வைகுந்தத்தில் வீற்றிருப்பவரும் பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவருமான பகவான் ஸ்ரீமந் நாராயணன், உலக மக்களுக்கு அருள்புரிவதற்காக, அர்ச்சாரூபமாக எண்ணற்ற தலங்களில் எழுந்தருளி இருக்கிறார். அத்தகைய திருத்தலங்களுள் ஆழ்வார் பெருமக்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 தலங்கள் ஸ்ரீவைஷ்ணவர்களால் திவ்யதேசங்கள் என்று போற்றப்படுகின்றன. இந்த 108 திவ்ய தேசங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும்படியான ஓர் அரிய வாய்ப்பு பக்தர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

ஆம்! சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸில், பிராம்ப்ட் டிரேட் ஃபேர்ஸ் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேச ஆன்மிகக் கண்காட்சி, கடந்த டிசம்பர் 30-ம் தேதி அன்று துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி 10-ம் தேதி வரை (12 நாட்கள்) நடைபெறும் இந்த ஆன்மிகக் கண்காட்சியில், 108 திவ்யதேசங்களின் மூலவர் திருவடிவங்களையும் பக்தர்கள் தரிசிக்கலாம். தினமும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசித்து பெருமாளின் அருளைப் பெறலாம்.

மேலும் திருப்பதி ஸ்ரீவேங்கடாசலபதியின் முழு உருவ வழிபாட்டை பக்தர்கள் மேற்கொள்ளவும் வசதி செய்யப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பு. வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படும் புனிதமான மார்கழி மாதத்தில், இப்படி ஓர் அரிய வாய்ப்பு அமைந்திருப்பது பெருமாளின் அனுக்கிரகம்தான்.

படங்கள்: அ.சரண்குமார்