Published:Updated:

முன்னோர்கள் சொன்னார்கள்!

முன்னோர்கள் சொன்னார்கள்!
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்!

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம், சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

முன்னோர்கள் சொன்னார்கள்!

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம், சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
முன்னோர்கள் சொன்னார்கள்!
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்!
முன்னோர்கள் சொன்னார்கள்!

ந்தாம் வீடு மழலையை நிர்ணயிக்கும். அதற்கு புத்திர ஸ்தானம் என்று பெயர். அங்கு அந்த வீட்டுக்கு உடையவன் அல்லது குரு இருக்க வேண்டும். 5-ம் வீட்டில் இருக்கும் அதன் அதிபதி அல்லது அங்கிருக்கும் குரு மீது சுப கிரகங்களின் பார்வை படவேண்டும். அல்லது அவர்கள் இணைந்திருக்க வேண்டும். இப்படியான அமைப்பு ஜாதகத்தில் தென்பட்டால், மழலை பாக்கியம் உண்டு என்கிறது ஜோதிடம் (புத்ரஸ்தானே கதீசேவா குரெளவாசுபவீக்ஷீதே...).

லக்னத்துக்கு உடையவன் 5-ல் இருக்க வேண்டும். குருவும் ஐந்துக்கு உடையவனும் பலம் பெற்று விளங்க வேண்டும். இந்த அமைப்பிலும் தங்கு தடையின்றி மழலைச் செல்வம் இருக்கும் என்கிறது ஜோதிடம் (லக்னேசே புத்திரபாவஸ்தே புத்ரே சே பலஸம்யுதே பரிபூர்ண பலேஜீவே...). 

ஐந்துக்கு உடையவன் குருவாக இருந்து பலம்பெற்று, சுப கிரகங்களுடன் இணைந்து இருந்தாலும் மழலைச் செல்வம் மகிழ்ச்சி அளிக்கும் (புத்ரஸ்தானாதிபே ஜீவே பரிபூர்ணபலான்விதே. சுபேனஸஹிதேவாபி...).

இரண்டுக்கு உடையவன், குரு பார்வை பட்டு 5-ல் அமர்ந்தாலும் மழலைச் செல்வம் உண்டு  என்கிறது ஜோதிடம் (புத்திரஸ்தானகதே வித்தநாதேபூர்ணபலான்விதே த்ருஷ்டே தேவேந்திரகுருணா...).

லக்னத்துக்கு உடையவனும் ஐந்துக்கு உடையவனும் சுப கிரகங்களுடன் இணைந்து, கேந்திரத்தில் (1, 4, 7, 10 வீடுகளில்) இருக்கவேண்டும். அத்துடன் இரண்டுக்கு உடையவன் பலம் பொருந்தி இருந்தாலும் குழந்தை உண்டு என்கிறது ஜோதிடம் (லக்ன புத்ராதிபௌ கேந்த்ரே சுபக்ரஹ ஸமன்வீதெள குடும்பேசே பலாட்யேது...)

லக்னத்துக்கு உடையவன் ஏழில் இருக்க வேண்டும். அல்லது 9-க்கு உடையவன் 7-ல் இருக்கவேண்டும். 2-க்கு உடையவன் லக்னத்தில் இருக்கவேண்டும். இந்த அமைப்பும் குழந்தையை ஈட்டித் தரும் என்று ஜோதிடம் சொல்லும் (லக்னேசே தாரபாவஸ்தே பாக்யேசே தாரஸ்ம்யுதே த்விதீயேசே விலக்னஸ்தே...).

7-க்கு உடையவனின் அம்சகாதிபதிக்கு... 9-க்கு உடையவன், 2-க்கு உடையவன், லக்னத்துக்கு உடையவன் ஆகிய மூவரின் பார்வை அம்சகாதிபதிக்கு இருந்தால் நிச்சயமாக குழந்தை பாக்கியம் உண்டு என்கிறது ஜோதிடம் (காரேச க்ரஹஸம்யுக்தே நவாம்சபவனாதிபம் பாக்யவித்த விலக்னோசெ:...).

லக்னத்துக்கு உடையவன், 2-க்கு உடையவன், 5-க்கு உடையவன், 7-க்கு உடையவன், காரக கிரகமான குரு, சுப கிரகங்களின் இணைப்பு அல்லது பார்வை ஆகியன மழலைச் செல்வத்தை ஈட்டித் தருவதில் பங்கு பெறுகின்றன. அத்துடன், 7-க்கு உடையவனின் அம்சகாதிபதியும் மழலைச் செல்வத்தை ஈட்டித் தர ஒத்துழைக்கிறான் என்கிறது ஜோதிடம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்னோர்கள் சொன்னார்கள்!

இரண்டு குடும்ப ஸ்தானம். கணவன்- மனைவியை குடும்பமாக உயர்த்துவது, அவர்கள் ஈன்றெடுக்கும் மழலை. குழந்தையைப் பெறுபவன் லக்னாதிபதி. ஐந்தாம் வீடு முற்பிறவி; கர்மவினையை வரையறுக்கும். முற்பிறவி செயல்பாட்டை (கர்மவினை) ‘தெய்வம்’ என்று சொல்லும் ஜோதிடம் (பூர்வ ஜன்மார்ஜிதம் கர்ம தெய்வ மித்யபிதீய---------).  இந்த ‘தெய்வம்’ - என்ற சொல் கடவுளைச் சுட்டிக்காட்டும் சொல் அல்ல. ‘தெய்வம் என்பது கண்ணுக்குப் புலப் படாத முன்ஜன்ம செயல்பாடு (அதிருஷ்டம்)’ என்று அமர சிம்மன் கூறுவார் (தெய்வம், திஷ்டம், பாகதேயம் பாக்யம் ஸ்யாத் த்ரிஷு தத்வதி). ‘தெய்வம்’ என்ற சொல்லுக்கு அதிருஷ்டம் என்ற பெயர் உண்டு. அதிருஷ்டம் என்றால் கண்ணுக்குப் புலப்படாத முற்பிறவி செயல்பாடு என்று பெயர். ஐந்துக்கு உடையவன் குழந்தை பெறுவதை ஊர்ஜிதம் செய்கிறான்.

7-க்கு உடையவன் மனைவியை சுட்டிக்காட்டி அவளுக்கு குழந்தையை ஈன்றெடுக்கும் தகுதியைச் சொல்வான். 9-க்கு உடையவன் குழந்தையின் சிறப்பை, செழிப்பை வெளியிடுவான். 9-ம் வீட்டுக்கு அதிருஷ்டம், பாக்யம் என்ற பெயர்கள் உண்டு. இந்த இரு சொற்களும் முற்பிறவி கர்மவினையை அடையாளம் காட்டுகின்றன.

லக்னத்துக்கு உடையவன்- கணவன், 7-க்கு உடையவன் மனைவி, 2-க்கு உடையவன் குடும்பம் (குழந்தையோடு இணைப்பு), 5-க்கு உடையவன் குழந்தை, 9-க்கு உடையவன் சேமித்த செயல்பாட்டின் வெளிப்பாடான குழந்தையின் சிறப்பு - இப்படி லக்னம், 2, 5, 7, 9, 7-க்கு உடைய வனின் அம்சகநாதன் ஆகியோருக்கு குழந்தையை ஈட்டித்தருவதில் பங்கு இருப்பதை உறுதி செய்கிறது ஜோதிடம். அதன் சிறப்பை வலியுறுத்த சுப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை ஒத்துழைக்கிறது.
ஒளிந்திருக்கும் (கண்ணுக்குப் புலப்படாமல்) குழந்தை பிறக்கும் தனிக் கர்மவினையை கிரகங்கள் வாயிலாகச் சுட்டிக்காட்டும் திறமை பிரபலங் களுக்கு இருக்கவேண்டும். இவற்றை ஒதுக்கிவிட்டு, சுய சிந்தனையில் விஞ்ஞான விளக்கத்தில் இறங்கி, தவறான வழி காட்டியாக பிரபலங்கள் மாறக் கூடாது. விஞ்ஞான விளக்கத்தில் அளித்த பொருத்தங்கள் பலவும் செயலற்று, விபரீத பலனை ஏற்கவேண்டி வந்ததை உலகம் அறியும்.

அன்றைய நாளில், எண்ணிக்கையில் அதிகமான குழந்தைகளைப் பெற்று, இல்லாதவர்களின் ஏக்கத்தைத் தணிக்க ‘தத்து’ அளித்து பெருமைப்பட்டார்கள். அன்றைக்கு இரு தாரங்களைப் பெற்றவர்கள், இரண்டிலும் குழந்தைகளை அதிகமாகப் பெற்று குடும்பச் செழிப்பில் தனி இன்பத்தைச் சுவைத்தார்கள். தற்போது குழந்தைப்பேறு இல்லாத தம்பதியர் ஏராளம். உடல் வளம், பொருளாதாரம், பதவி, பெருமை, புகழ், செல்வாக்கு அத்தனையும் நிரம்பிய தம்பதிகளில் குழந்தையின்மை ஏக்கமாக உருவெடுத்திருக்கிறது. அதன் வெளிப்பாடு- ‘குழந்தையின்மை’ மருத்துவம் ஈசல் போல் வளர்ந்திருக்கிறது. மருத்துவம் அதன் ஆராய்ச்சிப் பிரிவை விரிவாக்கி வளர்ந்தோங்கியிருக்கிறது. சில ஜோதிட பிரபலங்களின் அலட்சியம் விவாகரத்தை விரிவாக்கியது. தனது விரிவாக்கத்தில் குழந்தை யின்மையையும் சேர்த்துக்கொண்டு விட்டது.

ஆணுக்கு பிந்துவின் திறமை முழுமையாக இருக்கிறது. பெண்ணுக்கு உயிரோட்டம் உள்ள சினைமுட்டைகள் வலுவாக இருக்கின்றன. சந்திப்பும் முறையாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், குழந்தை உருவாவதில்லை. நவீன மருத்துவம் அந்தச் சவாலை சமாளிக்க முடியாமல், செயற்கை முறையில் குழந்தையைப் பெறப் பரிந்துரைக்கிறது. அதிலும் தோல்வி கண்டவர்களை, தத்து எடுத்துக்கொள்ளச் சொல்லி சிபாரிசு செய்கிறது. தத்து எடுத்தவர்களில் பலர் அந்தக் குழந்தைகளை செல்லப் பிராணி களைப் போல் வளர்க்கிறார்களே தவிர பந்தமோ, பாசமோ உருவாகாமல் போய்விடுகிறது.

மருத்துவ தம்பதியராக இருக்கும் சிலருக்கும்கூட குழந்தைச் செல்வத்தைப் பெற இயலவில்லை. மனித இனத்தின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சீர்திருத்தவாதிகள் அதை ஆதரவோடு எதிர்கொண்டாலும் மனித இனம்தான் நாட்டின் செல்வம்; ஆதாரமும் கூட. ஜோதிட பிரபலங்களின் சேவை முறையாக இருந்தால், குழந்தையின்மை என்ற குறையைத் தவிர்க்க இயலும்.

ஈன்றெடுப்பது என்பது இயற்கையின் வரம். எல்லா ஜீவராசிகளும் இனப்பெருக்கத்தில் சிறந்து விளங்குகின்றன. மனிதனில் மட்டும் குறைந்திருப்பது பெருமையல்ல. ஜோதிட பிரபலங்கள் நினைத்தால், இந்தக் குறையை ஓரளவு பூர்த்தி செய்ய இயலும்.

7, 5, 9 இந்த வீட்டின் அதிபர்கள், சந்தான காரக கிரகமான குரு, இவர்களை ஆராய்ந்து குழந்தைச் செல்வத்தை நிர்ணயிக்க வேண்டும். ஐந்துக்கு உடையவனையும், காரக கிரகமான புதனையும் சேர்த்து சிந்தனை வளத்தை ஆராய வேண்டும். ஐந்துக்கு உடையவன், 9-க்கு உடையவன், குரு - இவர்களை வைத்து தகப்பனின் தரத்தை ஆராய வேண்டும். ஐந்துக்கு ஐந்து ஒன்பது. 9-க்கு 9 ஐந்து (பாவாத்பாவம்). 1, 5, 9 ஆகியவை ஒன்றுக்கு ஒன்று த்ரிகோணம். இந்த மூன்றில் பிறந்தவர்கள், பிறந்தவுடன் ஒரே ‘தசையை’ சந்திப்பார்கள்.

அச்வினி, மகம், மூலம், பரணி, பூரம், பூராடம், கிருத்திகை உத்திரம், உத்திராடம் - இந்த நட்சத்திரங்கள் மூன்றிலும் இடம் பெறும். இந்த மூன்றும் ஒரே தசையில் ஆரம்பமாவதால், லக்னத்துக்கு ஒன்றுக்கு ஒப்பாக ஐந்தையும், ஒன்பதையும் ஏற்கச் சொல்கிறது ஜோதிடம் (த்ரிகோணம் லக்னஸமானம்).

நட்சத்திரங்கள் வாயிலாக தசை ஒன்றாக இருப்பதால், கர்மவினை வெளிவர மூன்றும் ஒத்துழைக்கும். கணிதத்திலும், பலனைச் சொல்லும் பகுதியிலும் முழு அறிவு பெற்றவர்கள், ஜோதிட சேவை செய்யத் தகுதியுடையவர்கள். எந்தக் கல்விக்கும் தகுதி,  நிர்ணயம் உண்டு. உயர்க் கல்வியில் தேர்ச்சி பெற்றவனுக்கு, பெற்ற கல்வியில் அறிவு முதிர்ச்சி இருக்கும். புத்தி ஜீவிக்குத்தான் ஜோதிடம் பொருந்தும். ஆனால், சிந்தனை வளம் பெற்றவர்கள் ஜோதிடத்தை நன்றாக அறிந்து இருந்தாலும், பொருத்தம் பார்க்க முன் வருவதில்லை.

9-க்கு உடையவன் (பாக்யாதிபதி), 5-க்கு உடையவன், 7-க்கு உடையவன் - இவர்களது அம்சகாதிபதிகள், பாப கிரகத்துடன் இணைந்தோ அல்லது அசுப கிரக ராசியம்சகத்தில் அமைந்தோ இருந்தால், அவனுக்கு குழந்தை தங்காது என்கிறது ஜோதிடம் (பாக்யபுத்ரகளத்ரேசேஸம் யுக்தநவபாகபா: பாபாம்சகா: பாப யுக்தா:-). 9, 5, 7-ம் வீட்டுக்கு உடையவர்கள் மூவரும், தனது அம்சகத்தின் அதிபதி பாப ராசியில் அமைந்தாலும், அசுப கிரகத்துடன் சேர்ந்தாலும் குழந்தை தங்காது என்று சொல்வதில் இருந்து, பலனை இறுதி செய்வதற்குமுன், கிரகங்களின் அம்சகாதிபதியை ஆராயவேண்டும் என்கிறது ஜோதிடம்.

 ஐந்தின் பாவாத்பாவம் லக்னம், 9-ன் பாவாத்பாவம் லக்னம். லக்னத்தின் பாவாத்பாவம் லக்னம் இந்த மூன்றின் பாவாத்பாவம் லக்னத்தில் முடிவடைவதால், குழந்தை பிறந்தும் அனுபவத் துக்கு வராமல் அழிவைச் சந்தித்துவிடுகிறது. அத்துடன், 7-க்கு பாவாத்பாவம் 7 என்பதால், மனைவிக்கும் குழந்தை இழப்பின் துயரத்தை உணரவைக்கிறது. பாப கிரகத்தின் இணைப்பு இந்த மூவரின் அம்சகநாதனுக்கு இருந்தாலும் அல்லது பாப கிரக ராசியில் அம்சகம் பெற்றாலும் குழந்தையின் இழப்பு இருக்கும் என்கிற விளக்கம், ராசிக் கட்டத்தை மட்டும் கவனித்தால் போதாது, நவாம்சகத்தில் வரும் இடையூறையும் கவனிக்க வேண்டும் என்று சொல்லும் (பலமம்சகர்ஷயோ:).

ஐந்தாம் பாவம் (புத்திர ஸ்தானம்) ஐந்தாம் வீட்டின் அதிபதி, காரக கிரகமான குரு- இவர்களில் எவரேனும் ஒருவர், இரண்டு பாப கிரகங்களுக்கு இடையில் கிடுக்கிப்பிடி போல் மாட்டிக் கொண்டிருந்தால், குழந்தை தங்காது என்கிறது ஜோதிடம் (பாபமத்யேதுயத்பாவே ததீசேபிததாஸ்திதே...).

ஐந்தாம் வீட்டின் இரண்டிலும், பன்னிரண்டிலும் பாப கிரகம் (அசுப கிரகம்) இருந்தால் குழந்தை தங்காது. 4-ம் வீட்டிலும் 6-ம் வீட்டிலும் பாப கிரகம் அமைந்தால், அந்த இருவரது நெருக்கத்தில் ஐந்தாம் பாவம் தனது தகுதியை இழந்துவிடும். ஐந்துக்கு உடையவன் இருக்கும் ராசிக்கு இரு பக்க ராசிகளிலும் பாப கிரகம் வீற்றிருப்பதும் அல்லது அவன் இருக்கும் ராசியில் முன்பின் பாகைகளில் பாப கிரகம் இருப்பதும் குழந்தையை அழித்துவிடும். அதுபோல், சந்தானகாரக கிரகமான குருவின் முன்பின் பாகையில் பாப கிரகங்கள் இருந்தாலும் அல்லது குரு வீற்றிருக்கும் ராசியின் முன்பின் ராசிகளில் பாப கிரகங்கள் இருந்தாலும் குழந்தை இழப்பு நிகழும். அதாவது லக்னம், ஐந்தாம் பாவம், குரு (காரக கிரகம்) இதில் ஒன்று தகுதியை இழந்தாலும் குழந்தை தங்காது என்று பொருள்.

நமது கலாசாரத்தில் குழந்தையின் பிறப்பு, தகப்பன் குலத்துக்கும் தாய் குலத்துக்கும் மகிழ்ச்சியை அளிக்கும். குழந்தை ஆணானால் மாமனாகவும், பெண்ணானால் அத்தையாகவும் மாறி, பின்னால் வரும் இரண்டு பரம்பரைக்கு இறுக்கத்தை ஏற்படுத்தி, கூடிவாழும் சிறப்பை ஏற்படுத்துகிறது. திருமணம் நிறைவை எட்டுவது குழந்தையின் பிறப்பில்தான். குழந்தை பிறப்பை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம். மருத்துவ மனையை அணுகி மருத்துவரின் சிபாரிசில் குழந்தையை தத்து எடுப்பதும், வேற்று பிந்துவின் சேர்க்கையில் குழந்தையை ஏற்படுத்துவதும் பண்டைய நாளில் அறியாத ஒன்று. ரத்த பந்தமில்லாததால் பந்தபாசங்கள் இறுக்கத்தை எட்டுவதில்லை.

குழந்தையின்மைக்குப் பரிகாரமாக தத்து ஏற்கச் சொல்கிறது. தத்து எடுத்தபிறகு, அவர்களுக்கு அதிர்ஷ்டவசத்தில் குழந்தை பிறந்துவிட்டால், அவனுக்குத்தான் முதலிடம் இருக்கும். வேற்றுக் கலாசாரத்தின் தாக்கத்தில் மாறுபட்ட நடைமுறை களை ஏற்று நம்மை சமாதானப்படுத்திக் கொள்கிறோம்.

புதுக் கலாசாரத்தை ஏற்ற தம்பதிகளில் சிலர், தவறான சந்திப்பிலும் தவறான சிந்தனையிலும் குழந்தை பெறும் தகுதியை இழக்கிறார்கள். தவறான இணையைச் சேர்த்துவைக்கும் சில  ஜோதிட பிரபலங்களும் குழந்தையின்மைக்கு ஊக்கமளிக்கிறார்கள்.

மருத்துவத் துறை குழந்தையின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் அவ்விருவருக்கும் தகுதியை வரவழைக்கும் முயற்சியில் முழு வெற்றி பெற இயலவில்லை. செயற்கை முறையில் செயல்பட்டு, அதனால் கிடைத்த வெற்றியை பெருமையாக நினைக்கிறார்கள். ஜோதிடம், நல்லமுறையில் சேவையை நடைமுறைப்படுத்தினால் குழந்தையின்மை மறையும்.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism