Published:Updated:

வாசகர் தகவல்கள்

வாசகர் தகவல்கள்

வாசகர் தகவல்கள்

வாசகர் தகவல்கள்

Published:Updated:
வாசகர் தகவல்கள்


சிவசக்தி தீபம்

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தீ
பத்தின் சுடரில் ஸ்ரீமகாலட்சுமியும், ஒளியில் ஸ்ரீசரஸ்வதியும், வெப்பத்தில் ஸ்ரீபார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.

திருக்கார்த்திகை தினத்தன்று, 'கிளியஞ்சட்டி’ எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து 'சிவசக்தி’ சொரூபமாகிறது.

கார்த்திகை பொரி

திருக்கார்த்திகைத் திருநாளில் இறைவனுக்கு கார்த்திகைப் பொரி சமர்ப்பித்து வழிபடுவது விசேஷம்.

வெண்ணீறு பூசிய சிவபெருமானைக் குறிக்கும் வெண்மையான நெற்பொரி, வள்ளல் தன்மை கொண்ட மாவலியைக் குறிக்கும் தேங்காய்த் துருவல், தூய்மையின் அடையாளமாக வெல்லம் ஆகிய மூன்றும் சேர்ந்ததே கார்த்திகைப்பொரி. இதை தூய பக்தியுடன் இறைவனுக்குச் சமர்ப்பித்து வழிபட, நம் வாழ்வு ஒளிமயமாகும்!

கார்த்திகை விரத மகிமை...

ன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதமிருந்துதான் நாரதர், சப்த ரிஷிகளுக்கு மேலான பதவியை அடைந்தார்.

மாபலிச் சக்கரவர்த்தி, திருக்கார்த்திகை விரதமிருந்தே தனது உடலின் வெப்பத்தைத் தணித்துக் கொண்டான்.

திரிசங்குவும், பகீரதனும் கார்த்திகை விரதமிருந்தே பேரரசர் ஆனார்கள்.

மகிஷனை வதம் செய்ததால் ஏற்பட்ட பாவம் நீங்க, பார்வதியாள் திருக்கார்த்திகை விரதம் இருந்ததாகச் சொல்கிறது புராணம்.

- நெ.இராமன், சென்னை-74

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism