Published:Updated:

சித்தமல்லியில் தொடரும் அற்புதம்!

சித்தமல்லியில் தொடரும் அற்புதம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சித்தமல்லியில் தொடரும் அற்புதம்!

சித்தமல்லியில் தொடரும் அற்புதம்!

ருள்மிகு திருவேங்கடநாத பெருமாளின் அருளாடல் களாலும், ராகவேந்திர ஸ்வாமியின் அனுக்கிரகத் தாலும் நமது சிந்தையில் நிறைந்து சித்தத்தை மகிழ்வித்த சித்தமல்லி திருத்தலத்தில், இன்னமும் தொடர்கின்றன பகவான் நிகழ்த்தும் அற்புதங்கள்.

சித்தமல்லியில் தொடரும் அற்புதம்!

இறை அனுக்கிரஹத்தால் இந்தத் திருக்கோயிலின் திருப்பணிகள் நிறைவுபெற்று, வரும் 23-ம் தேதி (திங்கட்கிழமை) மஹா சம்ப்ரோக்ஷணம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், கடந்த 1-ம் தேதியன்று இந்தக் கோயிலில் நடைபெற்ற துவஜஸ்தம்ப (கொடிமரம்) வைபவத்தின்போது, நம் உள்ளத்தைச் சிலிர்க்கச் செய்யும் சில அற்புதங்கள் நடந்தேறின. இதுகுறித்து பரவசத்தோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார் பத்மா மாமி...

‘‘கொடிமர பிரதிஷ்டைக்கு சில நாட்களுக்கு முன்பு என் கனவில் தோன்றிய தாத்தா (ராகவேந்திரர்), வெள்ளை நிறத்தில் இருந்த ஒரு கொடிமரத்தைக் காட்டினார். இரண்டு கலசங்களுடன் கூடிய கோபுரத்தையும், கையில் கரும்புடன் காட்சி தரும் காமாட்சி அம்மனையும் வரைந்து காட்டினார். தொடர்ந்து பல மகான்களின் திருவுருவங்களையும் தெய்வத் திருவுருவங்களையும் வரைந்து காட்டினார். அதன் பொருள் அப்போது எனக்குப் புரியவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சித்தமல்லியில் தொடரும் அற்புதம்!

துவஜஸ்தம்ப பிரதிஷ்டைக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு, மறுபடியும் கனவில் காட்சி தந்தார். ‘என்ன நீ இப்படி தூங்கிண்டிருக்கே? நாளன்னைக்குக் காலையில் ஒரு அதிசயம் நடக்கப்போறது தெரியுமா? நீ அவசியம் வரணும்... ஒரு பொட்டுத் தங்கமாவது போடணும். ஒரு கல்லாவது எடுத்து வைக்கணும்’ என்றார். நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், எனக்குத் தெரிந்தவர் களிடம் சொன்னதும் அவர்கள் முடிந்த அளவுக்கு அரை கிராம், ஒரு கிராம் என்று தங்கம் வாங்கி வைத்திருந்தார்கள். 

‘எல்லாம் சரி, சித்தமல்லிக்கு எப்படி போறது? போறதுக்கான வண்டி வசதி எதுவும் இல்லையே... என்ன செய்வது’ என்ற யோசனை எழுந்தாலும், ‘சரி! இது தாத்தாவின் (ராகவேந்திரர்) கட்டளை. அவரே வழிகாட்டட்டும்’ என்று பேசாமல் இருந்து விட்டேன். தாத்தா வழிகாட்டினார். பிரதிஷ் டைக்கு முன்தினம் எங்கள் குடும்ப நண்பர் சுரேஷ் போன் செய்து, ஒரு வேன் வருவதாகவும், அதில் நாங்கள் அனைவரும் வந்துவிடவேண்டும் என்றும் சொன்னார். எல்லோரும் புறப்பட்டுப் போனோம்.

சித்தமல்லியில் தொடரும் அற்புதம்!

மறுநாள் அதிகாலையில் கொடிமர பிரதிஷ்டைக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன. கிரமப்படியான பூஜைகள் எல்லாம் முடிந்த பிறகு, கொடிமரத்தை குழிக்குள் இறக்குவதற்கு முன்பாக, செப்புத் தகட்டில் வரைந்த யந்திரத்தைப் போட வேண்டும். அப்போது தற்செயலாகக் குழிக்குள் பார்த்தேன். என்ன அதிசயம்... அங்கே தாத்தா இரண்டு கைகளையும் உயர்த்தியபடி உட்கார்ந் திருந்தார். நான் என்னை மீறிய ஆவலில். ‘தாத்தா வந்துவிட்டார், தாத்தா வந்துவிட்டார்’ என்று கத்திவிட்டேன்.
 
எல்லோரும் பார்ப்பதற்கு முன்பு, பட்டாச்சார்யார் செப்புத் தகட்டில் வரைந்த யந்திரத்தை மேலே இருந்தபடியே குழிக்குள் வைப்பதற்கு பதிலாக, குழிக்குள் குதித்துவிட்டார். அவ்வளவுதான்... அதுவரை குழிக்குள் தரிசனம் தந்த தாத்தா அங்கு இல்லை. பார்த்தால் கொடிமரத்தின் மீது மிக அற்புதமாய் தரிசனம் தந்தார். மிகச் சிலிர்ப்பான அனுபவம் அது!

அத்துடன் நிறைவடையவில்லை அற்புதங்கள். நாங்கள் எல்லோரும், கொடிமரத்தை குழிக்குள் இறக்குவதற்கு முன்பாக,  நாங்கள் வாங்கிச் சென்ற தங்கத்தைக் குழிக்குள் போட்டோம். மிகச் சரியாக அந்த நேரத்தில் வானத்தில் இரண்டு கருடன்கள். எங்களுக்கெல்லாம் எவ்வளவு சந்தோஷம் தெரியுமா! பகவானே ஆசீர்வாதம் தர வந்துட்டதா நினைச்சு கன்னத்தில் போட்டுக்கொண்டோம்.

சித்தமல்லியில் தொடரும் அற்புதம்!

பேரானந்தமாய் குழிக்குள் இறக்கப்பட்டது கொடிமரம். அப்போது நிகழ்ந்தது இன்னோர் அற்புதம். சொன்னால் நம்ப மாட்டீர்கள்... கொடிமரத்தின் அடியில் பதிக்கப்பட்டிருந்த செப்புத் தகடு காற்று அடைத்த பலூன் போல் உப்ப ஆரம்பித்துவிட்டது. அந்தச் செப்புத் தகட்டில் ராமர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், ராகவேந்திரர், பாபா என்று தெய்விகக் காட்சிகள்!

‘இதென்ன அற்புதம்... எனக்கு மட்டும்தான் இந்தக் காட்சிகள் தெரிகின்றனவா?’ என நான் யோசித்து மீள்வதற்குள், அங்கிருந்த அனைவருமே பரவசத்துக்கு ஆளானார்கள். ஆமாம்! எல்லோருமே தெய்விகக் காட்சிகளைத் தரிசித்திருக்கிறார்கள்.

சித்தமல்லியில் தொடரும் அற்புதம்!

அதேபோல், கரும்புடன் அருளும் காமாட்சியை கனவில் காட்டித் தந்தார் தாத்தா என்று சொன்னேன் அல்லவா? சித்தமல்லியின் காவல் தெய்வம் காமாட்சிதான் என்பது அப்போதுதான் எனக்குத் தெரியவந்தது. எல்லோருமே தெய்வானுக் கிரஹத்தை எண்ணி பூரிப்பு அடைந்தோம். பிறகென்ன... தாத்தாவோட அருளால் கொடிமர பிரதிஷ்டை செய்யும் வைபவம் நல்லபடி நடந்தது.’’ என்ற பத்மா மாமி, மேலும் தொடர்ந்தார்:

‘‘சித்தமல்லி பெருமாள், பூமித்தாய் தவமிருந்து பெற்றெடுத்த பிள்ளை... புதிதாகத் தோன்றிய குழந்தைபோல்! எப்படி குழந்தையின் கள்ளமில்லா சிரிப்பு அனைவரையும் கவருமோ, அப்படி பத்மாவதி தாயார் சமேத திருவேங்கடநாத பெருமாளும் தன்னுடைய அருள்திறனால் உலக மக்களை தன்பால் ஈர்க்கும் இந்த சித்தமல்லியும் மகத்தான தலமாக இருக்கும் என்றும் தாத்தா என்னிடம் சொல்லி இருக்கிறார். ஆக, அந்தத் தலத்துக்குச் சென்று தரிசிப்பவர்களும் மகாபாக்கியசாலிகளே!’’ என்றார்.

உண்மைதான்! மகத்தான அந்தத் திருத்தலத்தில் வரும் 23-ம் தேதி திங்கட்கிழமை அன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா சம்ப்ரோக்ஷணம் நடை பெறுகிறது. அந்த வைபவத்தில் நாமும் கலந்து கொள்வோம்; சித்தமல்லி ஸ்ரீபத்மாவதி தாயார் சமேத ஸ்ரீதிருவேங்கடநாத பெருமாளின் பரிபூரண திருவருளுக்குப் பாத்திரமாவோம்.

படங்கள்: என்.கண்பத்

எப்படிச் செல்வது..?

சித்தமல்லி, வைத்தீஸ்வரன்கோவில்-மணல்மேடு சாலையில் பட்டவர்த்தி என்ற இடத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது. வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து 460 எண்ணுள்ள பேருந்தில் சென்று பட்டவர்த்தியில் இறங்கி அங்கிருந்து ஆட்டோ மூலம் செல்லலாம். மயிலாடுதுறையில் இருந்து சித்தமல்லிக்கு நேரடியாக பேருந்து வசதி உள்ளது. இரண்டு மணி நேரத்துக்கு ஒரு பேருந்து மயிலாடுதுறையில் இருந்து சித்தமல்லிக்குச் செல்கிறது.