Published:Updated:

'18-ஆம் படியில் பாம்பு!' - சிலிர்க்கிறார் குஞ்சிதபாதம் குருசாமி

இது ஐயப்பன் உத்தரவு!

'18-ஆம் படியில் பாம்பு!' - சிலிர்க்கிறார் குஞ்சிதபாதம் குருசாமி

இது ஐயப்பன் உத்தரவு!

Published:Updated:
'18-ஆம் படியில் பாம்பு!' - சிலிர்க்கிறார் குஞ்சிதபாதம் குருசாமி
'18-ஆம் படியில் பாம்பு!' - சிலிர்க்கிறார் குஞ்சிதபாதம் குருசாமி

'எரிமேலியைக் கடந்து இருட்டுல சபரிமலை நோக்கிப் போய்கிட்டிருக்கோம். அந்தக் காட்டுல, ஒரு அடி எடுத்து வைக்கக் கூட பயந்துக்கிட்டு, எல்லாரும் 'சுவாமியே சரணம் ஐயப்பா’னு கோஷம் போட்டோம். அப்ப அரிக்கேன் விளக்கோட வந்த வயசான சாமியார் ஒருத்தர், 'வாங்க, நான் வழிகாட்டறேன்’னு சொல்லிக் கூட்டிட்டுப் போனார். அவரோட வேகத்துக்கு எங்களால நடக்கமுடியலை. மலையை நெருங்கும்போது, ஒரு இடத்துல அசந்து தூங்கிட்டோம். விடிஞ்சதும் பார்த்தா... அவரைக் காணோம். எல்லாம் ஐயப்பன் அருள்'' என்று ஆச்சரியமும் பக்தியும் கலந்து பேசுகிறார் குஞ்சிதபாதம் குருசாமி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருச்சி நேஷனல் கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், 46 வருடங்களாக சபரிமலைக்குச் சென்று வருகிறார்.    

''அந்தக் காலத்துல பெரியபாதைல போறதுதான் வழக்கம். வழியில, நல்ல இடமாப் பார்த்து, நாங்களே சமைச்சுச் சாப்பிடுவோம். ஒருமுறை, சமைச்சு முடிச்சதும், 'முதல்ல வேற சாமிங்க ரெண்டுபேருக்காவது சாப்பாடு கொடுத்துட்டு அப்புறம் நாம சாப்பிடலாம்’னு சொல்லிக்கிட்டிருக்கும்போதே, வயசான பெரியவரும் சின்னப் பையனுமா ரெண்டுபேர் வந்தாங்க. அவங்களை உக்கார வைச்சு, பரிமாறினோம். அவங்க கிளம்பிப் போன ரெண்டு நிமிஷத்துல, 'அவங்களுக்குத் தண்ணி பாட்டிலைக் கொடுத்துட்டு வந்துடுறேன்’னு எங்க சாமி ஒருத்தர் அவங்க போன பாதைல ஓடினார். ஆனா, அவங்களைப் பார்க்க முடியாமலே திரும்பி வந்தார். அவ்வளவு சீக்கிரத்துல, வேகவேகமாப் போயிருக்கவும் வாய்ப்பு இல்ல. அது, சாஸ்தாவைத் தவிர வேற யாரா இருக்கமுடியும்?'' என நெகிழ்ந்து உருகுகிறார் குஞ்சிதபாதம் குருசாமி.

##~##
''வாழ்க்கைல எந்தவொரு விஷயத்துக்கும் பக்கத்துணையா இருந்து எங்களை வழிநடத்தறது ஐயப்ப சாஸ்தாதான்!

ஒருமுறை, பதினெட்டாம்படியில ஏறும் போது, எங்க கூட ஒருத்தர் படியேறாம அப்படியே நின்னுட்டார். கேட்டதுக்கு 'பாம்பு நிக்குது சாமி’னு நடுங்கறார். நாம போய் ஒருநிமிஷம் கூட ஆகலியே... இந்த சாமி எதைப் பாம்புன்னு பார்த்து பயப்படுது’னு உடனே வந்து பார்த்தா, அங்கே பாம்பைக் காணோம். கடைசி வரை அவருக்கு மட்டுமே தெரிஞ்சுச்சு பாம்பு. அதனால 18-ஆம் படியேறி, ஐயப்ப சுவாமியை தரிசனம் பண்ணாமலேயே திரும்பினார் அந்த சாமி! பிறகுதான், அவங்க மாமா இறந்துட்ட தகவல் வந்தப்ப, அந்தத் தருணத்தை நினைச்சுச் சிலிர்த்துப் போனோம்'' எனச் சொல்கிறார் குஞ்சிதபாதம் குருசாமி.  

  - ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism