வழக்கில் வெற்றி பெற...

காரைக்குடியிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவிலுள்ள ஊர், கானாடுகாத்தான். இங்கு கோயில்கொண்டிருக்கும் அருள்மிகு பரமனூர் காளியம்மன் சாந்நித்தியம் மிகுந்தவள். வழக்குகளில் நியாயமான தங்கள் தரப்புக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இந்த அம்மனை வேண்டிக்கொண்டு, அம்மனுக்குப் புடவை சமர்ப்பித்து வழிபட்டால், விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பரசுராமர் ஆலயத்தில்...

பொதுவாக கோயிலுக்குள் பித்ரு காரியங்கள் செய்யமாட்டார்கள். ஆனால், திருவல்லம் பரசுராமர் ஆலயத்தில், பித்ருக்களுக்கு சிராத்தம் செய்ய அனுமதிக்கிறார்கள். ஸ்ரீபரசுராமரும், ஸ்ரீஆதிசங்கரரும் பித்ரு கடன் செலுத்திய தலம் இது. இங்கே க்ஷேத்ரபிண்ட வழிபாடும், தில ஹோம பூஜையும் விசேஷம்.

உச்சிக்கால பூஜை இல்லை

திருவாரூர் அருள்மிகு தியாகேசர் ஆலயத்தில், வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று மட்டும் உச்சிக்கால நைவேத்திய பூஜை கிடையாது. அந்தத் திருநாளன்று மதியம், சோமயாகத்தில் அவிர்பாகம் பெறும் பொருட்டு, அம்பர் மாகாளத்துக்கு எழுந்தருள்வாராம் ஸ்ரீதியாகராஜ பெருமான்.

பைரவர் பூஜை

சீர்காழி திருக்கோயிலில் மூலவர் பிரம்மபுரீஸ்வரர். என்றாலும் அருள்மிகு சட்டைநாத ஸ்வாமி என்ற திருப்பெயர் பிரசித்தம். பைரவ அம்சமான ஸ்ரீசட்டைநாத ஸ்வாமிக்கு, வெள்ளிக்கிழமை தோறும் புனுகு சாத்தி பூஜை செய்கிறார்கள்.

ஐந்து முகங்களுடன் முருகப்பெருமான்

கோவை - புஞ்சை புளியம்பட்டியில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது இரும்பறை. இங்கிருந்து சுமார் 5 கி.மீ தொலைவிலுள்ளது ஓதி மலை முருகன் கோயில். மலைக்கு மேலுள்ள முருகன் கோயிலுக்குச் செல்ல 1800 படிகள், ஏற வேண்டும். இங்கே, கருவறையில் ஐந்து முகங்களுடனும் எட்டு திருக்கரங்களுடனும் அதிகாரத் தோரணையில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான். இந்தப் பகுதியில் உள்ள மண் வெண்ணிறத்தில் காட்சித் தரும். இதையே, பக்தர்களுக்கு அருட்பிரசாதமாக தருகிறார்கள்.

- எஸ்.விஜயலக்ஷ்மி, சென்னை