தொடர்கள்
Published:Updated:

ராசிபலன்

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

அக்டோபர் 11 முதல் 24 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

ராசிபலன்

திர்ஷ்டத்தை அதிகம் நம்பாதவர்களே!

ராசிநாதன் செவ்வாய் 9-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், தன்னம் பிக்கை அதிகமாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவர். பண வரவு உண்டு. புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டாகும். 16-ம் தேதி வரை புதன் 6-ம் வீட்டில் மறைவதால் இருமல், சுளுக்கு, உறவினர் பகை வந்து நீங்கும்.

17-ம் தேதி முதல் உங்களின் பூர்வ புண்ணியாதிபதி சூரியன் நீச்சமாகி ராசிக்கு 7-ல் அமர்வதால், வாழ்க்கைத் துணைக்கு மருத்துவச் செலவுகள் வந்து செல்லும். பிள்ளைகளுடன் மனத்தாங்கல் வரக்கூடும். பூர்வீக சொத்துப் பிரச்னையை இப்போது தவிர்ப்பது நல்லது. அஷ்டமத்துச் சனியும், சகட குருவும் தொடர்வதால், முன்யோசனையுடன் செயல்படுங்கள். வியாபாரத்தில் சில நுணுக் கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில், இடர்களைச் சமாளிக்க வேண்டி வரும். கலைத் துறையினரே! யதார்த்தமான உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

உதவும் குணத்தால் பாராட்டப்படும் காலம் இது.

ராசிபலன்

ஷ்ட, நஷ்டங்களைக் கண்டு கலங்காதவர்களே!

குரு 5-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், மகிழ்ச்சி தங்கும். திடீர் பண வரவு உண்டு. பிள்ளைகளால் மதிப்பு கூடும். உங்களின் சுகாதிபதி சூரியன் 17-ம் தேதி முதல் 6-ல் மறைவதால், முன்கோபத்தைக் குறையுங்கள். பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். அரசு காரியங்கள் தாமதமாகும். 13-ம் தேதி வரை ராசிநாதன் சுக்கிரனும் 6-ல் மறைந்திருப்பதால், தம்பதிக்கு இடையே கருத்து மோதல்கள், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் உண்டு.

ஆனால் 14-ம் தேதி முதல் ராசிநாதன் சுக்ரன் 7-ல் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்க இருப்பதால், உற்சாகம் கூடும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவார்கள். கண்டகச் சனி தொடர்வதால், எதிர்ப்புகள் வந்து செல்லும். 8-ம் வீட்டில் செவ்வாய் மறைந்து இருப்பதால், சகோதர வகையிலும், சொத்து சார்ந்தும் சங்கடங்கள் வந்து செல்லும்.  வியாபாரத்தில், புது விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். கலைத் துறையினரே! படைப்புகளை வெளியிடுவதில் சிரமம் ஏற்படும்.

போராடி இலக்கை எட்டும் தருணம் இது. 

ராசிபலன்

மூக அவலங்களை தட்டிக் கேட்பவர்களே!

ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், நினைத்தது நிறைவேறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புது வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். தூரத்து சொந்தங்கள் தேடி வருவர். 6-ம் வீட்டில் சனி அமர்ந்திருப்பதால், பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். கடன் பிரச்னைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். 17-ம் தேதி முதல் சூரியன் 5-ம் வீட்டில் நுழைவதால், பிள்ளைகளால் டென்ஷன் இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

14-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ல் மறைவதால், தொண்டை வலி, சளித் தொந்தரவு வந்து போகும். கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். 4-ம் வீட்டில் குருவும், 7-ல் செவ்வாயும் தொடர்வதால், சில நேரங்களில் சிலரை நினைத்து வருத்தப்படுவீர்கள். 3-ல் ராகு தொடர்வதால், வியாபாரத்தில் பற்று வரவு உயரும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். மேலதிகாரியுடன் மோதல்கள் வரக்கூடும். கலைத் துறையினரே! கிசுகிசுத் தொந்தரவுகள் அதிகமாகும்.

புதிய அணுகுமுறையால் முன்னேறும் நேரம் இது. 

ராசிபலன்

னப்பற்றும், மொழிப்பற்றும் உள்ளவர்களே!

உங்களின் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வி.ஐ.பி.களும் அறிமுகமாவார்கள். புது பொறுப்புகள் தேடி வரும். புதிதாக சிலர் சொத்து வாங்குவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும்.

ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால், யாரையும் நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் முக்கிய விஷயங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்று வருவது நல்லது. சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். 3-ல் குரு மறைந்திருப்பதால், சில காரியங்கள் தடைப்பட்டு முடியும். சின்னச் சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் கூடும். பங்குதாரர்களுடன் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் இல்லாமல் போகும். சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். கலைத் துறையினரே! கலைநயம் மிகுந்த உங்களின் படைப்புகள் பட்டிதொட்டியெங்கும் பேசப்படும்.

எதிர்நீச்சல் போட வேண்டிய வேளை இது.

ராசிபலன்

ண்பாட்டையும், கலாசாரத்தையும் மீறாதவர்களே!

17-ம் தேதி முதல் உங்களின் ராசிநாதன் சூரியன் நீச்சமானாலும் 3-ம் வீட்டில் அமர்வதால், எவ்வளவு பெரிய பிரச்னைகள் என்றாலும் அவற்றை முறியடித்து, வெற்றி பெறுவீர்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாகும். குரு 2-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், வர வேண்டிய தொகை கைக்கு வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால், அசதி, சோர்வு, கை, கால் மரத்துப் போகுதல், வேலைச்சுமை வந்து போகும். 5-ல் செவ்வாய் தொடர்வதால், வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வரக்கூடும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து போகும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். கலைத் துறையினரே! விழாக்களில் கௌரவிக்கப்படுவீர்கள்.

விவேகமாக செயல்பட்டு முன்னேறும் வேளை இது. 

ராசிபலன்

மைதியாக இருந்தே சாதிப்பவர்களே!

சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், மனதில் உற்சாகம் பிறக்கும். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். உற்சாகம் அதிகரிக்கும். இதமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். சனி 3-ல் நிற்பதால், இளைய சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வழக்கு சாதகமாகும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

ஜன்ம குரு தொடர்வதால், மஞ்சள் காமாலை, காய்ச்சல் வந்து நீங்கும். 17-ம் தேதி முதல் சூரியன் உங்கள் ராசியை விட்டு விலகுவதால், உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் இருந்து வந்த இழுபறி நிலை மாறும். ஆனால், ராசிக்கு 2-ம் வீட்டில் சூரியன் அமர்வதால் கண் வலி, பல் வலி வரக்கூடும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிக மானாலும் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். கலைத் துறையினரே! வசதி, வாய்ப்புகள் பெருகும்.

சமயோசித அறிவால் சாதிக்கும் தருணம் இது. 

ராசிபலன்

ளங்கமற்ற மனம் கொண்டவர்களே!

உங்களின் தன-சப்தமாதிபதி செவ்வாய் வலுவாக இருப்பதால், எதிர்பார்த்த வகையில் பணம் வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து வழக்கில் சாதகமாக தீர்ப்பு வரும். வீடு, மனை வாங்குவது விற்பது சுலபமாக முடியும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். கைமாற்றுக் கடனை திருப்பித் தருவீர்கள். புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், திடீர்ப் பயணங்களால் பயன் அடைவீர்கள்.

ராசிக்கு 12-ல் மறைந்திருக்கும் சூரியன் 17-ம் தேதி முதல் ராசிக்குள் நுழைவதால் கண் எரிச்சல், முன்கோபம், வாக்குவாதங்கள், செரிமானக் கோளாறு வந்து போகும். அரசு காரியங்கள் இழுபறியாகி முடியும். ஏழரைச் சனி தொடர்வதால், வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். ராகு லாப வீட்டில் தொடர்வதால், வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். கலைத் துறையினரே! புதிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும்.

 புதிய எண்ணங்கள் மேலோங்கும் நேரம் இது.

ராசிபலன்

ற்றவர்களின் வெற்றிக்காகப் பாடுபடுபவர்களே!

உங்கள் ராசிக்கு சாதகமான நட்சத்திரங்களில் சுக்கிரன் செல்வதால், தைரிய மாக சில பெரிய முடிவுகள் எடுக்கலாம். சிலர் கொஞ்சம் கடன்பட்டு வீடு, மனை வாங்குவீர்கள். வீடு கட்டுவதற்கும் ப்ளான் அப்ரூவலாகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாகும். ஏழரைச் சனி தொடர்வதால், சில நேரங்களில் எதிர் காலத்தை நினைத்து சின்னச் சின்ன பயம் வரும். விலை உயர்ந்த பொருட்கள் காணாமல் போகக்கூடும்.

குரு வலுவாக இருப்பதால், ஓரளவு பொருளாதார வசதிகள் பெருகும். வெளி வட்டாரத்தில் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். ராசிக்கு 2-ல் செவ்வாய் நிற்பதால், கோபப்படுவீர்கள். பேச்சில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். பங்குதாரர்களுடன் கவனமாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பர். சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்னைகள் வெடிக் கும். கலைத் துறையினரே! வேற்று மொழி வாய்ப்புகளால் புகழ் அடைவீர்கள்.


சுபச் செலவுகள் அதிகரிக்கும் காலம் இது.

ராசிபலன்

பிரச்னை வந்தாலும் கலங்காதவர்களே!

உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் சூரியன் செல்வதால், மதிப்பு கூடும். புது வேலை கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். தந்தையின் ஆரோக்கியம் சீராகும். தந்தைவழி சொத்தைப் பெறுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், ஓரளவு பணப்புழக்கம் இருக்கும் என்றாலும் பழைய கடனை நினைத்து அவ்வப்போது குழம்புவீர்கள். ராசிநாதன் குரு சாதகமாக இல்லாததால், திடீர் திடீரென்று ஒருவித மனோபயம் வந்து போகும்.

கேது சாதகமாக இருப்பதால், வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயம் அடைவீர்கள். அயல்நாட்டில் இருப்பவர்களால் உதவிகள் கிடைக்கும். வி.ஐ.பி-கள் நண்பர்களாவார்கள். பூர்வபுண்ணியாதிபதி செவ்வாய் ராசிக்குள் நிற்பதால், பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் விஸ்வரூபமெடுக்கும். சகோதரர்களுடன் அவ்வப்போது மனவருத்தம் வந்து போகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். கலைத் துறையினரே! உங்களின் கடுமையான உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

பழைய பிரச்னைகள் தீரும் வேளை இது.

ராசிபலன்

நெருக்கடிகளைத் தனியாகச் சமாளிப்பவர்களே!

உங்கள் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வழக்குகள் சாதகமாகும். எதிர்ப்புகள் அடங்கும். நண்பர்கள் வியந்து பாராட்டும்படி பல காரியங்கள் செய்வீர்கள். மூத்த சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும்.

17-ம் தேதி முதல் சூரியன் 10-ம் வீட்டில் நுழைவதால், தந்தையாரின் உடல் நலம் சீராகும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால்,  எதிலும் ஒருவித வெறுப்பு உணர்வு, பேச்சால் பிரச்னைகள், பணப்பற்றாக்குறை வந்து நீங்கும். குரு சாதகமாக இருப்பதால், வியாபாரத்தில் போட்டியாளர்கள் உங்களின் வேகத்தைக் கண்டு வியப்பார்கள். வாடிக்கையாளர்களிடம் நற்பெயரை சம்பாதிப்பீர்கள். உத்தியோகத் தில், உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். கலைத் துறையினரே! மூத்த கலைஞர்களின் ஆலோசனை கிடைக்கும்.

செல்வாக்கு கூடும் காலம் இது.

ராசிபலன்

ற்றவர்களைப் புரிந்துகொண்டு செயல்படுபவர்களே!

உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்கிரன் செல்வதால், நீங்கள் நினைத்தது நிறைவேறும். எதிர்பார்த்த தொகை கிடைக்கும். சகோதரிக்கும் திருமணம் கூடி வரும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை அமையும். ராசிநாதன் சனி பகவான் வலுவாக இருப்பதால், தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். தள்ளிப் போன அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

பூர்வ புண்ணியாதிபதியான புதன் சாதகமாக இருப்பதால், தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். தந்தை வழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். செவ்வாயும் சாதகமாக இருப்பதால், உங்களின் அன்பை சகோதரர்கள் புரிந்துகொள்வர். குரு 8-ம் வீட்டில் தொடர்வதால், அவ்வப்போது மனக்குழப்பங்கள், தடுமாற்றங்கள் வந்து போகும். வீடு மாற வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள். சிலர் வாஸ்துப்படி வீட்டைச் சரி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். கலைத் துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும்.

விருப்பங்கள் நிறைவேறும் காலம் இது.

ராசிபலன்

ங்கடங்களைக் கண்டு அஞ்சாதவர்களே!

உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். சாதனையாளர்களின் நட்பு கிடைக்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். ராசிநாதன் குருவும், நிழல் கிரகமான ராகுவும் வலுவாக இருப்பதால், திடீர் யோகம் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகமாகும்.

சூரியன் சாதகமாக இல்லாததால், காரியத் தடங்கல், முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழத்தல், வீண் விரயங்கள் வந்து செல்லும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், உறவினர், நண்பர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். பங்குதாரர் பணிந்து வருவார். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். சக ஊழியர்களும் நட்புறவாடுவார்கள். கலைத் துறையினரே! மக்கள் மத்தியில் புகழ், கௌரவம் உயரும்.

பிரபலங்களால் பாராட்டப்படும் நேரம் இது.