Published:Updated:

காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதி! கண்ணகி கோயில் பக்தர்களுக்குக் கட்டுப்பாடு

காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதி! கண்ணகி கோயில் பக்தர்களுக்குக் கட்டுப்பாடு
காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதி! கண்ணகி கோயில் பக்தர்களுக்குக் கட்டுப்பாடு

கண்ணகி கோவில் திருவிழா : முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்.

பிரசித்திபெற்ற கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவுத் திருவிழா வரும் 30ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று உத்தமபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழகக் கேரள எல்லையில் இருக்கும் கண்ணகி கோவிலுக்கு இரண்டு பாதை வழியாகச் செல்ல முடியும். ஒன்று கேரளாவின் குமுளி வழியாக 14 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஜீப் செல்லக்கூடிய பாதை. மற்றொன்று, பளியன்குடி வழியாக 6.6 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நடைபாதை. இந்த இரண்டு பாதையைப் பயன்படுத்தி திருவிழா நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து கோயிலுக்கு வருவார்கள். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் உடன், உத்தமபாளையம் கோட்டாட்சியர் ஆலோசனை நடத்தினார்.

பக்தர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு, மருத்துவ வசதி போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டு செல்லவும், 1 மற்றும் 2லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 5 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் அதற்கு மேல் கொண்டு செல்லலாம். காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மாலை 5 மணிக்குத் திரும்பிவிட வேண்டும். கண்ணகி கோயில் தமிழக எல்லைக்குள் இருந்தாலும், கேரளா கண்ணகி கோயிலுக்கு உரிமை கொண்டாடி வருகிறது. இதனால் கேரள வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து பக்தர்களைச் சிரமப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு