பக்த கவி எனப் போற்றப்படும் கனகதாஸரை தன் சீடராக ராஜகுருவான வியாசராயர் ஏற்றுக்கொண்டது, மற்ற சீடர்களுக்குப் பிடிக்க வில்லை. 'இவனுக்கு என்ன தெரியும்?’ என குருவின் காதுபடவே ஏளனம் செய்தனர்.

புதிய சீடனின் சிறப்பைத் தன் சீடர்களுக்குப் புரியவைக்க விரும்பினார் வியாசராயர். கனகதாஸர் உள்ளிட்ட அத்தனை பேரையும் அழைத்தார். ஒவ்வொருவரிடமும் ஒரு வாழைப்பழம் கொடுத்தார்.

. ''இந்தப் பழத்தை எடுத்துச் சென்று, யாரும் பார்க்காமல் இருக்கும் தருணத்தில் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்'' என்று பணித்தார்..
கையில் வாழைப்பழத்துடன் ஒவ்வொரு சீடரும் ஒவ்வொரு திசை நோக்கிச் சென்றார்கள். கனக தாஸரும் சென்றார். வியாசராயர் பூஜையில் அமர்ந்தார். சற்று நேரம் கடந்ததும், சீடர்கள் திரும்பினர். கனகதாஸரும் திரும்பி வந்தார்.

''குருவே... தாங்கள் பணித்த மாதிரியே, யாரும் பார்க்காத நேரத்தில் வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டோம்'' என்று பெருமையுடன் சொல்லிக் கொண்டார்கள், சீடர்கள்.

கனகதாஸரை நோக்கினார் வியாசராயர். தான் கொடுத்த பழத்தை கனகதாஸர் சாப்பிடாமல், தன் கையில் அப்படியே வைத்திருப்பதைக் கவனித்தார். மற்ற சீடர்கள் கேலியாகச் சிரித்தார்கள்.

''என்னை மன்னித்துவிடுங்கள், குருவே...'' என்று சன்னமான குரலில் ஆரம்பித்தார் கனகதாஸர்.

''சொல்லு கனகா, வாழைப்பழத்தைச் சாப்பிடாமல், ஏன் இன்னமும் கையிலேயே வைத்திருக்கிறாய்?'' என்று கேட்டார் வியாசராயர்.

''நான் தோற்றுவிட்டேன் குருவே! யாரும் பார்க்காத இடத்தில் பழத்தைச் சாப்பிட வேண்டும் என்றீர்கள். ஆனால், கடவுள் எங்கும் வியாபித்து இருக்கிறார். அவர் இல்லாத இடம் என்று எதுவும் இந்த மண்ணில் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் பார்க்காத நபரும் உலகில் இல்லை. எனவே, என்னால் பழத்தைச் சாப்பிட இயலவில்லை'' என்றார் கனகதாஸர்.

வியாசராயர் முகத்தில் மெல்லிய புன்னகை.

மற்ற சீடர்களோ, தங்கள் முகத்தில் யாரோ பளீரென்று அறைந்தது போன்று உணர்ந்தார்கள்; வெட்கத்தில் தலை குனிந்தார்கள்!

வியாசராயரிடம் கனகதாஸர் வந்து சேர்ந்தது எப்படி? இதற்கும் சுவையான கதை ஒன்று சொல்லப்படுகிறது...

அந்தத் தோட்டம் முழுவதும் துளசிச் செடிகள். அங்கே அமர்ந்து, ஒவ்வோர் இலையாகப் பறித்து, கிருஷ்ணருக்கு மானசீகமாக பூஜை செய்து கொண்டிருந்தார் கனகதாஸர்.

அப்போது, அந்த வழியே பல்லக்கில் பவனி வந்தார் வியாசராயர். சுற்றிலும் துளசிச் செடிகளைப் பார்த்ததும், பக்தியில் அவர் உள்ளம் பூரித்தது. அவரும் உடுப்பி கிருஷ்ணனை மானசீகமாக பூஜிப்பவர்தான். பல்லக்கை நிறுத்தச் சொன்னார். மணம் கமழும் துளசி இலைகளைப் பறித்து மாலையாகத் தொடுத்து, கிருஷ்ணருக்கு அணிவித்தார். ஆனால், அது கிருஷ்ணரின் தோளில் படிந்து உட்கார முடியாதபடி சிக்குண்டது. வியாசராயர் தொடர்ந்து முயற்சித்தும், அந்த மாலையை அவரால் அணிவிக்க இயலவில்லை. பூஜை தடைப்பட்டது. வியாசராயரின் முகத்தில் வருத்த ரேகைகள். தொலைவிலிருந்து இதைப் பார்த்துக்கொண்டிருந்த கனகதாஸர் ஓடோடி வந்தார்.

