Published:Updated:

தை வழிபாடு

தை வழிபாடு
பிரீமியம் ஸ்டோரி
தை வழிபாடு

தை வழிபாடு

தை வழிபாடு

தை வழிபாடு

Published:Updated:
தை வழிபாடு
பிரீமியம் ஸ்டோரி
தை வழிபாடு
தை வழிபாடு

1. தைச் செவ்வாய் வழிபாடு!

தை மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு. இதனால் வெவ்வினைகள் யாவும் நீங்கும் என்பார்கள் பெரியோர்கள். அதேபோல், தை மாதத்துச் செவ்வாய்க் கிழமைகள் வீரபத்திர வழிபாட்டுக்கும் உகந்தவை.

பொதுவாகவே இல்லங்களில் சுபிட்சம் நிறைந்திருக்கவும், தீவினைகள் யாவும் நீங்கவும் வருடம் முழுக்க செவ்வாய்க்கிழமைகள் வீரபத்திரரை வழிபட வேண்டும் என்று சொல்வார்கள். இயலாவிடில், தை மாதத்தில் வரும் செவ்வாய்க் கிழமைகளிலாவது வீரபத்திரை வழிபட்டு வரம் பெறலாம். இதனால், நீங்காத தடைகள் நீங்கும். பயமும் தீவினைகளும் நம்மைவிட்டு விலகும். கிரக பாதிப்புகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும் அற்புத வழிபாடு இது.

2. குடும்பத்தவரைக் காக்கும் சூல விரதம்!

தை மாதத்தில் கடைப்பிடிக்கவேண்டிய வழிபாடுகளில் குறிப்பிடத்தக்கது சூல விரதம். சிவபெருமானுக்கு உரிய படைக்கலன்களில் முக்கியமானது திரிசூலம். இதை முத்தலைச் சூலம் என்றும் குறிப்பிடுவார்கள்.


திரிசூலம் உயிர்களைப் பற்றியுள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை அகற்றி ஞானத்தை அளிக்கவல்லது. அஸ்திரங்களுக்கெல்லாம் தலையாயது என்பதால் அஸ்திர ராஜன் என்றும் திரிசூலத்தைச் சிறப்பிப்பார்கள்.  காசி நகருக்கு அவிமுக்தம் என்றொரு பெயர் உண்டு. அதாவது, அழிவற்ற தலம் என்று பொருள். இந்தப் புண்ணிய நகரத்தைத் திரிசூலம் தாங்கிக்கொண்டிருப்பதாகச் சொல்கின்றன புராணங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படி, மகிமைகள் வாய்ந்த திரிசூலத்தை தை மாதம் சூல விரத நாளில் (தை அமாவாசை தினத்தில்) சிவபெருமானாகவே பாவித்து வழிபடுவதால், குடும்பத்தில் தெய்வ பலமும் செல்வகடாட்சமும் என்றென்றும் நிறைந்திருக்கும் என்கிறது, விரத மகாத்மியம்.

3. பிள்ளை வரம் தரும் தை மாத ஏகாதசி

தை மாதத்தின் வளர்பிறையில் வரும் ஏகாதசியை ‘புத்ரதா ஏகாதசி’ எனப் போற்றுகின்றன புராணங்கள். பத்ராவதி நகரின் அரசர் சுகேதுமான். அவர் மனைவி சம்பகா. இவர்களுக்கு  வெகுநாட்களாக புத்திரப்பாக்கியம் கிடைக்கவில்லை. எவ்வளவோ கோயில்களுக்குச் சென்றும், வழிபாடுகள் செய்தும் பலன் கிடைக்காததால் மனச் சோர்வு அடைந்த மன்னன், ஒருநாள் காட்டில் விச்வே தேவர்களைச் சந்தித்தான்.

‘‘புத்ரதா ஏகாதசியில் உபவாசம் இருந்து இன்று மகாவிஷ்ணுவை பூஜை செய்தால், உத்தமமான பிள்ளை பிறக்கும்!’’ என்ற அவர்களது அறிவுரைப்படி, தை மாத வளர்பிறை ஏகாதசியன்று விரதம் இருந்து பிள்ளைப்பேறு வாய்க்கப்பெற்றான். 

ஆகவே, திருமணமாகியும் வெகு நாட்களாக குழந்தைப்பேறு வாய்க்காதவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, பெருமாளை வழிபட்டு பிள்ளை வரம் பெற்று மகிழலாம். அதேபோல், தைமாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை ஸபலா ஏகாதசி என்பார்கள். இந்நாளில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவதால், அனைத்து விதமான பாவங்களும் பொசுங்கும் என்கின்றன ஞானநூல்கள்.

4. நீண்ட ஆயுளைத் தரும் சாவித்ரி கௌரி விரதம்

தை மாதம் 2-ஆம் நாள் அனுஷ்டிக்க வேண்டிய  விரதம் இது. சிவனார் தனக்கருளிய இந்த விரதத்தை, தருமருக்கு போதித்தாராம் மார்க்கண்டேயர்.

விரத நாளன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். அதன்பின், குயவர் வீட்டுக்குப் போய் அவரது சக்கரத்தில் இருந்து மண்ணை எடுத்துக் கொண்டு வர வேண்டும். அந்த மண்ணால் சாவித்ரி தேவி வடிவம் செய்ய வேண்டும். பிறகு மௌன விரதம் பூண்டு முறைப்படி பூஜை செய்து, ஒன்பது முடிகள் போட்ட நோன்புக் கயிற்றைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 9 நாட்கள் பூஜித்து, 9-வது நாளன்று மாலையில் பூஜையை முடிக்க வேண்டும். இந்த முறைப்படி ஒன்பது ஆண்டுகள் பூஜை செய்ய வேண்டும். ஒன்பதாம் ஆண்டு பூஜையை நிறைவு செய்யும்போது ஒன்பது ஜோடி முறங்களில்...

ஒவ்வொன்றிலும் ஒன்பது வெற்றிலை பாக்கு- ஒன்பது மஞ்சள் கிழங்குகள் - ஒன்பது பழங்கள் என வைக்க வேண்டும். அதன் பிறகு சுமங்கலிகளை வரவழைத்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றைத் தந்து ஒருவருக்கு ஒரு ஜோடி முறம் தந்து அவர்களை வலம் வந்து வணங்கி, வழியனுப்ப வேண்டும். அதன் பிறகே உண்ண வேண்டும். நீண்ட ஆயுள், செல்வம், சந்தான பாக்கியத்தையும் அருளக் கூடியது இந்த விரதம்.

-கி.புஷ்பா, பங்களாபுதூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism