Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

Published:Updated:
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

பிரஜாபதி தேவனுக்கு 33 பெண் குழந்தைகள். 27 நட்சத்திரங்களுடன் கிருத்திகை 6-ஐயும் சேர்த்தால் 33 பேர் வருவார்கள். அவர்கள் அனைவரும் சந்திரனை விரும்பியதால், அவர்கள் விருப்பப்படி, அனைவரையும் சந்திரனுக்கு அளித்தான் பிரஜாபதி. ஆனால் சந்திரன், ரோஹிணியைத் தவிர, மற்றவர்களிடம் போதிய அன்பு செலுத்தவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
மகள்கள் அனைவரும் பிரஜாபதியிடம் முறையிட்டனர். சந்திரன் பிடிவாதமாக இருந்ததால், க்ஷயரோகத்துக்கு ஆளாகும்படி சபித்தார் பிரஜாபதி. அதுமட்டுமா? அந்தப் பிணி என்றைக்கும் அகலாமல் இருக்க, வளர்ந்தும் தேய்ந்துமாக இருக்கச் செய்தார் எனும் தகவல் வேதத்தில் உண்டு (பிரஜாபதே: த்ரய: ஸ்திரிம்சத்...). அளவு கடந்த உடலுறவு, க்ஷயரோகத்தைத் தரும் என்கிறது ஆயுர்வேதம். நட்சத்திரங்களுடன் சந்திரனின் ஒட்டுதலை அதாவது வானவியல் தத்துவத்தை, கதை வடிவமாக விளக்குகிறது வேதம்.

சந்திரன், அழகுக்கு இலக்கணம் வகுத்தவன், காந்தம் போல் பிறரை ஈர்க்கிற கந்தர்வன்; நட்சத்திரங்கள்- அப்சரஸ்கள்! சந்திரனின் அழகில், நட்சத்திரங்கள் ஒன்றிப் போயின என சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்குமான தொடர்பைச் சொல்கிறது வேதம் (சந்திரமா கந்தர்வ: தஸ்ய நக்ஷத்ராணி அப்ஸரஸ:). இரவு இருள் அகல, எண்ணிக்கையில் அதிகமான நட்சத்திரங்கள் இருந்தாலும் நிலாச் சாப்பாட்டுக்குச் சந்திரனே உதவுகிறான்.

மாமனுக்குப் பாடம் புகட்ட, நடுநிசியில் ரோஹிணியில் தோன்றினான் ஸ்ரீகண்ணன். ரோஹிணி எனும் சொல், பசுமாட்டைக் குறிக்கும். கோபாலனாகவும் கோபிகா ரமணனாகவும் மாமனுக்கு முற்றுப்புள்ளி வைத்தவனாகவும் விளங்கினான். ரோஹிணி நட்சத்திரம், மாமனுக்கு ஆகாது என்கிற சொல்வழக்கு உண்டு. 'உன் சகோதரியின் எட்டாவது பிள்ளை, மாமனுக்கு முடிவு கட்டுவான்’ எனும் அசரீரிக்கு தலைவணங்கித் தோன்றியவன். எட்டாவது பிறக்க அஷ்டமியோ; கம்சனை அழிக்க ரோஹிணியோ காரணமல்ல. பலனை வைத்துக் காரணம் தேடும், பாமர மனம். ஆகவே, சான்றில்லாத சொல்வழக்கு இது!

எல்லா வகையிலும் உயர்வை எட்டுவதற்கு, ரோஹிணியில் வேள்வியைத் துவக்கச் சொல்கிறது வேதம் (யோரோஹிண் யாமக்னிமாதத்தெ). சில நட்சத்திரங்களில் தென்படும் குறையை அகற்ற, பிறந்தவுடன் பரிகாரம் சொல்கிறது தர்மசாஸ்திரம். அதில், ரோஹிணியும் ஒன்று. 'ரோஹிணி நட்சத்திர ஜனன சாந்தி’ எனும் தலைப்பில், பரிகாரத்தை விளக்கியும் உள்ளது. நட்சத்திரத்தில் தென்படும் தோஷத்துக்கு, பிறந்த சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் செயல்படும் தகுதி இருக்கும். பிறகு செயலிழந்து விடும்.