''நீங்கள் பெரும்புகழ் பெற்ற ராஜகுரு என்பதை அறிவேன். நீங்கள் ஆசையோடு தொடுத்த துளசி மாலை கிருஷ்ணரின் தோளில் படிந்து உட்காராமல் சிக்கிக் கொண்டதைக் கண்டு நீங்கள் வருந்துவது தெரிகிறது. என் மனதில் தோன்றுவதை நான் சொல்லலாமா?'' என்று பணிவுடன் கேட்டார்.

''ம்...''

''துளசி மாலையின் ஒரு பகுதி, கிருஷ்ணர் விக்கிரகத்தில், வலது கையில் இருக்கும் மத்து மீதுதான் ஒவ்வொரு முறையும் சிக்கிக்கொள்கிறது. இதைக் கருத்தில் கொண்டு லாகவமாக அணிவித்தால், துளசி மாலை படிந்து உட்கார்ந்துவிடும்...''

வியப்பில் வியாசராயரின் கண்கள் விரிந்தன. கனக தாஸரை தன்னுடனே வந்து விடும்படி பணித்தார். சில பல சோதனைகளுக்குப் பின்னர், கனகரை தன் சீடராக ஏற்றுக் கொண்டார்.

கனகதாஸர்- கர்நாடகாவில் மிகப் பிரபலமான பக்த கவி (1509-1609). கன்னடத்திலும், சம்ஸ்கிருதத்திலும் ஏராளமான பாடல்கள் இயற்றி, பக்தியைப் பரப்பிய மகான். புரந்தரதாஸரின் சம

காலத்தவர். கனகதாஸரின் ஜயந்தி நாளன்று (நவம்பர் 24) கர்நாடகாவில் அரசு விடுமுறை.

கர்நாடகாவின் தர்வார் மாவட்டம், படா (Bada) என்ற கிராமத்தில், ஆட்டு இடையர் குலத்தில், பிரப்பா- பச்சம்மா தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் கனகதாஸர். பிரப்பா, வைணவ மதத்தைப் பின்பற்றுபவர்; எனவே, தன் மகனுக்கு திம்மப்பா (ஏழுமலையானின் பெயர்) என்று பெயர் சூட்டினார்.

ஒரு முறை, தனது வயலில் கிணறு தோண்டும்போது, திம்மப்பாவுக்கு தங்கப் புதையல் கிடைத்தது. அன்றிலிருந்து, கிராம மக்கள் அவரை கனக நாயகா என்று அழைக்கத் துவங்கினராம். புதையலால் கிடைத்த பணத்தைக் கொண்டு, காகினேலே (kaginele) என்ற இடத்தில் கோயில் ஒன்று எழுப்பினார் கனகதாஸர். படா கிராமத்திலிருந்து ஆதிகேசவ பெருமாளின் விக்கிரகத்தை எடுத்து வந்து, அந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தார். ஆதிகேசவ பெருமாள் மீது பாடல்கள் பல இயற்றினார்.

கனகதாஸரின் தந்தை பிரப்பா, கிராமத்து நாட்டாண்மை. மக்க ளிடம் வலுக்கட்டாயமாக வரி வசூலித்து, விஜயநகர மன்னனிடம் செலுத்த வேண்டியது அவரது பணி. நாளடைவில், கனகரும் அதே வேலையை மேற்கொண்டார். ஆனால், இறைவனின் சித்தம் வேறு மாதிரியாக இருந்தது.

ஒரு முறை, கனகதாஸர் கடும் போரில் ஈடுபட நேர்ந்தது. களத்தில், வலிமைமிகு எதிரிப் படைகளிடம் தோல்வியைத் தழுவி, நினைவிழந்து, செயலிழந்து மண்ணில் சரிந்தார். மனித உருவில் அவர்முன் தோன்றி, அவரை எழுப்பிய இறைவன், ''என்னுடைய தாஸனாக வந்துவிடு!'' என்றார். கனகருக்கு அதில் ஆர்வம் இல்லை.

''வேண்டாம். தாஸனாக இருப்பதைவிட, கிராம நாட்டாண்மையாக இருக்கவே விரும்புகிறேன்'' என்றார்.

இறைவன், சட்டென்று தமது நிஜ சொரூபத்தை வெளிப் படுத்த, ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினார் கனகதாஸர். இறை, அவரை முழுமையாக ஆட்கொண்டது. ஹரிதாஸராக மாறினார் கனகதாஸர்.

''ஓ! ஹரி... மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பணம் வசூலிக்கும் பணியிலிருந்து என்னை விடுவித்து, எனக்கு நல்வழி காண்பித்து, என்னை பாதுகாத்த உன் பாத கமலங் களில் சரண் அடைகிறேன்...'' என்று பொருள்படும் 'ஹரி நின்ன பாத கமல...’ என்கிற கனகதாஸரின் பாடல் மிகவும் பிரபலம்.

ஒருமுறை, ஸ்ரீகிருஷ்ணனை தரிசிக்க உடுப்பிக்குப் பயணமா னார் கனகதாஸர். கோயிலில் கூட்டம் அலைமோதியது. வாசலில் நின்று, பக்தர்களை ஒழுங்குபடுத்தி உள்ளே அனுமதித்துக் கொண்டிருந்தார்கள் சேவகர்கள்.

கனகதாஸரை வழிமறித்து, அவரின் குலம் என்ன என்று விசாரித்தவர்கள், ''இடையர் குலத்தைச் சேர்ந்த உன்னைக் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்க முடியாது'' என்று தடுத்தனர்; அவரின் கழுத்தைப் பிடித்துத் தள்ளினர். கனகதாஸர் கெஞ்சினார்; கதறி அழுதார். கல் மனம் படைத்தவர்கள் கரையவில்லை.

'குலகுல குலவெந்து ஹொடேதாதாதிரி...’ அதாவது, 'ஆதிகேசவ பெருமாளால் ஆசீர்வதிக்கப்பட்ட, மிக உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவன்தான் நான்...’ என்ற கனகதாஸரின் பதில், சேவகர்களை அசைக்கவில்லை. ''ஒவ்வொரு மனிதனின் பிறப்பும் ஒரே மாதிரியானதுதான். அப்படியிருக்க, குலத்தால் ஒருவரை விட்டு ஒருவரைப் பிரிப்பது என்ன நியாயம்?'' என்று கனகதாஸர் கேட்டது, அவர்களுடைய காதில் ஏறவில்லை. எனினும், கனகதாஸர் நம்பிக்கை இழக்கவில்லை. உடுப்பி கிருஷ்ணனைத் தரிசிக்காமல் ஊர் திரும்புவதில்லை என்று உறுதி பூண்டார்.

''கிருஷ்ணா... உன் அழகை கண் குளிரப் பருகவும், உன் சந்நிதியில் மெய்யுருகப் பாடவும்தானே நான் ஓடோடி வந்தேன்? எனக்கு உன் தரிசனம் மறுக்கப்படுவது நியாயமா? சதா சர்வ காலமும் உன் நினைவிலேயே மூழ்கித் திளைக்கும் இந்த பக்தன் மீது நீ கருணை காட்டமாட்டாயா?'' | கோயி லைச் சுற்றி, பின்பக்கமாக வந்து கதறினார் கனகதாஸர்.

அதுவரையிலும், கோயிலின் வாயிலை நோக்கி, கிழக்கு முகமாக நின்றிருந்த கிருஷ்ணர், பக்தனின் பரிதவிப்பைக் கேட்டு மனம் இளகி, மேற்கு நோக்கித் திரும்பினார். கையிலிருந்த மத்தால் சுவரில் துவாரம் ஏற்படுத்தினார். அந்தத் துவாரம் வழியே கனகதாஸருக்கு உடுப்பி கிருஷ்ணனின் ஆனந்த தரிசனம் கிடைத்தது!

இன்றும் உடுப்பியில் கிருஷ்ணர், மேற்கு திசையைப் பார்த்தபடிதான் நின்றுகொண்டிருக்கிறார். கனகதாஸருக்கு தரிசனம் கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த அந்த துவாரம் 'கனகன கிண்டி’ என்று அழைக்கப்படுகிறது.