Published:Updated:

கார்த்திகையில் நெய் தீபம்!

பொரவச்சேரி ஸ்ரீகந்தா போற்றி!

கார்த்திகையில் நெய் தீபம்!

பொரவச்சேரி ஸ்ரீகந்தா போற்றி!

Published:Updated:
கார்த்திகையில் நெய் தீபம்!
##~##
நா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கப்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது பொரவச்சேரி. பொருள் வைத்த சேரி என அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டு, தற்போது பொரவச்சேரியாக மருவியுள்ளதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

நாகப்பட்டினம் - சிக்கலில், ஸ்ரீசிங்காரவேலவனாக முருகக் கடவுள் அருள்பாலிக்கிறார் அல்லவா? இங்கே, பொரவச்சேரியில் ஸ்ரீகந்தசாமி எனும் திருநாமத்துடன் காட்சி தந்து, நமக்கு அருளையும் பொருளையும் அள்ளித் தருகிறார்!

சிக்கலில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ள இந்தத் தலத்தில், ஸ்ரீவள்ளி- ஸ்ரீதெய்வானை சமேதராகத் தரிசனம் தரும் ஸ்ரீசுப்ரமணியரின் திருமேனியை, கண்ணாரத் தரிசித்துக் கொண்டே இருக்கலாம். அத்தனை அழகு; சிற்ப நுட்பத்தில் அவ்வளவு நேர்த்தி! மயிலின் தேகமும் அதன் வசீகரமும் கொள்ளை அழகு.

இந்தத் தலத்து முருகப்பெருமானுக்கு, பொன்மயில் அழகன் எனும் திருநாமமும் உண்டு. முருகக்கடவுளின் அழகும் கருணையும் ததும்புகிற கண்களும், அவர் திருக்கரங்களில் ஏந்தியிருக்கிற ஆயுதங்களும், மயிலுடன் பிணைந்திருக்கிற நாகமும் சிற்பியின் கலைத் திறனைப் பறைசாற்றுகின்றன. குறிப்பாக, முருகப்பெருமானின் திருக்கரங்களில் ஓடுகிற நரம்புகளும், விரல்களின் நகங்களும் பார்த்து பிரமிக்காதவர்களே இருக்கவே முடியாது! இந்தத் தலத்துக்கு சஷ்டி மற்றும் கார்த்திகை ஆகிய நாட்களில் வந்து, ஸ்ரீசுப்ரமணியரை நெய் தீபமேற்றி வழிபட்டுத் தரிசித்தால், பொன்னும் பொருளும் இல்லத்தில் குவியும் என்பது ஐதீகம்! ஆகவே சஷ்டி மற்றும் கார்த்திகையில் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இருந்து, எண்ணற்ற பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

இங்கே அருள்பாலிக்கும் ஸ்ரீகார்த்திகை பிள்ளையார், காகத்தின் மீது காலூன்றி நிற்கும் ஸ்ரீசனைச்சரர் ஆகியோரும் சாந்நித்தியம் மிகுந்தவர்கள். அதே போல், இந்தக் கோயிலில் ஸ்ரீயோக நரசிம்மருக்கு சந்நிதி உள்ளது என்பது தனிச் சிறப்பு. இவருக்கு சனிக்கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் தீபமேற்றி, பானகம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், தீராத கடனும் தீரும்; சொத்து வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கப் பெற்று நிம்மதியுடன் வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்!

கார்த்திகையில் நெய் தீபம்!

திருக்கார்த்திகை தீபத் திருநாளில், முருகன் விபூதி அலங்காரத்தில் காட்சி தருவதைத் தரிசித்தால், நோய்கள் விலகி ஆரோக்கியத்துடன் வாழலாம் என்பது ஐதீகம். அன்றைய நாளில், சந்தனக் காப்பு அலங்காரத்தில் முருகக்கடவுளை தரிசிப்பது வாழ்வில் சந்தோஷத்தையும் நிம்மதியையும் வழங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கார்த்திகை மாதத்தின் தீபத் திருநாளில், இங்கு வந்து ஸ்ரீமுருகப் பெருமானுக்கு நைவேத்தியம் படைத்து, அப்போது நடைபெறும் சிறப்பு ஹோமம் மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் வைபவத்தில் கலந்து கொண்டால், இல்லறம் செழிக்கும்; குடும்ப ஒற்றுமை மேலோங்கும்!

திருமணத் தடையால் அவதிப்படுவோர், பிள்ளை பாக்கியம் இல்லையே எனக் கலங்குவோர், ஆறு நெய் விளக்குகளேற்றி, ஆறு வகைப் பழங்களால் நைவேத்தியம் செய்து, ஆறு வகைப் பூக்களால் அர்ச்சித்து, ஆறு வாரங்கள் தொடர்ந்து ஆறுமுகனை வழிபட்டு வந்தால், விரைவில் திருமணம் நடந்தேறும்; மனம் போல் மாங்கல்யம் கிடைக்கப் பெறுவார்கள். பிள்ளைச் செல்வத்துடன் சகல செல்வங்களும் பெற்று நீடூழி வாழ்வார்கள் என்று சொல்லிச் சிலிர்க்கின்றனர் நாகை மக்கள்! இப்படியான பிரார்த்தனைகளுடன் தினமும் நெய் தீபமேற்றும் பக்தர்கள் அதிகரித்து வருவதால், இங்கே தினம் தினம் கார்த்திகை தீபம்தான் என்கிறார் கோயில் குருக்கள் பாலசுப்ரமணியம்.  

- மா.நந்தினி
படங்கள்: இ.ராஜவிபீஷிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism