Published:Updated:

சபரிமலையின் புதிய மேல்சாந்தி!

சபரிமலையின் புதிய மேல்சாந்தி!

சபரிமலையின் புதிய மேல்சாந்தி!

சபரிமலையின் புதிய மேல்சாந்தி!

Published:Updated:
சபரிமலையின் புதிய மேல்சாந்தி!
சபரிமலையின் புதிய மேல்சாந்தி!
சபரிமலையின் புதிய மேல்சாந்தி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேரளாவின் புகழ்பெற்ற ஆலயங்களில் 'மேல்சாந்தி’ எனப்படும் தலைமை அர்ச்சகர் பொறுப்புக்கு வருவது சாதாரணம் அல்ல. பூஜை மற்றும் வழிபாட்டு முறைகளை, முறையான கல்வி நிறுவனத்தில் கற்றிருப்பதுடன், கடந்த காலங்களில் அவர் எந்தெந்தக் கோயில்களில் ’மேல்சாந்தி’யாகப் பதவி வகித்தார் என்பதையெல்லாம் அலசி, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார். விண்ணப்பித்தவர்களில், சுமார் பத்து பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் பெயர்களை எழுதிப் போட்டு, குலுக்கல் முறையில் இறுதித் தேர்வு செய்வார்களாம்!

இந்த முறை, சபரிமலை ஸ்ரீஐயப்ப ஸ்வாமி கோயிலின் 'மேல்சாந்தி’ பதவிக்கு, 47 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், 'திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு’ 10 பேரைத் தேர்ந்தெடுத்தது. கேரள உயர்நீதி மன்றம் நியமித்த ஸ்பெஷல் கமிஷனர் முன்னிலையில், சபரிமலை ஸ்ரீஐயப்பன் சந்நிதியில், அடுத்த கட்ட தேர்வு நடைபெற்றது.

##~##
தேவஸ்வம் போர்டு அதிகாரிகள் மற்றும் பக்தர்களின் முன்னிலையில், இரண்டு வெள்ளிப் பாத்திரங்கள் வைக்கப்பட்டன. ஒரு பாத்திரத்தில், பத்து நபர்களின் பெயர்கள் தனித்தனியே எழுதப்பட்டு, சுருட்டிப் போடப்பட்டன. இன்னொரு பாத்திரத்தில், ஒன்பது சீட்டுகளில் எதுவும் எழுதாமல், ஒரேயரு சீட்டில் 'மேல்சாந்தி’ என எழுதப்பட்டிருந்தது. கூட்டத்தில் இருந்த சிறுவனை அழைத்து, சீட்டு எடுக்கும்படி சொல்ல... அந்தப் பையன் எடுத்துக் கொடுத்த சீட்டைப் பிரித்து உரக்கப் படித்தார்கள். அடுத்த பாத்திரத்தில் இருந்து எழுதாத சீட்டு வந்தால், அந்தப் பெயர் நிராகரிக்கப்பட்டுவிடும். பெயர் எழுதிய சீட்டை எடுத்த பிறகு, 'மேல்சாந்தி’ என எழுதியுள்ள சீட்டு வந்தால், அவரே மேல்சாந்தியாக நியமிக்கப்படுவார். அதன்படி, இந்த முறை தேர்வு செய்யப்பட்டுள்ள மேல்சாந்தி, 38 வயதே ஆன என்.பாலமுரளி நம்பூதிரி. இதுவரை ஸ்ரீஐயப்பன் ஆலய மேல்சாந்திகளில் இளம் வயதினர் இவரே!  

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி கோயில், கொல்லம் புதியகாவு தேவி கோயில் ஆகியவற்றில் மேல்சாந்தியாகப் பணிபுரிந்த பாலமுரளி நம்பூதிரி, தற்போது ஸ்ரீஐயப்பன் ஆலயத்தின் மேல்சாந்தி.

''எங்க குடும்பத்துல எல்லோருமே அரசுப் பதவியில இருக்காங்க. எனக்கு மட்டும் இறைத் தொண்டுல ஈடுபடுறதுலதான் விருப்பம்.

சபரிமலையின் புதிய மேல்சாந்தி!

ஆன்மிகத்துல ஆர்வமும் ஈடுபாடும் எனக்கு வர்றதுக்கு, என் சித்தப்பா நாராயண சர்மாதான் காரணம். சபரிமலை ஸ்ரீஐயப்ப னோட ஆலயத்துக்கு மேல்சாந்தியா கைங்கர்யம் செய்யணுங்கற என் நீண்ட நாள் கனவு, இப்ப நிறைவேறிடுச்சு'' எனச் சிலிர்ப்புடன் சொல்கிறார் பாலமுரளி. 2011 நவம்பர் 17-ஆம் தேதி துவங்கி, ஒரு வருட காலம் வரை, இவரது பதவிக் காலம். அது முடியும் வேளையில், அடுத்த மேல்சாந்தி தேர்ந்தெடுக்கப்படுவார்.

''இந்தக் கைங்கர்யம் கிடைப்பதற்கு என் முயற்சி எதுவுமே இல்லை. புதியகாவு தேவி மற்றும் ஸ்ரீஐயன் ஐயப்ப ஸ்வாமியின் பேரருளே காரணம்! என் குருநாதர் கல்புழா திவாகரன் நம்பூதிரி அவர்களுக்கு, இந்தப் பொறுப்பையும் வெற்றியையும் சமர்ப்பிக்கிறேன்'' என்று சொல்லி நெகிழ்கிறார் பாலமுரளி. இவரின் தந்தையார், நீலகண்ட சர்மா; தாயார் சியாமளா தேவி.

கேரளாவின் மணிகண்டேஸ்வரம் பகுதியில், 'இடமானா இல்லம்’ எனும் வீட்டில், மனைவி பிரஸீதா, ஜாதவேதன், தேவ தாதன் ஆகிய மகன்கள் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார் பாலமுரளி. சபரிமலை கோயிலுக்கு அருகில் உள்ள மாளிகைபுரம் ஸ்ரீதேவி கோயிலுக்கும் மேல்சாந்தி தேர்வு நடந்தது. தேர்வு முறை யில் எந்த மாற்றமும் இல்லை. இதில், டி.கே.ஈஸ்வரன் நம்பூதிரி மேல்சாந்தியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

படம்: கே.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism