Published:Updated:

ரெட் அலெர்ட்டில் மதுரை!

ரெட் அலெர்ட்டில் மதுரை!
ரெட் அலெர்ட்டில் மதுரை!
ரெட் அலெர்ட்டில் மதுரை!

மதுரை: ஹைதராபாத் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக டெல்லியிலிருந்து  விசாரணைக்காக வந்திருக்கும் மத்திய சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள்  மதுரையில் முகாமிட்டிருக்கிறார்கள்.

வெடிகுண்டு சம்பவத்தில் மதுரையைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு உள்ளதாக  கிடைத்த தகவலை வைத்து விசாரனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து  நம்மிடம் பேசிய உளவுத்துறை அதிகாரி ஒருவர்,"ஹைதராபாத் வெடிகுண்டு சம்ப  வத்தில் பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்கள் மதுரை வழியாக கொண்டு  செல்லப்பட்டதாக ஒரு தகவல் இருக்கு.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை அடுத்த இலக்காக வைத்திருக்கும் தீவிரவாதிகள்,  ஆர்.டி.எக்ஸ். வகை வெடிமருந்துகளை கொண்டு வந்து பதுக்கி வைத்திருக்கிறார்கள்.  இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த ஒரு நபர் உள்பட மூன்று பேரை கண்காணிப்பு  வளையத்தில் வைத்திருக்கிறோம்.

தீவிரவாதிகளால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஆபத்து வரலாம் என்பதால்,  கோயிலுக்குள் இருக்கும் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும், ஆவணி மூல  வீதிகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கியமான பரிந்துரைகளை  கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறோம். கோயில் இப்போது உச்சகட்ட  பாதுகாப்பு வளையத்தில் இருக்கிறது" என்கிறார்.

ஏற்கெனவே, மதுரையில் அத்வானி ரத யாத்திரை சென்ற வழியில் சக்திவாய்ந்த  வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதும், நரேந்திர மோடியின் வருகையை குறி வைத்து  வெடிகுண்டு பார்சல் கண்டு பிடிக்கப்பட்டதும் பஸ் டெப்போ, ஒயின் ஷாப் ஆகிய  இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்ததும் குறிப்பிட்டத்தக்கது.

 

 -  குளஸ்