Published:Updated:

கயிலை... காலடி... காஞ்சி! - 18 - நம்பிக்கைகள் பொய்ப்பதில்லை!

கயிலை... காலடி... காஞ்சி! - 18 - நம்பிக்கைகள் பொய்ப்பதில்லை!
பிரீமியம் ஸ்டோரி
கயிலை... காலடி... காஞ்சி! - 18 - நம்பிக்கைகள் பொய்ப்பதில்லை!

நிவேதிதா

கயிலை... காலடி... காஞ்சி! - 18 - நம்பிக்கைகள் பொய்ப்பதில்லை!

நிவேதிதா

Published:Updated:
கயிலை... காலடி... காஞ்சி! - 18 - நம்பிக்கைகள் பொய்ப்பதில்லை!
பிரீமியம் ஸ்டோரி
கயிலை... காலடி... காஞ்சி! - 18 - நம்பிக்கைகள் பொய்ப்பதில்லை!

நோ கேஹே மோஹோத்ப்பவ திமிர பூர்ணே மம முஹு:
தரித்ராணீ குர்வந்திநகர ஸஹஸ்ராணி கிரணை:
விதத்தாம் காமாக்ஷி! ப்ரஸ்ருமர தமோ வஞ்சந சண:
க்ஷணார்த்தம் ஸாந்நித்யம் சரணமணி தீபோ ஜநநி தே


தாயே காமாக்ஷி! தன்னுடைய கிரண ஒளியால் ஆயிரக்கணக்கான சூரியர்களின் ஒளியைக் குன்றச் செய்வதும், பரவி வருகிற அறியாமை என்னும் இருளை நீக்குவதில் திறமை பெற்றதுமான உனது திருவடி யாகிய மணிவிளக்கு, மோகத்தால் என் மனமெனும் வீட்டில் உண்டான இருளைப் போக்கிட அவ்வப்போது அரைநொடியாவது ஒளி தரட்டும்.

- மூகபஞ்சசதீ

கயிலை... காலடி... காஞ்சி! - 18 - நம்பிக்கைகள் பொய்ப்பதில்லை!

லியுகத்தில் மக்கள் படும் துன்பங்கள் அனைத்தையும் போக்கி அவர்களுடைய வாழ்க்கையில் சந்தோஷமும் சாந்தியும் ஏற்பட வேண்டும் என்பதுதான் கயிலை சங்கரனின் அம்சமாக அவதரித்த காஞ்சி முனிவரின் திருவுள்ளம். அதுவேதான் அவருடைய அவதார  நோக்கமும் கூட. எனில், தம்முடைய சாந்நித்யம் நிலைபெற்றிருக்கக் கூடியதான  ஒரு திருத்தலத்தை அவர் நமக்கெல்லாம் அடையாளப் படுத்தவும், நம்மை அந்தத் தலத்துக்கு ஆற்றுப்படுத்தவும் செய்யவேண்டும் அல்லவா?

அப்படி மஹா பெரியவா நமக்கு அடையாளம் காட்டி, நம்மையெல் லாம் ஆற்றுப்படுத்தும் ஓர் உன்னதத் திருத்தலம்தான் தேனம்பாக்கம் என்னும் திவ்விய திருத்தலம். அந்தத் திருத்தலத்தில் நாளும் நிகழும் அற்புதங்களுக்கு அளவே இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கயிலை... காலடி... காஞ்சி! - 18 - நம்பிக்கைகள் பொய்ப்பதில்லை!மஹா பெரியவா அருளால் தன் பெண்ணுக்குத் திருமணம் நடை பெற்ற அற்புதத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்ட ரேவதி என்பவர்,  நமக்கு ஜெயஸ்ரீ என்பவரை அறிமுகப்படுத்தினார்.

ஜெயஸ்ரீ தன்னுடைய அனுபவத்தை நம்மிடம் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

‘’என்னுடைய பெண்ணுக்கு திருமணம் தடைப்பட்டுக்கொண்டே வந்தது. வந்த வரன்கள் எல்லாம் தட்டிப்போய்க் கொண்டே இருந்தது. எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அப்படி இருக்கும்போது ஒருநாள் காஞ்சிபுரம், தேனம்பாக்கத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயில் பற்றிக் கேள்விப்பட்டு, அங்கே ஒன்பது வாரம் போய் வந்தால் நினைத்த காரியங்கள் நல்லபடி நடப்பதாகச் சொன்னார்கள். எனவே, ஒரு செவ்வாய்க்கிழமை அன்று ரேவதியுடன் அந்தக் கோயிலுக்குப் போனேன். மஹா பெரியவா தவம் இருந்த அந்த கோயிலுக்குப் போனதுமே என் மனதில் ஒரு சந்தோஷம் ஏற்பட்டது. பெண்ணின் திருமணம் பற்றிய கவலையும்கூட மறந்துவிட்டது.

நாங்க போயிருந்தபோது அங்கே வேத பாராயணம் செய்துகொண்டு இருந்தார்கள். கேட்பதற்கே மனதுக்கு அவ்வளவு பரவசத்தைத் தந்தது. அப்புறம்தான் அங்கே மஹா பெரியவா திருவுள்ளப்படி வேதபாடசாலை நடந்து வருவதாகத் தெரிந்துகொண்டோம். மஹா பெரியவா சுமார் 45 வருஷத்துக்கு முன்பாகத் தான் இந்தக் கோயிலை உலகத்துக்கு அடையாளம் காட்டியதாகவும், அவருடைய திருவுள்ளப்படி அப்போதே அங்கே வேதபாடசாலை தொடங்கப் பட்டதாகவும் அங்கே இருந்தவர்கள் சொன்னார் கள். வேதபாடசாலையை நிர்வாகம் பண்ணுவதற் காக, ‘மஹா ஸ்வாமி வித்யாபீடம் டிரஸ்ட்’ என்ற அறக்கட்டளையும் பெரியவா கிருபையால ஏற்படுத்தப்பட்டது என்பதையும் தெரிந்து கொண்டோம்.

இப்போது என்னுடைய பிரச்னைக்கு வருகிறேன். கோயிலுக்குப் போகும்போதே, பத்மா மாமி எங்களிடம் சொல்லியிருந்தபடி ஒரு தேங்காய், வெள்ளைத் தாமரைப் பூக்கள், செவ்வரளிப் பூக்கள், சிவப்பு வஸ்திரம், தீபம் ஏற்றத்தேவையான நெய் போன்றவற்றை எடுத்துக்கொண்டு போயிருந்தோம்.

கயிலை... காலடி... காஞ்சி! - 18 - நம்பிக்கைகள் பொய்ப்பதில்லை!சந்திரசேகர கணபதிக்கு தேங்காய், தட்சிணா மூர்த்திக்கும் மஹா பெரியவாளுக்கும் வெள்ளைத் தாமரைப் பூக்களை சமர்ப்பித்தோம். பிறகு, துர்கை சந்நிதிக்குப் போய் துர்கைக்கு செவ்வரளிப் பூக்களால் ஆன மாலையை சாத்தி,  ஒன்பது நெய் தீபங்கள் ஏற்றி வேண்டிக் கொண்டேன். 6-வது செவ்வாய்க் கிழமை போயிருந்த போது, நான் கோயிலில் தரிசனம் முடித்து வெளி யில் வந்தபோது என் மகளுக்கு ஒரு வரன் இருப்பதாக செல்போனில் தகவல் வந்தது. உடனே நிச்சயமும் ஆகிவிட் டது. ஆனால், பணத்துக்கு என்ன செய்வது என்று புரியாமல் தவித்தேன்.

எங்களுக்குச் சொந்தமாக இருந்த இடத்தை விற்றுவிட்டால், என் பெண்ணின் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடித்துவிடலாம்.  ஆனால், அந்த இடம் விற்பதாகத் தெரியவில்லை. கல்யாணத்துக்கான நாள் நெருங்க நெருங்க, எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஆனாலும், இக்கட்டான அந்த சூழலிலும், மஹா பெரியவா தவம் இருந்த கோயிலில் நிச்சயமான திருமணம் என்பதால், எப்படியும் திருமணத்துக்கு ஒரு வழி அவரே காட்டுவார் என்ற நம்பிக்கை மட்டும் எனக்கு இருந்தது. என்னுடைய நம்பிக்கை வீண்போகவில்லை. எங்களுக்குத் தெரிந்த ஒருவர், விலைபோகாமல் இருந்த எங்களுடைய இடத்துக்கு பதிலாக ஒரு பெரிய தொகையைக் கொடுத்தார். கொடுக்கும்போது, ‘’இந்தப் பணத்தைக் கொண்டு கல்யாணத்தை சிறப்பாக நடத்துங்கள். உங்களுக்கு எப்போது அந்த இடம் விற்கிறதோ அப்போது பணத்தைத் திருப்பித் தந்தால் போதும்’’ என்று சொல்லி விட்டார்.  மஹா பெரியவா கிருபையால என் பெண்ணோட கல்யாணம் நல்லபடியா நடந்துவிட்டது’’ என்று நெகிழ்ச்சியும் பூரிப்புமாகக் கூறினார்.

இந்தத் திருத்தலத்தில் கல்யாணங்கள் மட்டும் நிச்சயிக்கப்படுவதில்லை; கைகூடாது என்று நினைக்கும் காரியங்கள்கூட கைகூடி வருவதாக பக்தர்கள் பலரும் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

அப்படி என்ன கைகூடாத காரியங்கள்..?

-திருவருள் தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism