. ஸ்ரீ.சுப்ரமணிய சுவாமியை, கார்த்திகை விரதமிருந்து வணங்கினால், காலமெல்லாம் நமக்குத் துணையிருப்பான் கந்தக் கடவுள், என்கின்றனர் திருப்பூர் மாவட்ட அன்பர்கள்..
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள சிவன்மலையில் அமைந்துள்ளது ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்.

இங்கே, ஸ்ரீவள்ளி- ஸ்ரீதெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீமுருகப் பெருமான். ஸ்ரீஆஞ்சநேயர், இந்தத் தலத்துக்கு வந்து முருகக் கடவுளை வணங்கிச் சென்றதாகத் தெரிவிக்கிறது ஸ்தல புராணம்.

சிவவாக்கியர் எனும் சித்தர், இந்த மலையில் நெடுங்காலம் தங்கியிருந்து கடும் தவம் செய் தார் என்பதால், இந்த மலை 'சிவன்மலை’ என அழைக்கப்படுகிறதாம்.

தந்தையின் பெயரில் மலை அழைக்கப் பட்டாலும்... குன்றிருக்கும் இடமெல்லாம் நிறைந்திருக்கும் குமரன், இந்த மலை மீதும் கோயில் கொண்டு, நாம் அழைத்த குரலுக்கு ஓடோடி வந்து அருள்பாலிக்கிறான்.

பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி என விழாக்கள் பலவும் விமரிசையாக நடைபெறும் இந்தக் கோயிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா மிகப் பிரமாண் டமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், சிவன் மலையே விளக்குகளால் ஜொலிப்பது, கண்கொள்ளாக் காட்சி எனச் சிலிர்க்கின்றனர் பக்தர்கள்.

கார்த்திகைக்கு முதல் நாள் பரணி தீபமும், 2-ஆம் நாளான திருக்கார்த்திகை நாளில் கார்த்திகை தீபமும், 3-ஆம் நாளில் ரோகிணி தீபமும் ஏற்றி, முருகக்கடவுளுக்குச் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். கார்த்திகை மற்றும் ரோகிணி நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து வணங்கி, வழிபட்டால் சகல விதமான தோஷங்களில் இருந்தும் விடுபடுவார்கள் என்பது ஐதீகம்!

மேலும், திருக்கார்த்திகை தீபத் திருநாளில், ஸ்ரீகார்த்திகேயக் கடவுளை வணங்கி வழிபட்டால், திருமண பாக்கியம் கிடைக்கும்; அழகன் முருகனைப் போல், அழகும் அறிவும் நிறைந்த குழந்தைச் செல்வம் பெறலாம் என்பது நம்பிக்கை.

இங்கு, ஸ்ரீசனி பகவான் கிழக்கு நோக்கியபடி அமர்ந்து அருள்பாலிப்பது விசேஷம் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

- ச.ஆ.பாரதி
படங்கள்: செ.பாலநாக அபிஷேக்