ஆயில்யம், மூலம், கேட்டை போன்ற நட்சத்திரங்களின் குறைகள், திருமணத்துக்குப் பிறகு செயல்படும் எனும் விளக்கம் பொய்யானது என நிரூபிக்கிறது தர்மசாஸ்திரம். அழகான சந்திரனில் அசிங்கமானதொரு கறுப்புப் புள்ளி தென்படும். அந்த வம்சத்தில் தோன்றிய பாண்டவர்கள் - கௌரவர்கள் அனைவ ரையும் ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால், அவர்களில் ஏதேனும் ஒரு கறுப்புப் புள்ளியைப் பார்த்துவிடலாம். சந்திரனின் குறை, அவர்களில் தென்பட்டது என்று சொல்வது, உண்மைக்குப் புறம்பானது.

ஐந்து தாரைகளை உள்ளடக்கியது ரோஹிணி. இது, ரிஷப ராசியில் இடம்பிடித்த நட்சத்திரம். ராசி புருஷனின் முகத்தில் உறைந்தவன். ராசிக்கு அதிபதி சுக்கிரனாக இருந்தாலும் அம்சகத்தில் செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் ஆகியோரது தொடர்பு இருப்பதால், சுறுசுறுப்பு, செல்வச் செழிப்பு, ஆராய்ந்து செயல்படும் திறன் ஆகியவற்றுடன், சில தருணங்களில் மனம் போன போக்கில் செயல்படுகிற தன்மையும் தென்படும்!

சுக்கிரன், சந்திரன் இரண்டு பேரும் சுபக்கிரகங்கள். நீருடன் இணைந்தவை. ரிஷபத்தில் உச்சம் பெற்றிருப்பான் சந்திரன். அம்சகத்தில் நீசனாக மாறமாட்டான். அம்சகத்தில் பலம் இழக்காமல் இருக்கிற தகுதி இவனுக்கு மட்டுமே உண்டு. ராசியில் நீசம் பெற்றாலும், அம்சகத்தில் உச்சம் பெற மாட்டான் என்கிற குறையும் உண்டு. அஸ்தம், திருவோணம் ஆகியவற்றுடன் தொடர் பும் இருக்கிறது. அஸ்தம், ரோஹிணியின் கர்ம நட்சத்திரம். திருவோணம், ஆதான நட்சத்திரம் என விளக்கம் தருகிறது ஜோதிடம்.

புதனும் சனியும் அந்த இரண்டு நட்சத்திரங் களுடன் இணைவதால், அவர்களின் தாக்கம் ரோஹிணியிலும் எதிரொலிக்க வாய்ப்பு உண்டு. ராசி புருஷனின் கர்மத்துக்கும் லாபத்துக்கும் பொறுப்பு ஏற்ற சனி, மூன்றுக்கும் ஆறுக்கும் உடைய புதன், எதிர்ப்புடன் இணைந்த பற்றுதலை வரையறுப்பதால், தரம் தாழ்ந்த வேலையில் செல்வத்தின் சேமிப்பும் இடையூறு கலந்த செயல்பாடும் தென்பட வாய்ப்பை ஏற்படுத்திவிடும்.

இனிமையான பேச்சு, உறுதியான மனம், அழகுத் தோற்றம் ஆகியவை ரோஹிணியில் பிறந்தவரிடம் தென்படும் என்கிறார் வராஹமிஹிரர். பிறருடைய போக்கை அறிந்து கொள்பவர், அறிவாளி, மெலிந்த தேகம் உடையவர், பெண்ணாசையில் இன்பம் காண்பவர் என்கிறது ஜாதக பாரிஜாதம்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

ரோஹிணியின் முதல் பாதத்தில் பிறந்தவர்கள், செல்வச் சீமானாக இருப்பார்கள். 2-வதில் பிறந்தவர்கள், பல துன்பங்களைச் சந்திப்பார்கள். 3-வதில் பிறந்தவர்கள், எதிரிடையான சிந்தனைக்கு ஆளாகி, பயத்தைத் தழுவுவார்கள். 4-வதில் பிறந்தவர்கள், இக்கட்டான சூழலிலும் உண்மையையே பேசுவர் என பாதம் வாரியாக, பலனைச் சொல்கிறது பிரஹத் ஸமஹிதை. பொருட்செல்வம், குழந்தைச் செல்வம், நண்பர்கள், உடன்பிறப்புகள், ஏவலாளிகள் ஆகியவைகள் நிறைந்திருத்தல்.

பகுத்தறியும் திறன் அறிஞனாகும் வல்லமை,  தைரியம், சலனமற்ற மனம், அர்த்தமுள்ள சொல் ஆகிய அனைத்தும் ரோஹிணி நட்சத்திரக்காரரிடம் இருக்க வாய்ப்பு உண்டு என்கிறார் பராசரர்.

ஸ்திரமான நட்சத்திரம் ரோஹிணி. அரசர்களின் பட்டாபிஷேகம், இயற்கைச் சீற்றத்தின் அழிவை அகற்றும் பரிகாரம், பயிர்களையும் மரக்கன்றுகளையும் நட்டு வளர்த்தல், புதுப்புது காலனிகளை உருவாக்குதல், அறநெறிகளைச் செயல்படுத்துதல், விதை விதைத்தல், நிலைத்துத் தழைத்து ஓங்குகிற செயல்கள், சுப காரியங்கள் ஆகிய அனைத்திலும் ரோஹிணியின் இணைப்பு பலன் அளிக்கும் என்கிறார் பராசரர்!

ரோஹிணியின் ஆரம்ப தசை, சந்திரனின் பங்கு. அதன் அளவு பத்து வருடங்கள். அஸ்தம் மற்றும் திருவோணத்துக்கும் அது பொருந்தும். வராஹமிஹிரர், தனது முதல் செய்யுளில், சந்திரனை 'சசபிருத்’ எனக் குறிப்பிடுகிறார். 'சசபிருத்’ என்றால் முயல் வடிவத்தைக் கையில் ஏந்தியிருப்பவன் என்று அர்த்தம்!  'கடபயாதி’ எண்ணிக்கை முறையில், ச ச எனும் இரண்டு எழுத்துக்களுக்கு 5 5 என்கிற எண்ணிக்கை உண்டு. அதைக் கூட்டினால் 10 வரும். அதுவும் அதில் உள்ளடக்கியிருப்பதால், பெயருடன் தசா காலமும் சேர்த்துச் சொல்லப் பட்டதாக அமைந்து விடுகிறது என விளக்கம் தருகிறது ஜோதிடம்.

ராசி சக்கரத்தில், கடகம் ஒதுக்கப்பட்டாலும், அவனுக்குப் பெருமை சேர்ப்பது ரிஷப ராசிதான்! 2-வது பாதத்தில் பிறந்தவரின் சந்திரன், வர்கோத்தமம் பெற்று உயர்ந்து விடுகிறான். உச்சம் எனும் தகுதியும் சேர்ந்து விடுகிறது. இப்படி, ரோஹிணி நட்சத்திரம் சந்திரனுக்கு வலுவூட்டுவதால், மனோபலம் பொருந்தியவனாகத் திகழ வாய்ப்பு அதிகம் என்கிறது ஜோதிடம்.

சுபகாரியத்தைத் துவங்கும் வேளை, சந்திர பலத்துடன் இணைய வேண்டும் எனப் பரிந்துரைக்கிறது சாஸ்திரம் (சந்திரபலம்ததேவ...). மனம் (அதாவது எண்ணக் குவியல்கள்) ஆன்மாவின் இணைப்பில் செயல்படும். சுணக்கமின்றி, பதற்றமின்றிச் செயல்பட்டு வெற்றியை அடைய மனோபலம் வேண்டும். அதனை நிறைவு செய்ய வலுவான சந்திரன் வேண்டும். நல்ல காரியங்களுக்கு வளர்பிறையைத் தேர்ந்தெடுக்க நினைப்பது, அதன் வெளிப்பாடு!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

ரோஹிணியில் பிறந்த கண்ணபிரான், குழந்தைப் பருவத்தில் மக்களின் அன்பும் அரவணைப்பும், பாசமும் நேசமும் கிடைக்க... அவனை குழந்தை தெய்வமாக்கியது. விளையாட்டாகவே வினைகளைத் தீர்த்தான். முதிர்ந்த கண்ணபிரான், மகாபாரதத்தில் சிக்கி, அதை முடிவுக்குக் கொண்டுவர துயரத்தை ஏற்றான். இன்ப - துன்பத்தை ஒருசேர ஏற்பதற்குத் தயங்காத மனம், ரோஹிணியில் தென்பட இடம் உண்டு.

அஸ்தத்துடன் இணைந்த 5-ஆம் வீட்டின் அதிபதி புதனும் திருவோணத்துடன் இணைந்த 9-ஆம் வீட்டின் அதிபதி சனியும், கல்வி மற்றும் உழைப்பைச் சேர்த்துத் தருவதால், ரோஹிணி நட்சத்திரக்காரர்களின் வாழ்க்கை, நிறைவை எட்டிவிடும் என்கிற சிறப்பு, சிலரில் பார்க்கலாம்.  

ராசிச் சக்கரத்தில் ஒன்று முதல் ஏழு வரை உள்ள ராசிகள் (வீடுகள்), ஒரு பகுதி. 8 முதல் 12 வரை இருக்கும் வீடுகள் மறு பகுதி. வாழ்வின் முழுப் பங்கையும் ஒன்று முதல் ஏழு வரை வீடுகள் வரையறுத்துவிடும். அதன் செழிப்பு அல்லது இழப்பு அல்லது குறைகளை 8 முதல் 12 வரை வீடுகள் சுட்டிக்காட்டும். இரண்டுக்கும் 11-க்கும் தொடர்பு உண்டு. இரண்டு - செல்வம், 11 அதன் செழிப்பு. இப்படி, மூன்றுக்கும் எட்டுக்கும், ஒன்பதுக்கும் ஐந்துக்கும், பத்துக்கும் நான்குக்கும், ஆறுக்கும் பன்னிரண்டுக்கும் தொடர்பு உண்டு. ஐந்து, பூர்வ புண்ணியம் இருக்கும் என்பதைத் தெரிவிக்கும். ஒன்பது, அதன் செழிப்பை வரையறுக்கும். அதேபோல், மற்ற ராசிகளும் ஒன்றுக்கொன்று இணைந்தவை!

எந்த பாவத்தை நாம் ஆராய முற்படுகிறோமோ, அதோடு இணைந்த, அதாவது... பலனில் தொடர்பு கொண்ட பாவத்தையும் சேர்த்து ஆராயும்போது, துல்லிய மான பலனை அறியும் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது.

ரோஹிணியில் பிறந்தவரின் செயல்பாடுகளை அறிய, அதற்குத் தொடர்பு உடைய ராசிகள், அதில் இருக்கிற கிரகங்கள், அதன் தரம் ஆகியவற்றையும் சேர்த்து அலசும் போது, முன்னோர் வெளியிட்ட ரோஹிணியின் இயல்புகள், உள்ளங் கை நெல்லிக்கனி போல் திகழும்!

ஜோதிடம், ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ஆறாம் அறிவுக்கு இலக்கான பகுதி அது. முரண்பாடான விளக்கங்களுக்கு விடை காணும் திறன், ஆறாம் அறிவுக்கு இருக்கவேண்டும். விடை காண முற்பட்ட முனிவர்களின் முயற்சி, ஜோதிட நூல்களின் அதிக எண்ணிக்கைக்குக் காரணம்.

பிரஜாபதி என்றால், உயிரினங் களின் தலைவன் என்று அர்த்தம். அவனை வணங்கினால், அனைத்து விருப்பங்களும் ஈடேறும். 'ப்ரம் பிரஜாபதயை நம:’ என்று சொல்லி வணங்குவது சிறப்பு. 'தாதாவிதாதா பரமோத’ எனும் வேதப் பகுதியைச் சொல்லியும் வணங்கலாம். வேதம் தெரியாத அன்பர்கள், 'பிரஜாபதயெ நம: ஹிரண்ய கர்பாய நம: பரமேஷ்டி நே நம: சதுர்முகாய நம: பிரம்மணே நம:’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்களைச் செய்து வழிபடலாம்.

சதுர்வர்க்கபலம் ஞானம்
காலாவஸ்தா: சதுர்யுகா:
சதுர்வர்ணமயோ லோக:
த்வத்த: ஸர்வம் சதுர்முகாத்

எனும் செய்யுளைச் சொல்லி அடிபணிந்தால், எல்லா நன்மைகளும் நம்மை வந்து சேரும்!

- வழிபடுவோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism