Published:Updated:

ஆலயம் தேடுவோம்: குளத்தில் மூழ்கிய திருத்தேர்... கொட்டகையில் அருளும் ஈசன்!

ஆலயம் தேடுவோம்: குளத்தில் மூழ்கிய திருத்தேர்... கொட்டகையில் அருளும் ஈசன்!
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம்: குளத்தில் மூழ்கிய திருத்தேர்... கொட்டகையில் அருளும் ஈசன்!

எஸ்.கண்ணன்கோபாலன்

ஆலயம் தேடுவோம்: குளத்தில் மூழ்கிய திருத்தேர்... கொட்டகையில் அருளும் ஈசன்!

எஸ்.கண்ணன்கோபாலன்

Published:Updated:
ஆலயம் தேடுவோம்: குளத்தில் மூழ்கிய திருத்தேர்... கொட்டகையில் அருளும் ஈசன்!
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம்: குளத்தில் மூழ்கிய திருத்தேர்... கொட்டகையில் அருளும் ஈசன்!

ருகாலத்தில் வேதமந்திரங்கள் ஒலிக்கப்பட்டதால் புனித அதிர்வலைகள் நிரம்பி இருந்த கிராமம் அது. வேதங்களின் பிரிவுகளான சாகைகள் தினமும் ஓதப்பட்டு வந்த காரணத்தால், அந்த கிராமத்துக்கு சாகை என்னும் பெயர் ஏற்பட்டு, தற்போது சாக்கை என்று அழைக்கப்படுகிறது. அக்காலத்தில் ஆவணி அவிட்ட நாளில் ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். உள்ளூர் மட்டுமல்லாமல், வெளியூர்களில் இருந்தும் இந்த ஊருக்கு வந்து பூணூல் மாற்றிக் கொள்வார்களாம்.

ஆலயம் தேடுவோம்: குளத்தில் மூழ்கிய திருத்தேர்... கொட்டகையில் அருளும் ஈசன்!

தினமும் வேதமந்திரங்கள் ஒலித்த இந்த சாக்கை கிராமத்தில், சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீஆனந்தவள்ளி அம்பாள் உடனுறை ஸ்ரீகயிலாசநாதர் கோயில் அமைந்திருக்கிறது. ஒருகாலத் தில் மிகவும் பிரசித்தி பெற்று இருந்ததுடன், வேண்டியவர்க்கு வேண்டியபடி அருள்புரிந்த ஐயனின் ஆலயத்தைப் பற்றிக் கேள்விப் பட்டு, தரிசிக்கச் சென்றோம். மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சென்ற நமக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வெட்டவெளியில் ஒரு சிறிய கொட்டகையில் ஸ்ரீகயிலாசநாதர், ஸ்ரீஆனந்தவள்ளி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்கள் காட்சி தருகின்றனர்.

தம்மை வந்து வழிபடும் பக்தர்களுக்கு, மாட மாளிகையில் சகல செல்வங்களுடன் வாழும் பேற்றினை வழங்கும் ஐயனின் திருக்கோயிலின் நிலை கண்டு, மனம் பதறித்துடித்து கண்ணீர் பெருக்கெடுத்தது. ஒரே ஆறுதல், அந்தக் கோயி லின் திருப்பணிகள் தற்போது தொடங்கப்பட்டு இருப்பதுதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆலயம் தேடுவோம்: குளத்தில் மூழ்கிய திருத்தேர்... கொட்டகையில் அருளும் ஈசன்!
ஆலயம் தேடுவோம்: குளத்தில் மூழ்கிய திருத்தேர்... கொட்டகையில் அருளும் ஈசன்!

சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோயிலில், வருடாந்திர பிரம்மோற்ஸவமும் தேர்த் திரு விழாவும் நடைபெற்றதாகச் சொல்கின்றனர் ஊர்ப் பெரியவர்கள். ஆனால், சுமார் 100 வருடங்களுக்கு முன்பு தேரோட்டம் நடைபெற்றபோது, தேருடன் சுவாமி அம்பாள் சிலைகளும் கோயிலுக்குப் பின்புறத்தில் இருந்த குளத்துக்குள் புதைந்துவிட்டதாகவும் அவர் கள் சொல்கிறார்கள். அப்போதிருந்தே கோயில் கொஞ்சம் கொஞ்சமாக சிதிலம் அடைந்து, ஒரு காலத்தில் நித்திய பூஜைகள்கூட நடைபெறாத நிலை ஏற்பட்டுவிட்டது. வழிபாடுகள் சரிவர இல்லாத நிலையில், கோயிலில் இருந்த கற்சிலைகள்கூட பின்னப்படுத்தப்பட்டு, ஒரு மரத்தின் அடியில் பரிதாபமாகக் காட்சி அளிப்பதைப் பார்த்து, மனம் பதறிப்போனோம். எண்ணற்ற சிற்பிகளின் பல வருட உழைப்பில் உருவான தெய்விக கலைப் பொக்கிஷங்களைச் சேதப்படுத்த எப்படித்தான் மனம் துணிந்ததோ?

இறைவனின் அருளால், இப்போது ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து கோயில் பெயரில் ஓர் வங்கிக் கணக்கைத் தொடங்கி, திருப்பணி களைத் தொடங்கி உள்ளனர். முதல் கட்ட திருப் பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதையும் பார்த் தோம். மிகச் சிறிய அளவில்தான் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. தேவையான நிதி வசதி இல்லாததால், திருப்பணிகளில் ஒரு தொய்வு ஏற்பட்டுள்ளது.

ஆலயத் திருப்பணிகள் குறித்து சாக்கையைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் பேசினோம்.

ஆலயம் தேடுவோம்: குளத்தில் மூழ்கிய திருத்தேர்... கொட்டகையில் அருளும் ஈசன்!

‘‘ரொம்ப வருஷமாவே இந்தக் கோயில் சரியான பராமரிப்பும் வழிபாடும் இல்லாமல் இருந்தது. திருத்துறைப்பூண்டி சிவபீடம் முத்துராமன் ஐயாதான் இந்தக் கோயிலைப் பற்றிக் கேள்விப்பட்டு வந்து பார்த்தார். பிறகு அவரே வேலூரைச் சேர்ந்த ‘உலகளாவிய ஆன்மிக சங்க’த்தின் தலைவர் நடராஜ சுவாமி என்பவரை அழைத்து வந்தார். ஊர்மக்களுடன் கலந்து பேசி, கோயிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்தோம். கோயில் பெயரில் ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்கி, கடந்த 2016-ம் வருஷம் ஏப்ரல் மாதம் 26-ம் தேதி திருப்பணிகளைத் தொடங்கி இருக்கிறோம். அடுத்த ஏப்ரல் மாதத்துக்குள் திருப்பணிகளை முடிச்சு கும்பாபிஷேகம் செய்துடலாம்னு இருக்கோம். சிவ பெருமான்தான் அருள்புரியணும்’’ என்றார்.

இந்தக் கோயிலில் ஒரு விசேஷ பிரார்த்தனை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் பக்தர்கள் தங்களுடைய பெயர் நட்சத்திரம் எழுதிய தாளில், ‘ஓம் நமசிவாய’ பஞ்சாட்சர மந்திரத்தை எழுதி, நந்திதேவரின் பாதத்தில் வைத்து வேண்டிக்கொள்கின்றனர். அப்படிச் செய்வதால் அவர்களுடைய வேண்டுதல் நிறைவேறுகிறது என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.

தற்போது இந்த ஆலயத்தில் ஒருகால பூஜை நடைபெற்று வருகிறது. மேலும் பிரதோஷம், சிவராத்திரி நான்கு கால பூஜையும் ஊர்மக்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருவதாக ரமேஷ் தெரிவித்தார்.

வேத மந்திரங்கள் ஓயாமல் ஒலித்த சாக்கை தலத்தில் சாந்நித்யத்துடன் திகழ்ந்த ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயில் திருப்பணிகள் விரைவிலேயே நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். அங்கே  நித்திய பூஜை களும், திருவிழாக்களும் விமர்சையாக நடைபெற வேண்டும் என்று ஊர்மக்கள் விரும்புகின்றனர். ஊர்மக்களின் விருப்பம் மட்டுமல்ல... தன் திருக்கோயில் மீண்டும் புதுப்பொலிவு பெறவேண்டும்; நாளும் தம்மை தரிசித்து வழிபடும் பக்தர்களுக்கு நல்லருள் புரியவேண்டும் என்னும் ஸ்ரீகயிலாசநாதரின் திருவுள்ளமும்கூட.

ஆலயம் தேடுவோம்: குளத்தில் மூழ்கிய திருத்தேர்... கொட்டகையில் அருளும் ஈசன்!

ஊர்மக்களின் நியாயமான விருப்பமும், ஐயன் கயிலாசநாதரின் திருவுள்ளமும் விரைவில் கைகூடி வரவேண்டுமானால், நாம் ஒவ்வொரு வரும் நம்மால் இயன்ற பொருளுதவியைச் செய்தால்தானே சாத்தியமாகும். எனவே, நாம் அனைவருமே  நம்மால்  இயன்ற பொரு ளுதவியைச் செய்து, ‘ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியும், சோதியாய் சுடராய் சூழொளி விளக்குமாய்’த் திகழும் ஐயனின் பேரருள் பெற்று, நாமும் நம்  சந்ததியினரும் சிறப்புடன் வாழ்வோம்.

படங்கள்: க.சதீஷ்குமார்

உங்கள் கவனத்துக்கு..

தலத்தின் பெயர்: சாக்கை

ஸ்வாமி: ஸ்ரீகயிலாசநாதர்

அம்பிகை: ஸ்ரீஆனந்தவள்ளி

விசேஷ வழிபாடு:
பிரதோஷத்தன்று பெயர் நட்சத்திரத்துடன் பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை எழுதி நந்திதேவர் பாதத்தில் சமர்ப்பித்தால், வேண்டுதல் கள் நிறைவேறுவதாக பக்தர்களின் நம்பிக்கை.

எப்படிச் செல்வது?:
திருத்துறைப்பூண்டி - நாகப்பட்டினம் ஈ.சி.ஆர் சாலையில், சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது சாக்கை.

திருத்துறைப்பூண்டியில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை பேருந்து வசதி உள்ளது.

திருப்பணியில் பங்கேற்க...

வங்கிக் கணக்கு விவரம்:


Name: Sri Kailasanathar Sivalayam
A/c no: 1551101108045
IFSC Code: CBRN 0001551
MICR Code: 611015003
Bank name: Canara Bank
Branch: Kariyapattinam 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism