தொடர்கள்
Published:Updated:

‘நல்லது நடக்கும் எனும் நம்பிக்கை பிறந்தது!’

‘நல்லது நடக்கும் எனும் நம்பிக்கை பிறந்தது!’
பிரீமியம் ஸ்டோரி
News
‘நல்லது நடக்கும் எனும் நம்பிக்கை பிறந்தது!’

சக்தி விகடனின் திருவிளக்கு பூஜையில் வாசகி பூரிப்பு!

‘நல்லது நடக்கும் எனும் நம்பிக்கை பிறந்தது!’

க்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து  வாசகர் களின் நலனுக்காக நடத்திய திருவிளக்கு பூஜை, கடந்த 20.9.16 அன்று மாலை, சென்னை   குன்றத்தூர்- பல்லாவரம் சாலையில், மேத்தா நகரில் உள்ள ஸ்ரீஅபயாம்பிகை சமேத ஸ்ரீமேதாலீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்றது.

‘‘இன்று பஞ்சமியுடன் கூடிய செவ்வாய்க் கிழமை. அம்பிகைக்கு உகந்த நாளாக அமைந்திருக் கிறது. இந்நாளில் அம்பாளை பூஜிப்பதால், 16 வகையான செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.  இந்த நாளிலேயே சக்தி விகடனின் திருவிளக்குபூஜை அமைந்தது என்றால் அது, அம்பாள் அனுக்கிரஹம்தான்’’ என்று முன்னோட்டத்துடன் துவங்கி திருவிளக்கு பூஜை மிக அற்புதமாக நடத்திவைத்தார், கோயிலின் குருக்கள் ரகு வைரவ்.

பூஜைக்கு முன்னதாக, கோயில் அறங்காவலர் குழுத் தலைவரான வா. பத்மநாபன், மேதாலீஸ்வரர் கோயிலின் மகிமையை வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து, பிரபல பக்தி இசைப் பாடகர் சாஸ்தா தாஸன், பக்திப் பாடல்களைப் பாட, வெகு சிறப்பாகத் துவங்கியது திருவிளக்கு பூஜை.

பூஜையில் கலந்துகொண்ட, குன்றத்தூர் வாசகி சுதாகண்ணன், “நான் சக்திவிகடனின் நீண்டநாள் வாசகி. உலக மக்களின் நன்மைக்காக சக்தி விகடன் நடத்திய திருவிளக்கு பூஜையில் குடும்பத்தோடு கலந்துகொண்டது மனசுக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியையான திருவண் ணாமலை வாசகி தேவகி, ‘‘என் மகள்களுக்குத் திருமணம் நடைபெற வேண்டும் என்பதே, என்னுடைய நெடுநாள் பிரார்த்தனை. சக்தி விகடன் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டு பிரார்த்திக்கச் சொன்னார்கள், தோழிகள் சிலர். வெவ்வேறு  காரணங்களால் என்னால் கலந்து கொள்ள முடியாமல் போனது. இன்றுதான் எனக்கு அந்த பாக்கியம் கிட்டியுள்ளது. இனி, என் குடும்பத்தில் இருக்கும் அனைத்து பிரச்னைகளும் நீங்கி, மகிழ்ச்சி பிறக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

பூஜையின் நிறைவில் பக்தர்கள் அனைவருக் கும், ஆலய மகளிர் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நல்லதை நினைத்து செய்யப் படும் கூட்டுப்பிரார்த்தனைக்கு சக்தி அதிகம். அபயாம்பிகை சமேத மேதாலீஸ்வரர் திருவருளால் அனைவருக்கும் நன்மைகள் உண்டாகும்.

  - அ.பா. சரவண குமார், படங்கள்: அ.சரண் குமார்