Published:Updated:

கயிலை... காலடி... காஞ்சி! - 15

கயிலை... காலடி... காஞ்சி! - 15
பிரீமியம் ஸ்டோரி
கயிலை... காலடி... காஞ்சி! - 15

கலியின் துன்பம் நீக்க வந்த காஞ்சி மஹான்!நிவேதிதா

கயிலை... காலடி... காஞ்சி! - 15

கலியின் துன்பம் நீக்க வந்த காஞ்சி மஹான்!நிவேதிதா

Published:Updated:
கயிலை... காலடி... காஞ்சி! - 15
பிரீமியம் ஸ்டோரி
கயிலை... காலடி... காஞ்சி! - 15

வே(ற்)ற்று ஆகி விண் ஆகி நின்றாய், போற்றி!

மீளாமே ஆள் என்னைக் கொண்டாய், போற்றி!

ஊற்று ஆகி உள்ளே ஒளித்தாய், போற்றி!

ஓவாத சத்தத்து ஒலியே, போற்றி!

ஆற்று ஆகி அங்கே அமர்ந்தாய், போற்றி!

ஆறு அங்கம் நால்வேதம் ஆனாய், போற்றி!

காற்று ஆகி எங்கும் கலந்தாய், போற்றி!

கயிலை மலையானே, போற்றி போற்றி!


-அப்பர் அருளிய போற்றித் திருத்தாண்டகம்

கயிலை... காலடி... காஞ்சி! - 15

யிலைநாயகனை தரிசித்து வழிபட நாவுக்கரச பெருமான் விரும்பினார். அருகில் இருக்கும் ஊருக்குச் செல்வதற்கே சரியான போக்குவரத்து வசதி இல்லாத காலம். அந்தக் காலத்தில் கயிலைக்குச் செல்வது நாவுக்கரசர் போன்ற முதியவர்களுக்கு முடிகின்ற காரியமா என்ன?
ஆனாலும், கயிலைநாயகனை எப்படியும் தரிசித்துவிடவேண்டும் என்று பக்தி மேலிட விரும்பிய நாவுக்கரசர் தம்மைப் பலவாறாக வருத்திக்கொண்டு கயிலைக்கு யாத்திரை மேற்கொண்டார். அவரின் நிலை கண்டு இரங்கிய சிவபெருமான், நாவுக்கரச பெருமானுக்கு திருவையாறு திருத்தலத்திலேயே கயிலைக் காட்சி வழங்கி அருளினார்.

அன்று நாவுக்கரசருக்கு திருவையாறில் கயிலைக் காட்சி வழங்கிய சிவபெருமான், கலியில் மக்கள் படும் துன்பங்களைப் போக்க திருவுள்ளம் கொண்டு காலடியில் சங்கரராகவும், மண்ணுலக மக்களின் துன்பங்கள் நீங்க காஞ்சி தேனம்பாக்கத்தில் மாதவம் இயற்றிய, மஹா ஸ்வாமிகளாகவும் அவதரித்தார்.

நம்முடைய நன்மைக்காக மாதவம் இயற்றிய மஹா பெரியவா, தேனம்பாக்கம் திருத்தலத்தில் நிகழ்த்தி வரும் எண்ணற்ற அருளாடல்களில் ஒன்றுதான், ஸ்ரீராகவேந்திரரின் பக்தையான பத்மா மாமியை தேனம்பாக்கத்துக்கு வந்து தரிசிக்கும்படி உத்தரவு பிறப்பித்த அருளாடல்.

எதற்காக பத்மா மாமியை தேனம்பாக்கத்துக்கு வரச்சொல்லி உத்தரவிடவேண்டும்?

அந்தக் காரணம் பற்றி, மஹா பெரியவாளுக்கு பல வருடம் கைங்கர்யம் செய்து வந்த ராமசந்திரன் என்கிற திருவிடைமருதூர் சந்திரா என்பவரிடம் கேட்கும்படி சைலேஷ் கூறவே, நாம் அவரிடம் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கயிலை... காலடி... காஞ்சி! - 15

‘‘பெங்களூரைச் சேர்ந்த கோடேஷாங்கறவர் பெரிய தொழிலதிபர். மஹா பெரியவா பற்றி கேள்விப்பட்டவர், ஒருமுறை மஹா பெரியவாளை தரிசிக்க தேனம்பாக்கத்துக்கு வந்தார். மஹா பெரியவாளை தரிசிச்சதுமே அவரோட மனசுல  அடிக்கடி தேனம்பாக்கத்துக்கு வந்து மஹா பெரியவாளை தரிசிக்கவேண்டும்ங்கற எண்ணம் ஏற்பட்டுடுச்சு.

நினைச்சப்பல்லாம் தேனம்பாக்கத்துக்கு வந்து மஹா பெரியவாளை தரிசிப்பார். மஹா பெரியவா ஸித்தியானப்பறம்கூட, அடிக்கடி இங்கே வந்து போவதை வழக்கமா வச்சிருந்தார். அதுமட்டுமல்ல, வருஷந்தோறும் நடக்கும் மஹா பெரியவா ஆராதனை நாளன்னைக்கு அவர்தான் தேவையான காய்கறி, பழங்களை அனுப்பிண்டி ருந்தார்.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவர் காலமாயிட்டார். அவருக்கப்புறம் அவர் குடும்பத்துல் இருக்கறவா தொடர்பையே நிறுத்திண்டா. அதுக்கப்புறம் ஒரு வருஷம் காய்கறி, பழங்களுக்கான செலவை நாங்களே ஏத்துக்கிட் டோம்.

போன வருஷம்தான் சென்னையைச் சேர்ந்த பத்மா மாமிங்கறவரோட கனவுல மஹா பெரியவா தரிசனம் தந்து, அவரை இங்கே வரவழைச்சிருக்கா. பத்மா மாமி மட்டுமில்லாம அவாளோட இன்னும் சிலரும் வந்திருந்தா. தன்னை இங்கே வரச்சொன்னதுக்கு என்ன காரணமா இருக்கும்னு அவா நெனைச்சிண்டிருந்தா. அதுக்குக் கொஞ்சநாள்லயே மஹா பெரியவாளோட ஆராதனை விழா நடக்க இருந்துச்சி. நான் யதேச்சையா பெங்களூர் கோடேஷா பத்தியும் அவர் ஆராதனைக்கு காய்கறி, பழங்கள் அனுப்பிச்சிண்டிருந்ததைப் பத்தி அவாகிட்ட சொன்னேன்.

கயிலை... காலடி... காஞ்சி! - 15உடனே பத்மா மாமிக்கு தன்னை தேனம்பாக்கத் துக்கு வரச்சொல்லி மஹா பெரியவா உத்தர விட்டதுக்கான காரணம் புரிஞ்சிடுச்சு. அந்த வருஷத்துலேர்ந்தே மஹா பெரியவா ஆராதனை நாளுக்குத் தேவையான காய்கறி, பழங்களை அவாளே கொண்டு தர்றதா ஒத்துண்டா’’ என்று சிலிர்ப்புடன் கூறியவர் தொடர்ந்து,

‘‘இங்கே வேத கோஷம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்ங்கறது மஹா பெரியவா விருப்பம். மஹா பெரியவா விருப்பப்படியே  பெரியவா கிருபையாலே ரிக், யஜூர், சாம வேத பாடசாலையும் ஆகம பாடசாலையும் நடந்து வர்றது. இப்ப இந்த வருஷத்துக்கான சேர்க்கை நடக்கப்போறது. தகுதியும் பிரியமும் உள்ளவங்க தொடர்பு கொள்ளலாம்’’ என்ற தகவலையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

மஹா பெரியவாளின் தவ வலிமையும், அவருடைய கிருபையினால் நித்தம் அங்கே ஒலித்துக்கொண்டிருக்கும் வேத சப்தங்களும் அந்த திவ்விய திருத்தலத்தை இன்னும் இன்னும் புனிதப்படுத்தி, நாளும் அங்கே வரும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்கும் நியாயமான கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றித் தரும் வரப்பிரசாத க்ஷேத்திரமாக விளங்குகிறது.

பத்மா மாமியை  வரவழைத்து அருள்புரிந்ததுடன் அவருடன் சென்ற இன்னும் பல பெண்மணி களுக்கும் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறி இருக்கிறது. அவற்றைப் பார்ப்பதற்கு முன்பாக 1986-ம் ஆண்டில் மஹா பெரியவா நிகழ்த்திய ஓர் அருளாடலைப் பார்ப்போம்...

மஹா பெரியவா தட்சிணாமூர்த்தி ஸ்வரூபம். இருந்த இடத்தில் இருந்தபடி அனைத்தும் அறிந்தவர். எழுத்தாளர்கள் என்றாலே மஹா பெரியவாளுக்கு மிகவும் ப்ரீதி. அவர்களை முறைப்படி அங்கீகரித்து அனுக்கிரஹிப்பார்கள்.

இலக்கியப் புத்தகம் விலை போகுமா? என்று கேலியாக பேசப்பட்ட நிலையில், மஹா பெரியவா திருவருளால் தனக்கு ஏற்பட்ட ஓர் அற்புத அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் முனைவர் மா.கி.இரமணன்.

கயிலை... காலடி... காஞ்சி! - 15

‘‘காவியங்கள் எல்லாம் காவியநாயகர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. காவிய நாயகியர்களின் முக்கியத்துவம் பற்றி மக்களுக்குப் புரியவைக்கவேண்டும் என்ற விருப்பத்தினால், ‘காவிய நாயகியர்’ என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதி, அதை வெளியிடுவதற்காக ஒரு பதிப்பகத்தை அணுகினேன்.

முதலில் புத்தகம் போடுவதாகச் சொன்னவர்கள் போடாமலேயே விட்டுவிட்டார்கள். ஒரு வருடத்துக்குப் பிறகு அவர்களைத் தொடர்பு கொண்டபோதுதான், அவர்களுக்கு அந்த நூலை புத்தகமாக வெளியிடுவதில் விருப்பம் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன்.

பிறகு நானே என் மனைவியின் நகைகளை எல்லாம் அடகு வைத்து, ‘காவிய நாயகிய’ரை புத்தகமாகக் கொண்டு வந்தேன். 1986-ல் வந்த அந்த நூலுக்கு தவத்திரு குன்றக்குடி அடிகளார் அணிந்துரை எழுதி இருந்தார். ஓவியர் ஜி.கே.மூர்த்தி அம்பாளின் மூல விக்கிரஹத்தையும், உற்ஸவ விக்கிரஹத்தையும் அட்டைப்படமாக வரைந்து தந்திருந்தார்.

புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்பாக காஞ்சி மஹா ஸ்வாமிகளை தரிசித்து அவருடைய அருளாசி களைப் பெற விரும்பினேன். ஒருநாள் நான் என் குடும்பத்தினருடன் திருப்பதிக்குச் சென்று திரும்பும்போது காஞ்சிபுரத்துக்குச் சென்று மஹா ஸ்வாமிகளை தரிசிக்க விரும்பினேன். திருப்பதியில் இருந்து புறப்பட்ட நாங்கள் அதிகாலை 5 மணியளவில் தேனம்பாக்கத்தை அடைந்தோம்.

மஹா ஸ்வாமிகளின் விஸ்வரூப தரிசனத்துக்காக ஏராளமான பக்தர்கள் காத்துக்கொண்டிருந்தனர். எல்லோர் கைகளிலும் விலையுயர்ந்த பழங்கள் இன்னும் பல காணிக்கைகள் இருந்தன. அவர்கள் அளவுக்கு என்னால் கொண்டுசெல்ல முடியவில்லை. ஒருமுழம் பூ மட்டும் வாங்கிக்கொண்டு சென்ற நான், மஹா ஸ்வாமிகள் அமர்ந்திருந்த மேனாவுக்கு அருகில் சென்று, நான் கொண்டு சென்றிருந்த புத்தகத்தையும், பூவையும் அங்கிருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு ஓரமாகப் போய் நின்றுகொண்டேன்.

அத்தனை பக்தர்களுக்கு மத்தியில் என்னால் மஹா ஸ்வாமிகளுக்கு அருகில் செல்லமுடியுமா என்பதே சந்தேகமாக இருந்தது. தூரத்தில் இருந்தபடியே மேனாவைப் பார்த்துக்கொண்டிருந்த என்னுடைய பார்வையில், மஹா ஸ்வாமிகள் விளக்கு வெளிச்சத்தில் ஒரு லென்ஸின் உதவியுடன் காவிய நாயகியர் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

ஒரு பக்கத்தில் பார்வையை செலுத்தியவர் அந்தப் பக்கத்திலேயே சற்றுநேரம் தன்னுடைய பார்வையை நிலைக்கவிட்டார். நான் என்ன தவறு நடந்துவிட்டதோ என்ற குழப்பத்துடன் தவித்துக்கொண்டிருந்தேன். சில நிமிடங்களில் மேனாவுக்கு அருகில் இருந்த ஒருவர் என்னுடைய புத்தகத்தை உயர்த்திப் பிடித்தபடி, ‘‘இந்த புஸ்தகத்தை எழுதியவாளை பெரியவா கூப்பிடறா’’ என்று சத்தமாக அழைத்தார்.

நான் மஹா பெரியவா இருந்த மேனாவுக்கு அருகில் போய் கைகளைக் கூப்பியபடி பணிவுடன் நின்றேன். என்னைக் கனிவு ததும்ப நோக்கிய பெரியவா, புத்தகத்தின் அட்டையில் இருந்த அம்பிகையின் படத்தைக் காட்டி, ‘‘இந்த பொஸ்தகத்தோட அட்டைல போட்டுருக்கற அம்பா ளோட பேர் நோக்குத் தெரியுமா?’’ என்று மென்மையான குரலில் கேட்டார்.

எனக்குத் தெரிந்தால்தானே நான் சொல்வதற்கு? மௌனமாகவே நின்றேன். சில நொடிகளுக்குப் பிறகு அவர் தம்முடைய பார்வையை நிலைநிறுத்திய பக்கத்தை என் பக்கமாகத் திருப்பி, ‘‘இந்த எடத்துல ஒரு விஷயம் எழுதி இருக்கியே, இப்படி எழுதணும்னு உனக்கு எப்படி தோணுச்சு?’’ என்று கேட்டார்.

அந்த இடத்தில் நான் எழுதி இருந்தது இதுதான்...

-திருவருள் தொடரும்