நமது பாவங்களைப் பொசுக்கி, நமக்கும் நம் சந்ததிக்கும் பெரும் புண்ணியம் தரும் திருநாள் வைகுண்ட ஏகாதசி. இந்தத் திருநாளில் உடல்-உள்ளச் சுத்தியோடு விரதம் கடைப்பிடிப்பதாலும், பெருமாளின்
திவ்ய தரிசனத்தைப் பெறுவதாலும் பன்மடங்கு பலன் உண்டு என்கின்றன ஞானநூல்கள். அவ்வகையில், பெருமாளின் திவ்ய தரிசனம் இங்கே உங்களுக்காக...

1. திருவரங்கம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர், பிரம்மாவின் தவப் பயனாக திருப்பாற்கடலில் இருந்து தோன்றியவர். இஷ்வாகு மன்னரின் காலத்தில் இருந்து ரகுவம்ச மன்னர்களால் வழிபடப்பெற்றவர் ரங்கநாதர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஸ்ரீவைஷ்ணவர்களுக்குக் கோயில் என்றாலே ஸ்ரீரங்கம்தான்.
2. காஞ்சி ஸ்ரீஉலகளந்த பெருமாள்
பெருமாளின் திவ்விய தேசங்களில் ஒன்றான திருநீரகம் என்னும் திவ்விய தேசம் இது. இங்கே பெருமாள் வலது திருவடியை மகாபலியின் தலையில் வைத்து, இடது திருவடியை மேலே தூக்கியபடி காட்சி தருவது சிறப்பு.

3. திருவனந்தபுரம்
வில்வமங்கள சாமியார் என்பவருக்கு கேரளத்தில் உள்ள அனந்தன் காடு என்ற இடத்தில் சுயம்புவாகக் காட்சி அளித்தவர். அனந்தபத்மநாபசுவாமி விக்கிரகம் 12,000 சாளகிராம கற்களால் 18 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. பெருமாளை மூன்று வாசல்கள் வழியாகத்தான் தரிசிக்க முடியும்.
4. பரிக்கல் ஸ்ரீநரசிம்மர்
விழுப்புரத்துக்குத் தெற்கே 22 கி.மீ தொலைவில் பரிக்கல் அமைந்துள்ளது. ஒரே நேர்க்கோட்டில் அமைந்த மூன்று நரசிம்ம தலங்களில் ஒன்று இது. மற்றவை: சிங்ககிரி, பூவரசங்குப்பம். நரசிம்மர் பரிகலாசுரனை அழித்ததால் பரிகலாபுரம் எனப்பட்ட இத்தலம், பின்னர் பரிக்கல் எனப் பெயர்பெற்றதாம். இங்கு வந்து வழிபட... சத்ருபயமும் பெரும் கடன்தொல்லையும் நீங்கும்.

5. திருவிடந்தை
கிழக்குக் கடற்கரை சாலையில் சென்னையில் இருந்து சுமார் 42 கி.மீ தொலைவில் உள்ளது திருவிடந்தை ஸ்ரீஆதிவராகர் ஆலயம். காலவ மகரிஷியின் 360 புதல்வியரையும் தினம் ஒருத்தியாக மணம் புரிந்து அருளினாராம் பெருமாள். உற்ஸவர் நித்யகல்யாணப் பெருமாள். இங்கு ஆதிசேஷன் தம்பதி சமேதராக ஆதிவராகரின் திருவடியை தாங்கி சேவை செய்கிறார். ஆகவே, இப்பெருமாளை தரிசித்து வழிபடுபவர்களுக்கு ராகு, கேது தோஷங்கள் நீங்கி, கல்யாண வரம் கைகூடும்.