
'நந்தி மாதிரி குறுக்கே நிக்காதேனு சொல்றது சரிதான்போல! இந்த நந்தி சாய்ஞ்சுடுச்சா, அல்லது சாய்ச்சபடி பிரதிஷ்டை பண்ணியிருக்காங்களா?'' என்று நண்பர் பரமசாமி கேட்ட இடம், பட்டீஸ்வரம்.
கும்பகோணத்தில் பட்டிமன்றம். 'நானும் வரேன்’ என்று நண்பர் தொற்றிக்கொள்ள, அவரையும் அழைத்துக்கொண்டு போயிருந்தேன். பட்டீஸ்வரம் ஸ்ரீதுர்கையைத் தரிசிக்கச் சென்றபோது, அங்கேயுள்ள நந்தியைப் பார்த்ததும்தான், இப்படி பிரமித்துக் கேட்டார் பரமசாமி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
##~## |
உடனே பரமசாமி, ''அந்தக் கதை எனக்கும் தெரியும்... இந்த பட்டீஸ்வரத்துலயும் நந்தி விலகியிருக்குதே, அது என்ன விஷயம்?'' என்று கேட்டார்.
''சீர்காழியில் அவதரித்து, அம்பிகை தந்த ஞானப்பாலை அருந்திய ஞானசம்பந்தர், இந்தத் தலத்தின் வழியே வந்தார். சிவனார் தந்த முத்துப்பந்தலைக் குடையாகப் பிடித்துக்கொண்டு,
பொற்றாளத்தைக் கையிலே ஏந்தி, சிவிகையில் (பல்லக்கு) ஞானசம்பந்தர் வந்தபோது, எம்பெருமாட்டி அந்த ஞானக் குழந்தையைக் காண ஆசைப்பட்டாளாம்! ஆனால், நந்தி மறைத்தபடி இருக்க... சிவனாரின் உத்தரவுப்படி சற்றே சாய்ந்தது நந்தி. அன்னையும் தாயன்புடன் ஞானசம்பந்தரைக் கண்டு மகிழ்ந்தாள். அதனால்தான், நந்தி இங்கே சாய்திருக்கிறது'' என்று விவரம் சொன்னேன்.
''அடேங்கப்பா... கேக்கும்போதே சிலிர்க்குதே! இன்னும் இப்படி எந்தந்த ஊர்ல எல்லாம் நந்தி சாய்ஞ்சபடி இருக்குதோ, தெரியலியே?!'' என்று புருவம் சுருக்கி, முணுமுணுத்தார் பரமசாமி.
''மெதுவாக் கேட்டாலும் நல்லாக் கேட்டீங்க நண்பா! மதுரைக்குப் பக்கத்துல இருக்கிற திருப்புவனத்துலயும் நந்தி சற்றே விலகினபடி இருக்கும். ஞானசம்பந்தர், வைகை வடக்குக் கரையிலேருந்து இந்தக் கரையில இருக்கிற சிவபெருமானைத் தரிசிக்கிறதுக்காக ஆற்று மணல்ல கால் வைச்சார். அப்போ, நடக்கிற இடமெல்லாம் சிவலிங்கமா தெரியவே... அப்படியே நின்னுட்டார். ஆனாலும், கோயிலுக்குள்ளே இருக்கிற சிவனாரைத் தரிசிக்க முடியலியேங்கற வருத்தம் அவருக்கு! உடனே சிவபெருமான், நந்தியை விலகச் சொல்ல... அக்கரையில் இருந்தபடியே சிவ தரிசனம் கிடைச்சது ஞானசம்பந்தருக்கு!'' என்று நண்பருக்கு ஓர் உபன்யாசமே செய்து முடித்தேன்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த பரமசாமி, ''ஆனா, இன்னிக்கி உலகம் ரொம்பவே மாறிடுச்சு. நல்ல காரியத்துக்கு நந்தி மாதிரி குறுக்கே நிக்கிறவங்க அதிகமாயிட்டாங்க. அது சரி... இந்த ஊருக்கு எதனால பட்டீஸ்வரம்னு பேரு வந்துது?'' என்று அடுத்த கேள்வியைப் போட்டார் நண்பர்.
பதறிப்போன நான், ''பட்டிமன்றத்துக்கு நேரமாயிடுச்சு. இப்படி நந்தி மாதிரி குறுக்கே நின்னுக்கிட்டு, கேள்வி மேல கேள்வி கேட்டுக் கிட்டிருந்தா எப்படி? தொடர்ந்து சக்தி விகடன் படிச்சிருந்தீங்கன்னா, இந்தக் கேள்வியே உங்களுக்கு வந்திருக்காது!'' என்று சமாளித்து, நந்தியைப் பார்த்தேன். அந்த நந்தி சிரித்தது நண்பரைப் பார்த்தா, என்னைப் பார்த்தா என்று குழப்பமாக இருந்தது எனக்கு!