Published:Updated:

முன்னோர்கள் சொன்னார்கள்

முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்
முன்னோர்கள் சொன்னார்கள்

ரண்டுக்கு உடையவன் உச்சம் பெற்று இருக்கவேண்டும். அல்லது பந்து நட்சத்திரத் துக்கு (நெருங்கிய தொடர்புடைய ராசியில்) இருக்கவேண்டும். சுப கிரகங்களுடன் இணைந்திருக்க வேண்டும். அல்லது சுப கிரகங்களுடைய ராசியில் இருக்கவேண்டும். அதேவேளையில், இரண்டுக்கு உடையவன், லக்ன கேந்திரத்தில் (1, 4, 7, 10-ம் வீடு களில்) அமையப்பெற்றிருக்க வேண்டும். இப்படியான அமைப்பு ஜாதகத்தின் தென்பட் டால், அவன் முற்பிறவியில் செய்த நல்ல நடை முறைகள் தக்க தருணத்தில் வெளிப்பட்டு, மகிழ்ச்சியான வாழ்வை உணரவைக்கும்.  தனது குடும்பத்தை விளங்கவைப்பான்.

அவனது செல்வாக்கில் பலரும் நன்மையை உணர்வார்கள். அவனது தெளி வான சொல்வளம் பலரது வாழ்வையும் வளமாக்கும். இவை அத்தனையும் அவன் செய்த பூர்வ புண்ணியத்தின் (முற்பிறவி யின் கர்மவினை) வெளிப்பாடு. மாறுபட்ட பலபேரது சந்திப்புகளில் ஏற்பட்ட விபரீதங்கள் அவனைப் பாதிக்காமல், திடமான கர்மவினை அவனது வாழ்க்கையை இன்பமயமாக மாற்றிவிட்டது என்று விளக்கம் அளிக்கிறது ஜோதிடம் (குடும்பராசேரதிபேஸஸெளம்யே...).

இரண்டுக்கு உடையவன் முழுத் திறமை பெற்றவன் என்பதை ‘உச்சம்’ சுட்டிக்காட்டும். பந்து வீட்டில் இருப்பவன் என்றால், தனது திறமை குன்றாமல் பாதுகாப்பவன் என்று பொருள். பந்துவின் ஒத்துழைப்பில், தனது திறமையைக் குன்றாமல் வைத்துக்கொள்ளும் பாதுகாப்பு கிடைக்கிறது. சுப கிரகங்களின் இணைப்பு அவனது இயல்பை நடைமுறைப்படுத்த உதவுகிறது.

சுபகிரகங்களின் ராசியில் அமர்வது, அந்த கிரகத்தின் ஒத்துழைப்பில் அவனது செயலுக்கு ஊக்கம் அளிக்கிறது. அதே வேளையில் அவன் இருக்கும்  இடம் (இரண்டாம் பாவாதிபதி), லக்ன கேந்திரத்தில் வருவது (1,4,7,10-ல் வீடுகளில்), பிறந்தவனின் (லக்னாதி பதி) தொடர்பை உறுதி செய்கிறது. இரண்டுக்கு உடையவன் மற்ற கிரகங்களின் ஒத்துழைப்பில், பிறந்தவனின் கர்மவினையை (நல்ல செயல்பாடுகளை) உணரவைக்கிறது என்று விளக்கம் அளிக்கிறது ஜோதிடம்.

பிறந்த வேளையில் இருக்கும் கிரகங்கள் அவனது சிந்தனையைத் திருப்பிவிட்டு, அவனது கர்மவினையின் பயனை உணர வைக்கின்றன. கண்ணுக்குப் புலப்படாத கர்மவினை, பிறந்த வேளையில் தென்பட்ட கிரகங்களின் வாயிலாக வெளிப்பட்டு, அவனது அனுபவத்துக்கு எட்டவைக்கிறது. கருவறையில் அவன் உருவாகும் தருணத்திலேயே கர்ம வினை அவனோடு இணைந்து பாங்காக உருப்பெற்றுவிடும். ஆயுள், செயல்பாடு, பொருளாதாரத்தின் பங்கு, அறிவு, மறைவு ஆகிய ஐந்தும் அவன் கருவில் இருக்கும் தறுவாயில் தீர்மானமாகிவிடும். கர்மவினையின் பலன் ஆனபடியால், வேறு எதையும் எதிர்பார்த்து தீர்மானிக்கும் அவசியம் அதற்கு இல்லை. அவனது செயல்பாடு அவனது அனுபவத்துக்கு வந்துவிடுகிறது. மாற்றாக வருவதை அது ஏற்காது. ஒளிந்திருக்கும் கர்மவினையை வெளிக்கொண்டு வருவதுதான் கிரகங்களின் வேலை. அது, காலத்துடன் இணைந்து அவனை உணரவைக்கிறது. கிரகங்கள் எதுவும் தங்கள் விருப்பப்படி பலனை ஏற்கவைக்காது.

கர்மவினையின் பலனை தன்னில் இணைத் துக்கொண்டு, அவனிடம் சேர்க்கும் பணியை நடைமுறைப்படுத்தும். எந்த கிரகமும் தன்னிச்சையாக மகிழ்ச்சியில் ஆழ்த்தவோ, துயரத்தில் வீழ்த்தவோ செய்யாது. அந்த வேளையை கர்மவினைதான் தீர்மானிக்கும். அவனிடம் கொண்டு சேர்க்க கிரகங்களைப் பயன்படுத்தும். கிரகங்கள் காலத்துடன் இணைந்திருப்பதால் தக்க தருணம் (காலம்) வரும்போது அவனை உணரவைக்கிறது (ஆயு:கர்ம ச வித்தம் ச வித்யாநிதனமேவ ச பஞ்ச எதானிச ஸ்ருஜ்யந்தை கர்பஸ்தனஸ்யைவ தேஹின:).

ஆயுள், வாழ்க்கையின் அளவை வரையறுக் கும். செயல்பாடு, அவனது இன்பதுன்பங்களை வரையறுக்கும். பொருளாதாரத்தின் பங்கு, இன்ப- துன்பங்களை ஏற்று செயல்பட ஒத்துழைக்கும். அறிவு, இன்ப-துன்பங்களின் தரத்தை இறுதிசெய்யும். மறைவு, கர்ம வினை நடைமுறைப்படுத்தப்பட்டதை இறுதியாக்கும். அவன் கருவறையில் இருந்து வெளிவரும் வேளையை நிர்ணயிப்பது, அவனது கர்மவினையே. கிரகங்கள் வாயிலாக கர்மவினையின் தரத்தை அறியும் முறையை முனிவர்கள் வெளியிட்டார்கள். காலத்துக்கு ஜோதிடம் என்று பெயர். அவர்கள் காலவிதான சாஸ்திரம் (காலத்தைச் சுட்டிக்காட்டும்) என்று ஜோதிடத்தை அறிமுகம் செய்தார்கள். அந்த ஜோதிடத்தை கையாண்டு அவனது கர்ம வினையை தெரிந்துகொள்ள வழிவகுத்தார்கள்.

காலப்போக்கில், கர்மவினையை தெரிந்து கொள்ளும் முறை ஜோதிடமாக உருவெடுத்தது. காலத்தைப் பற்றிய அறிவு இல்லாம லேயே, கர்மவினையை வெளிப்படுத்த முற்பட்டார்கள். விளைவு, பலன் சொல்வதில் எதிரிடையான விளைவுகளை ஏற்படுத்தி, அதன் தரத்தை தாழ்த்தும் அளவுக்கு, சில பிரபலங்களின் செயல்பாடு சென்றுவிட்டது. சூரிய சந்திரர்களுடன் இணைந்து கிரகங்களின் வலம் வருதல் ஜோதிடம் (அஸ்ட்ரானமி). பலன் சொல்வது, முனிவர்கள் தோற்றுவித்த கணிப்பு. அதை  மட்டும் வைத்து பலன் சொல்வது, விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். இரு பங்கு (அஸ்ட்ரானமி, அஸ்ட்ராலஜி) இணைந்தது ஜோதிடம்.  அதில் ஒன்றின் அறிவு மட்டுமே முழுமையாகாது.

கிரகங்களின் சுழற்சி, அதன் விளைவு அதாவது சுற்றுச் சூழலின் மாறுபாடு, இயற்கை சீற்றங்கள்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்னோர்கள் சொன்னார்கள்

உயிரினங்களில் தென்படும் அபாயகரமான மாறுபாடுகள், உலக இயக்கத்துக்கு ஒத்துழைக்கும் செயல்பாடுகள் அத்தனையும் ஜோதிடத்தில் (அஸ்ட்ரானமி) அடங்கும். தனிமனிதனின் சுக-துக்கங்கள் ஜோதிடத்தில் (அஸ்ட்ராலஜி) அடங்கும். இரண்டுக்கும் இருக்கும் வேற்றுமை அல்லது ஒற்றுமையைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாமல், ஜோதிட சேவை வழி மக்கள் நலனை அறிமுகம் செய்வது அதர்மமாகும்.

அஸ்ட்ரானமி, அஸ்ட்ராலஜி இரண்டை யும் உள்வாங்கிக்  கொண்டு சேவையில் இறங்க வேண்டும். போதுமான ஞானம் இல்லாத வர்களிடமும் ஜோதிடம் மாட்டிக் கொண்டு, தனது தரத்தை இழந்து தவிக்கிறது. அதை தூய்மைப்படுத்தி, மக்களுக்குப் பயன்படும் வகையில் ஜோதிட பிரபலங்கள் செயல்பட வேண்டும். அதற்குப் பெயர்தான் சேவை. வரும் தலைமுறையினர், அதை நடைமுறைப் படுத்தும் தகுதி பெற்று திகழ்கிறார்கள் என்பது ஆறுதலான விஷயம்.

ஜாதகம் என்பது காலத்தின் அட்டவணை; அவன் பிறந்த வேளையில், கிரகங்களின் அமைப்பு. பிறந்தவனுக்கும் ஜாதகத்துக்கும் சம்பந்தம் இல்லை. அந்த வேளையில் உலகில் இருக்கும் அத்தனைப் பொருளுடனும் சம்பந்தம் இருக்கும். அவனுக்கும் மட்டும் சம்பந்தம் என்பது, சரியான விளக்கம் இல்லை.

உதாரணமாக 2018, ஜனவரி- 6-ம் தேதி காலை 8:30 மணிக்கு ஒருவன் பிறப்பதை, இன்றைக்கே ஜாதகத்தில் கணித்து விடலாம். பிறக்காதவனுக்கும் ஜாதகம் கணிக்கலாம். பிறந்து இறந்த வனுக்கும் ஜாதகம் கணிக்கலாம். ஆகையால், பிறந்தவனுக்கு மட்டும் ஜாதகத்துடன் தொடர்பு உண்டு என்பது உண்மையல்ல. பிறந்தவனுக்கும் அந்த வேளை பொருந்தும் என்று சொல்லலாம். அவனது செயல்பாடுகளை மட்டும் அந்த வேளை சொல்லும் என்பது உண்மையல்ல. அவனது கர்மவினை, அவன் பிறந்தவேளையில் வெளிப்பட, அவன் பிறந்தவேளையின் காலத்தின் அட்டவணை, அவனது கர்மவினையை தெரிந்துகொள்ள உதவுகிறது என்று விளக்குகிறது ஜோதிடம்.

கர்மவினையை அடையாளம் காட்டும் பல கருவிகளில் காலத்தின் அட்டவணையும் (ஜாதகம்) ஒன்று. அஸ்ட்ரானமி- ஜாதகம்; அஸ்ட்ராலஜி-பலன்சொல்லும் முறை. அஸ்ட்ரானமி பலனைச் சொல்லாது. அது ஜோதிடம். அதை வைத்துக்கொண்டு, அவனது கர்மவினையை அடையாளம் காண்பது அஸ்ட்ராலஜி (பலன் சொல்லும் பகுதி). ஜோதிடம் (அஸ்ட்ரானமி) தெரியாமல் அஸ்ட்ராலஜி-பலன் சொல்லும் பகுதி இறுதி பெறாது.

ஒரே வேளையில் பிறந்த இருவரது ஜாதகம் (காலத்தின் அட்டவணை) ஒன்றாக இருக்கும். ஆனால், பலன் சொல்லும் பகுதி-அஸ்ட்ராலஜி மாறுபட்டு இருக்கும். அதற்குக் காரணம், அவர்களின் கர்மவினையின் மாறுபாடு. பலன் சொல்லும் பகுதி வேறு; ஜாதகம் வேறு.

இரண்டாவது வீடு பொருளாதாரத்தை மட்டும் சொல்லாது. குடும்பம், குடும்ப அங்கத் தினர், கிடைக்கும் பொருள்களின் அளவு, சொல் வளம், வலது கண் பற்றிய தகவல்கள், பொருள்கள் பற்றிய பலதரப்பட்ட அறிவு, இன்றைய நாளில் நாம் செயல்படும் தொழில் கல்வி, உலக சுகத்தை எட்டும் கல்வியறிவு, தனது மறைவை சுட்டிக்காட்டும் தகுதி ஆகிய அத்தனையையும் இரண்டாவது வீட்டின் ஆராய்ச்சியில் தெரிந்துகொள்ள முடியும்.

ஆராயும் முறையும், அதன் எல்லையை எட்டும் திறமையும் ஜோதிட பிரபலங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். பராசரர், ஜைமினி, வராஹமிஹிரர், மந்திரேச்வரர் போன்றோரது நூல்களைக் கற்றறிந்தால், ஆராயும் திறன் எளிதில் வந்துவிடும். முனிவர்களின் சிந்தனை வளத்தில் உருவாகிய ‘பலன் தெரிந்துகொள்ளும் முறையை’ அவர்களது நூல்கள் வாயிலாக... ஆசிரியர்களை அணுகி, குருமுகமாகக் கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

குருமுகமாகக் கற்கும் முறையை குலக்கல்வி என்று ஒதுக்கி அதை தலைதூக்காமல் செய்துவிட்டோம். அதன் மொழிபெயர்ப்புகள், தகுதியை எட்டும் அளவுக்குச் சிறப்பு பெற வில்லை. இனப் பகை, மொழிப் பகை ஆகியவற்றை மறந்து கல்விக்கு முதலிடம் அளிக்க வேண்டும். குருகுல வாசம் மேற்கொண்டு, ஈடுபாட்டுடன் கற்றுணர்ந்தால், அந்த ஜோதிடத்தால் மனித இனத்தை செம்மையாக்க இயலும். சாஸ்திரங்கள் அத்தனையும் மனித குல முன்னேற்றத்தை இலக்காக வைத்து பயன்படுபவை; பண்டைய நாளில் பயன்பட்டன என்பதும் நாம் அறிந்த உண்மை.

இரண்டுக்கு உடையவன் உச்சத்தில் இருக்க வேண்டும். அதியுச்சம் (உச்சத்தின் எல்லை) உச்சம், மூலத்ரிகோணம், ஸ்வக்ஷேத்திரம், பந்துக்ஷேத்ரம், சத்ருக்ஷேத்திரம், அதிநீசம் (நீசத்தின் எல்லை), நீச ராசி - இப்படி ராசியில் கிரகங்களின் தகுதி வரிசைகள் நிர்ணயிக்கப் பட்டுள்ளன. அதில் உச்சத்தில் இருப்பது அந்த கிரகத்தின் சிறப்புத் தகுதி.

மேஷத்தில் சூரியன் உச்சன், ரிஷபத்தில் சந்திரன், கடகத்தில் குரு, கன்னியில் புதன், துலாத்தில் சனி, மகரத்தில் செவ்வாய், மீனத்தில் சுக்கிரன். அதனதன் 7-வது வீடு நீச ராசியாக இருக்கும். துலாம், விருச்சிகம், மகரம், மீனம், மேஷம், கடகம், கன்னி ஆகியன, ஏழு கிரகங்களுக்கு நீச ராசியாக மாறிவிடும். கிரகங் களின் திறமையின் அளவுகோலாகவே ஏழு விதமான தகுதிகளைச் சுட்டிக்காட்டுகிறது, ஜோதிடம். தகுதியின் பாகுபாடு, அவனது கர்மவினையை ஒட்டி அமைந்திருக்கும். இப்படியும் சொல்லலாம். அதன் தகுதியை ஆராய்ந்து, அதற்கு உகந்த கர்மவினையை தெரிந்துகொள்ளலாம்.

இரண்டுக்கு உடையவன் உச்சம், மூலத்ரிகோணம் அல்லது 11-வது வீட்டில் இருக்க வேண்டும். லக்னத்துக்கு உடையவன் பலம் பெற்று விளங்கவேண்டும். இரண்டுக்கு உடையவன் அமர்ந்த ராசிநாதன், லக்ன கேந்திரத்தில் (1, 4, 7, 10 வீடுகளில்) இருக்க வேண்டும். இந்த அமைப்பு ஜாதகத்தில் தென்பட்டால், அவன் மகத்தான தலைவனாக சிறப்புபெற்று விளங்குவான் என்கிறது ஜோதிடம் (ஸ்வோச்சத்ரிகோணாயசுதே குடும்பராசே: பதெள...).

தனது சொல்வளம் செயல்திறன், அணுகு முறை, அடக்கம், ஒழுக்கம், நீக்குபோக்கு, அன்பு, அரவணைப்பு- அத்தனை குணங்களுடனும், மக்கள் ஆதரவைப் பெற்று தலைவனாகத் திகழ்வான் என்கிறது ஜோதிடம்.

அவனது முற்பிறவி செயல்பாடு (கர்மவினை), கருவறையிலிருந்து வெளிவரும் வேளையை இறுதி செய்தது. அவன் பிறந்த வேளையில் தென்பட்ட கால அட்டவனை (ஜாதகம்), அவனது கர்மவினையின் வரைபடமாக மாறியது. இரண்டுக்கு உடையவன் உச்சம் பெற்று அல்லது மூலத்ரிகோணத்தில் அமர்ந்து, 11-ம் வீட்டில் தங்கும் நிலையில், லக்னத்துக்கு உடையவன் பலம்பெற்றிருக்கும் தறுவாயில், இரண்டுக்கு உடையவன் நின்ற ராசிநாதன் லக்னகேந்திரத்தில் வீற்றிருக்கும் கால அட்டவணைக்குக் காத்திருந்து, கர்ம வினையானது கருவறையில் இருந்து அவனை வெளியேற வைத்தது என்றும் சொல்லலாம்.

முற்பிறவிகளில் செய்த செயல்பாடுகள் (நல்லது, கெட்டது எதுவானாலும்), தனது பலனை ஏற்கவைக்க ஏதுவாக, அதற்கு உகந்த கால அட்டவணையை எதிர்பார்த்து, கர்ம வினையானது கருவறையில் இருந்து அவனை வெளியேறவைக்கிறது. அதை, பிறந்த வேளையின் பெருமையாகச் சொல்கிறோம்.

உண்மையில் காலத்தின் அட்டவணைதான் அவனது கர்மவினையை வெளிக்கொண்டு வந்து உணரவைக்கிறது. கால அட்டவணை அஸ்ட்ரானமி. அதன் பலனை அதாவது கர்ம வினையின் செயல்பாட்டை விளக்குவது அஸ்ட்ராலஜி. முனிவர்களின் சிந்தனையில் விளைந்த தகவல்கள்.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism