
'முப்பத்தாறு வருஷமா சபரிமலைக்குப் போயிட்டிருக்கேன். இதுல பதினேழு வருஷமா, திருச்சிலேருந்து சபரிமலைக்கு பாதயாத்திரையாப் போயிட்டிருக்கோம். கடந்த நாலு வருஷமா, மாசாமாசம் சபரிமலைக்குப் போய், ஸ்ரீஐயப்பனை சேவிக்கறதை வழக்கமா வைச்சிருக்கேன்'' என்று உத்வேகத்துடன் சொல் கிறார் கிருஷ்ணன் குருசாமி. வருடந்தோறும் பம்பைக்கு அருகில் நடைபெறும் அன்னதானக் கமிட்டியின் உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார் இவர்.
''2007-ஆம் வருஷம் ஆகஸ்ட் மாசம், ரெண்டு மருத்துவ நண்பர்களோடு கார்ல சபரிமலைக்குப் போனோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
##~## |
''ஒருமுறை... பம்பைலேருந்து சபரி மலைக்கு நடையைக் கட்டும்போது நைட் 11 மணி இருக்கும். கூட வந்தவங்களை விட்டுட்டு, நான் பாட்டுக்கு நடந்துக்கிட்டே இருந்துட்டேன்போல! ஒருகட்டத்துல திரும்பிப் பார்த்தா ஒருத்தரையும் காணோம். இவ்ளோ வருஷம் சபரிமலைக்குப் போனாலும் மலை, இருட்டு, தனிமை எல்லாமே பயம்தான், இல்லியா? அப்ப திடீர்னு, பெரியவர் ஒருத்தர் ஒரு சின்னப் பையனோட அங்கே வந்தார். 'மலைக்குத்தானே போகணும், தைரியமா வாங்க’ன்னு என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. கொஞ்ச தூரத்துல மலையில டீக்கடைகிட்ட வந்ததும், 'டீ சாப்பிடலாமா’னு கேக்கலாம்னு தோணுச்சு. பார்த்தா... அவங்களைக் காணோம். அந்த ஐயப்பனேதான் துணையா வந்திருக்காரு!'' என நெக்குருகிப் பேசுகிறார் கிருஷ்ணன் குருசாமி.
''மலைக்குப் போக ஆரம்பிச்சதும், வாழ்க்கையும் மலையளவுக்கு உயர்ந்திருக்கு. இன்னிக்கி, டிராவல்ஸ் வைச்சிருக்கேன்; பையன் கம்ப்யூட்டர் சென்டர் வைச்சிருக்கான். எல்லாம் ஐயப்பன் போட்ட பிச்சை'' என்று கண்ணீர் மல்கச் சொல்கிறார் கிருஷ்ணன்.
- ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்