிப்பார்களாம் பக்தர்கள். அவற்றை ஒவ்வொருநாளும் ஏலம் விடுகிறார்கள். ஆனால், அதற்கான கணக்கு வழக்கு முறையாக இருக்கிறதா என்பது சந்தேகமாக இருக்கிறது என்று பக்தர்களும் உள்ளூர் மக்களும் பேசிக்கொண்டது என் காதில் விழுந்தது.’’

‘‘நீங்கள் சொல்வதைப் பார்த்தால், கோயிலுக்கு நல்ல வருமானம் வரும் போலிருக்கிறதே. அப்படியிருந்தும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்துகொடுப்பதில் கோயில் நிர்வாகம் முன்வராதது ஏன்?’’

‘‘அதுதான் புரியாத புதிராக இருக்கிறது. அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டால், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செய்வதாகத்தான் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் சொல்வது எந்த அளவுக்கு நிஜம் என்பதை நேரில்  சென்று பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்!’’

நாரதர் உலா

‘‘கோயில் அறங்காவலர்க் குழுவினரிடம் பேசினீர்களா?’’

‘‘பேசினேனே! அவர்களில் ஒருவர், ‘ஆமாம், நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான். போதிய கழிப்பறை வசதி இல்லைதான்’ என்று சொல்லிக்கொண்டிருந்தபோதே மற்றவர் குறுக்கிட்டு, ‘அப்படிச் சொல்லாதீர்கள். கோயிலுக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும். பக்தர்கள் வராமல் போய்விடுவார்கள்’ என்று முதலாமவருடன் சண்டைக்கே வந்துவிட்டார்’’ என்றார் நாரதர்.

‘‘பாவம், அவர்களுக்குள் என்ன பிரச்னையோ? நீர் போய் விசிறிவிட்டு வந்துவிட்டீர்கள். சரி, சாலை மற்றும் மின்விளக்கு வசதி குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பேசினீர்களா?’’

‘‘ஊராட்சி நிர்வாகத் தரப்பில் தொடர்பு கொள்ளச் சென்றபோது யாரும் இல்லை. விரைவில் விசாரித்துச் சொல்கிறேன்’’ என்ற நாரதர், தனது செல்போனை எடுத்துப் பார்த்துவிட்டு, பேசியவர், ‘‘அவசரத் தகவல். வந்து விவரம் சொல்கிறேன்’’ என்றபடி கண்ணிலிருந்து மறைந்தார்.

படங்கள்: க.சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism