Published:Updated:

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ஒருவர் யார் யாருக்கெல்லாம் அபிவாதனம் செய்ய வேண்டும் என வேதம் விதித்துள்ளது ?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- நம்மாழ்வார், கோவை-9

அறிவைப் புகட்டிய குரு, காயத்ரியை உபதேசித்த ஆச்சார்யனான தகப்பன், உணவுக்கு முதன்முதலில் பி¬க்ஷ அளிக்கும் அன்னை ஆகியோருக்கு அபிவாதனம் செய்ய வேண்டும். மேலும், அபிவாதனத்தை ஏற்று அனுக்கிரகம் செய்யும் தகுதி கொண்ட வேத வித்துக்களுக்குச் செய்யலாம்.

அறிஞனும் அல்ல; வேதமும் பயிலவில்லை; சாஸ்திரத்திலும் பரிச்சயம் இல்லை; பிரத்யபிவாதனத்துக்கும் பழக்கமில்லை. ஆனால், வயதில் மட்டும் முதிர்ச்சி அடைந்தவர்கள் அல்லது வயதில் சிறியவர்கள் ஆகியோருக்கு அபிவாதனம் செய்யத் தேவையில்லை. அதேநேரம்... வயதில் சிறியவர், அறிவிலும் வேதத்திலும் சிறந்த வர், ஒழுக்கத்துடன் இருப்பவர், தர்ம காரியங்களுக்கு வழிகாட்டியாக இருப்பவர் ஆகியோருக்கு அபிவாதனம் செய்யலாம். பொதுவாக, இரண்டு பேர் சந்திக்கும்போது, 'நமஸ்காரம்’ என்று சொல்லி, கை கூப்பி வரவேற்கலாம். அது, அபிவாதனம் ஆகாது. பரஸ்பரம் பரிச்சயம் ஆவதற்கு அந்த நமஸ்காரம் என்ற சொல் உதவும்.

கந்தக் கடவுளின் 'ஓம் சரவண பவ’ எனும் மந்திரத்தின் மகிமையை, அதன் அட்சரங்கள் உணர்த்தும் தத்துவங்களை அறிந்து வழிபட ஆசை. விளக்குங்களேன்!

- ந.ஸ்ரீகண்டன், மைசூர்

##~##
பல அட்சரங்கள் இணைந்தது இறை நாமம். நாமத்தின் முழு நிறைவில், அதில் உள்ள ஒவ்வோர் அட்சரத்துக்கும் பங்கு உண்டு. அந்த அட்சரங்களின் முன் பின் வரிசைகளும் தனிப் பங்கு சேர்க்க வல்லவை. திருநாமம் என்பது கடவுளின் வடிவம். திருநாமத்தில் அடங்கிய அட்சரங்கள், அவனுடைய உடலுறுப்புகள். அட்சரங்கள் என்றால், அழிவற்றவை என்று அர்த்தம். இறைவனைச் சுட்டிக் காட்டுவதால், திருநாமத்தில் அடங்கிய அட்சரங்கள் அழிவற்ற தகுதியை அடைந்திருக்கின்றன. 'சரவணபவ’ எனும் ஷடக்ஷரம் (ஆறெழுத்து), ஆறுமுகனைக் குறிக்கும். அந்த ஆறில் ஏதேனும் ஒன்றை அகற்றி, வேறொன்றைச் சேர்த்தால், அது முருகப் பெருமானைச் சுட்டிக் காட்டாது. அது மட்டுமா? எழுத்துக்களின் வரிசையை மாற்றினாலும், அவனைச் சுட்டிக்காட்டாது.
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட ஒளிப் பிழம்பு, சரவணப் பொய்கையில் (அதாவது தண்ணீரில்) சேர்ந்தது. அதிலிருந்து தோன்றியவன் என்பதால், 'சரவணபவன்’ எனும் திருநாமம் உண்டானது. கிருத்திகைக் கன்னிகை கள் ஆறு பேரால்... ஆறு உருவங்களாகத் தோன்றியவன், ஒன்றாக மாறினான். அவனும் ஆறுமுகன்; எழுத்தும் ஆறு. அந்த ஆறு எழுத்துக்களும் அவன் பெருமையைத் தாங்கி நிற்கின்றன. அவன், 'சரவணபவ’ எனும் ஆறெழுத்தாகத் தோன்றுகிறான். 'சரவணபவ’ என்றால், வடிவில்லாத பரம்பொருள் ஒலி வடிவில் விளங்குகிறார் என்று அர்த்தம். நம்மைப் போன்ற மனித வடிவில் முருகக்கடவுளை நினைப்பதைவிட, ஒலி வடிவில் அவனை உச்சரிப்பதே சிறப்பு!

கண்ணால் கடவுளைக் காண இயலாது. அதற்குத் தனிக் கண் தேவை. வேதக் கண்ணுடன் வேதம் ஓதுபவன் கடவுளைப் பார்க்கிறான் என்பதால், அவனுக்கு 'பார்ப்பான்’ எனும் பெயர் வந்தது. தனது சுய ரூபத்தைத் தரிசிக்க, அர்ஜுனனுக்கு மாற்றுக் கண் அளித்தான் ஸ்ரீகண்ணன். கண்ணுக்குப் புலப்படாதவனை ஒலி வடிவமாகப் பார்க்கலாம். அப்படி, ஒலி வடிவாகத் திகழ்பவனை, வேத ஒலி எழுப்பித் தரிசிக்கின்றனர். எனவே, 'சரவணபவ’ எனும் ஒலியில், முருகக்கடவுளை வழிபடுவது சிறப்பு.

ஒளி நிறைந்த பௌர்ணமி தினத்தை 'நிறைந்த நாள்’ என்பது சரி. ஆனால், அமாவாசை தினத்தையும் பரிபூரணம் வாய்ந்த- நிறைந்த நாளாகக் கருதுவதும், அன்று சுப காரியங்கள் செய்யலாம் என்பதும் சரியா?

- ஆர்.உமா, அரூர்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சுப காரியங்களுக்கு அதாவது தர்மசாஸ்திரம் சொல்லும் கடமைகளுக்கு அமாவாசையை சிறந்த நாளாக முஹூர்த்த சாஸ்திரம் சொல்லாது.

பொதுவாக, சிராத்த நாளில் மற்ற அலுவல்களைத் தள்ளி வைக்கச் சொல்கிறது சாஸ்திரம். முன்னோர் நினைவில் இருக்கும் நாளில் மற்ற அலுவல்களைக் கவனித்தால், முன்னோர் நினைவு அறுபட்டுவிடும் என்பதால், தள்ளிப்போடச் சொல்கிறது.

அமாவாசையை நல்ல காரியங்களுக்குத் தவிர்க்கலாம். வளர்ந்தோங்க வேண்டிய சுப காரியங்களுக்கு வளர்பிறை தேவை என்பதை முஹூர்த்த சாஸ்திரம் சுட்டிக்காட்டும். சந்திர பலம் இருப்பது சிறப்பு என்றும் சொல்லும் (தாராபலம் சந்திர பலம் ததேவ). அமாவாசையில் சந்திர பலம் இருக்காது. சந்திரனுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டு. களை இழந்த சந்திரனின் தாக்கம், மனதையும் பாதிக்கும். ஆகவே, செயலில் மனதின் ஈடுபாடும் குறைய வாய்ப்பு உண்டு.

ஜோதிடக் கண்ணோட்டத்தில் அதை நல்ல காரியங்களுக்கு நிறைந்த நாளாக ஏற்க முடியாது. வேறொரு கண்ணோட்டத்தில் நிறைந்த நாளாகப் பார்க்கிறார்கள் சிலர். அது குறிப்பிட்ட சிந்தனையில் எழுந்தது; சாஸ்திரத்துக்கு உடன்பாடு இல்லை.

முன்னோரை ஆராதனம் செய்வோம் அமாவாசையில். அப்போது, அவர்கள் நம் நினைவில் வந்து நம்மை வாழ்த்துகிறார்கள். அவர்களின் அருளோடு அன்று புது செயல்பாட்டைத் துவக்கினால், வெற்றிக்கு வழி வகுக்கும் என்ற நம்பிக்கையில் அந்த நாளை உயர்வாகச் சொல்லியிருக்கலாம். அதெல்லாம் தனி மனிதனின் சிந்தனை. அதை, பொது விதியாக மாற்றக்கூடாது. சாஸ்திரம் சொல்லும் சட்ட திட்டத்தைப் புறக்கணித்து, தனிப்பட்ட சிந்தனைக்கு முதலிடம் அளிப்பது, வெற்றியை ஊர்ஜிதம் செய்யாது. சாஸ்திரத்தை நம்பலாம்.

என் சகோதரி மகளின் திருமணத்துக்கு தேதி குறித்துள்ளனர். அன்று, அப்பாவின் திருவித்யானம் வருகிறது. ஆகவே, மணப் பெண்ணின் மூன்று தாய்மாமன்களும் கல்யாணத்துக்குச் செல்ல முடியாத நிலை. என் சகோதரியின் சம்பந்தி வீட்டார், 'திருவித்யானம் முடிந்து கல்யாணத்துக்கு வாருங்கள்; அல்லது, முகூர்த்தம் முடிந்ததும் திருவித்யானம் செய்யுங்கள்’ என்கிறார்கள். என்ன செய்வது?

- ஆர்.ராகவன், சென்னை-71

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

அப்பாவின் திருவித்யானத்தை முடித்துக்கொண்டு திருமணத்துக்குச் செல்வது சிறப்பு. நமது கடமையை நிறைவேற்றிய பிறகு, பிறருக்காகச் செயல்படுவது தகும். தகப்பனாருக்குச் செய்தாக வேண்டிய கடமை இருக்க... அதைத் தள்ளி வைத்துவிட்டு, மற்றொன்றில் இணைவது பொருந்தாது.

திருமணத்தில் கலந்துகொள்ள நிறைய வேளை இருப்பதால், தந்தைக்கான கடமையை முதலில் நிறைவேற்றுங்கள். திருமணம் அவர்கள் வீட்டு நிகழ்வு; நீங்கள் தாய்மாமன் எனும் முறையில் பங்கு பெறுகிறீர்கள். சந்தர்ப்பவசமாக அங்கு தாங்கள் செல்ல இயலாமல் இருப்பினும், திருமணம் நடந்தேறி விடும். ஆனால், தகப்பனுக்குச் செய்யும் கடமையை உரிய வேளையில் செய்யாமல் இருந்தால், தவறாகிப் போகும். சாஸ்திரப்படி செய்வதே சிறப்பு!

'இறை நாமத்தை இடைவிடாமல் ஜபிக்க வேண்டும்; ஆனால் அதில், 'ஓம் ஹ்ரீம்’ என்ற பீஜாக்ஷரங்கள் இல்லாமல் இருக்கட்டும்’ என்கிறார் ஜோதிடர் ஒருவர். இது சரிதானா?

- பி.கே.ராமசாமி, மதுரை-18

ஒட்டுமொத்தமாக அனைவருமே 'ஓம் ஹ்ரீம்’ எனும் பீஜாக்ஷரங்களைத் தவிர்த்து ஜபிக்க வேண்டும் என்பது தவறு. தகுதி உடையவர்கள் அதைச் சேர்த்து ஜபித்தால், உரிய பலன் இருக்கும்.

பீஜாக்ஷரங்களை அறிமுகம் செய்தது, தந்திர சாஸ்திரம். அது, வேத மந்திரங்களுடன் இணைந்துதான் உயிர் பெறும். அது, வேதம் பயிலாதவர்களுக்கும் பலன் அளிக்கும். பீஜாக்ஷரம் சேராமல், நாம ஜபம் செய்வதை தந்திர சாஸ்திரம் ஏற்கவில்லை.

கணபதியை வழிபடும்போது, தந்திர சாஸ்திர முறையை ஏற்க விரும்பினால், 'கம் கணபதயெ நம:’ என்று சொல்ல வேண்டும். 'கம்’ என்பது பீஜாக்ஷரம். முதலில் 'ஓம்’ காரம்; பிறகு இறைவனின் திருநாமமான 'கணபதயே’ சேர்க்க வேண்டும். பிறகு 'நம:’ என்று சேர்த்துச் சொல்ல வேண்டும். இந்த மூன்றையும் சேர்த்தால், அது மந்திரமாக மாறிவிடும் என்கிறது தந்திர சாஸ்திரம். இது, தந்திர சாஸ்திரம் உருவாக் கிய மந்திரம். இது, வேத மந்திரம் அல்ல. எனினும், பயன் படுத்துவது தவறாகாது. 'இறைவனை நம: என்று வணங்கி, உபாசனை செய்’ என்கிறது வேதம் (தன்மை இத்யுபாசீத). ஆகவே, 'கம்’ என்ற பீஜாக்ஷரம், 'கணபதயே’ என்கிற கடவுளின் திருநாமம், 'நம:’ எனும் நமஸ்காரம் ஆகியவற்றைச் சொல்லி வணங்குவது சிறப்பு. 'ஹ்ரீம்’ என்பது அம்பாளின் பீஜாக்ஷரம். அதனை நாமாவோடு இணைத்துச் சொல்லலாம்.

தந்திர சாஸ்திரத்தில் நுழைந்தால், பீஜாக்ஷரங்களுடன்தான் நாமாவைச் சொல்லவேண்டும். தந்திர சாஸ்திரத்தில் ஈடுபாடு இல்லை; பக்தி வழியே போதும் என நினைத்தால், நாமாவை மட்டும் சொன்னாலே போதும். ஆனால், தேவைக்குத் தக்கபடி பீஜாக்ஷரத்தை ஏற்பதும் இழப்பதுமான இரண்டுங்கெட்டான் நிலை, பலன் தராது!

- பதில்கள் தொடரும்...

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism