

'ஐப்பசி வரைக்கும் எப்படியோ... கார்த்திகை மாதம் வந்துருச்சுன்னா, ஒரு முப்பது நாப்பது வயசு குறைஞ்சிரும் எனக்கு! ஏன்னா... எங்க அப்பன் ஐயப்பனைப் பார்க்க விரதம் துவங்கற மாசமாச்சே...'' என்று குதூகலத்துடன் சொல்கிறார் அண்ணாமலை குருசாமி.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஈரோடு மாவட்டம் பவானி - அம்மாபேட்டைக்கு அருகில் உள்ள சென்னம்பட்டியில் வசிக்கிறார் அண்ணாமலை. அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவருக்கு வயது 70.
''76-ஆம் வருஷத்துல முதன்முதலா சபரிமலைக்கு மாலை போட்டேன். அன்னிலேருந்து எனக்கும் என் குடும்பத்துக்கும் கண்கண்ட தெய்வம், ஸ்ரீஐயப்ப சுவாமிதான்!
மலையேறுதலும், அங்கேயுள்ள மூலிகைச் செடிகொடி களின் நறுமணமும், எல்லாத்துக்கும் மேலே, ஐயன் ஐயப்ப சுவாமியின் பேரருளும், நம்மோட வாழ்க்கையை நல்ல விதமா திசை திருப்பிரும். தொடர்ந்து இதுவரை, 35 வருஷமா சபரிமலைக்குப் போயிக்கிட்டிருக் கேன்'' என நெக்குருகிச் சொல்லும் அண்ணா மலை குருசாமி, முதல் முறை சபரிமலைக்கு விரதமிருந்த காரணத்தை விவரிக்கிறார்.
##~## |
என்ன ஆச்சரியம்... கொஞ்சம் கொஞ்சமா பையனுக்குப் பேச்சு வந்துச்சு. அவனோட அஞ்சாவது வயசுல, எந்தத் திக்குத் திணறலும் இல்லாம, சரளமா பேசினப்போ, எங்க கண்கண்ட தெய்வம் அந்த மணிகண்டனோட சபரிமலை இருக்கிற திசையை நானும் என் மனைவியும் விழுந்து நமஸ்கரிச்சோம்!'' எனக் கண்ணீரும் ஆனந்தமும் பொங்கத் தெரிவிக்கிறார் அண்ணாமலை குருசாமி.
''இந்த உடம்புல, இந்த வயசுலயும் தெம்பைக் கொடுத்திருக் கான் ஐயப்பன். அந்தத் தெம்பு இருக்கறவரைக்கும், அவனோட சந்நிதிக்குப் போயிக்கிட்டே இருப்பேன். இது என் இந்த ஜென்மத்துக் கொடுப்பினை!'' - நெகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார் அண்ணாமலை குருசாமி.
கட்டுரை, படங்கள்: மு.கார்த்திகேயன்