சக்தி விகடன்-தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனம் மற்றும் ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, திருச்சி ரெனால்ட்ஸ் சாலையில் உள்ள, ஸ்ரீதாயுமான சாயிபாபா ஆலயத்தில், கடந்த டிசம்பர் மாதம் 29.12.16 அன்று நடைபெற்றது. அந்த தினம் ஸ்ரீசாயிபாபாவுக்கு உகந்த வியாழக்கிழமை ஆதலால், திரளான பக்தர்கள் வந்திருந்து விளக்குபூஜையில் கலந்துகொண்டனர்.

பூஜை மாலை 6 மணிக்குத் துவங்கும் என்று அறிவித்திருந்த போதிலும், பிற்பகல் 3 மணியிலிருந்தே பூஜையில் கலந்துகொள்ள பெண்கள் ஆர்வத்துடன் வரத் தொடங்கினர். விளக்கு பூஜைக்காக வந்திருந்த பக்தர்கள் மட்டுமின்றி, சாயி தரிசனத்துக்காக வந்திருந்த மேலும்பல பக்தர்களும் பூஜையில் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவிக்கவே, அவர்களுக்கான விளக்கு மற்றும் பூஜை பொருட்களும் வழங்கப்பட்டன.

திருச்சியைச் சேர்ந்த ஆன்மிக அன்பரும் பாபாவின் பக்தையுமான சுதா பட்டாபி, கணீரென்ற மந்திரங்கள் சொல்லி, விநாயகர் பூஜையோடு தொடங்கி, திருவிளக்கு பூஜையை சிறப்பாக நடத்தினார். மந்திரங்களையும் திருவிளக்கு போற்றி மற்றும் அகவலையும் அவர் சொல்லச் சொல்ல, பங்கேற்க வந்தவர்களும் பக்தியுடன் சொல்லி விளக்குக்கு அர்ச்சனை செய்ய, மிக அற்புதமாக நடந்தது திருவிளக்கு பூஜை.

ஸ்ரீசாயிபாபா கோயில் என்பதால், விளக்கு பூஜைக்கு இடையிலேயே பாபாவுக்கான மாலை ஆரத்தியும் நடைபெற்றது. தமிழில் ஆரத்திப் பாடல்களை சுதா பட்டாபியும் டாக்டர் ஜெயம் கண்ணனும் பக்தர்களும் பாட, அமோகமாக நடந்தது ஆரத்தி பூஜை. வழக்கத்துக்கு மாறாக, ஆண்களும் பூஜையில் கலந்துகொண்டு பக்தி சிரத்தையுடன் திருவிளக்கு பூஜை செய்தது, சிறப்பம்சம்.

‘‘சக்தி விகடன் நடத்தும் விளக்கு பூஜைகளில் தொடர்ந்து பலமுறை கலந்துகொண்டிருக்கிறேன். இந்த முறை எங்கள் குடும்பத்தில் எல்லோருமே வந்திருக்கிறோம். வழக்கம்போலவே மிக அற்புதமாக பூஜை நடைபெற்றது. எந்தப் பிரச்னையானாலும் ஈஸியா எதிர்கொள்கிற மனோதைரியம், எல்லோரும் எப்போது மனநிறைவா வாழும் பாக்கியம்... இதுதான் எங்கள் பிரார்த்தனை. இந்த வரத்தை இங்கு வந்திருக்கும் எல்லோருக்கும் ஸ்ரீசாயிபாபா நிச்சயம் தருவார்’’ என்று நம்பிக்கையும் மகிழ்ச்சியும் பொங்க தெரிவிக்கிறார் திருச்சி வாசகி அபிராமி.

அவர் சொன்னது போல், அனைவரது பிரார்த்தனைகளும் ஸ்ரீசாயி பாபாவின் திருவருளால் சாத்தியமாகும்.

- தி.எ.ஆனந்தகுமார்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்