Published:Updated:

கயிலை... காலடி... காஞ்சி! - 20 - ‘கடிதாசிகளை தெப்போளத்துல போட்டுடு!’

கயிலை... காலடி... காஞ்சி! - 20 - ‘கடிதாசிகளை தெப்போளத்துல போட்டுடு!’
பிரீமியம் ஸ்டோரி
கயிலை... காலடி... காஞ்சி! - 20 - ‘கடிதாசிகளை தெப்போளத்துல போட்டுடு!’

நிவேதிதா

கயிலை... காலடி... காஞ்சி! - 20 - ‘கடிதாசிகளை தெப்போளத்துல போட்டுடு!’

நிவேதிதா

Published:Updated:
கயிலை... காலடி... காஞ்சி! - 20 - ‘கடிதாசிகளை தெப்போளத்துல போட்டுடு!’
பிரீமியம் ஸ்டோரி
கயிலை... காலடி... காஞ்சி! - 20 - ‘கடிதாசிகளை தெப்போளத்துல போட்டுடு!’

மூவாய், பிறவாய், இறவாய், போற்றி!
முன்னமே தோன்றி முளைத்தாய், போற்றி!
தேவாதி தேவர் தொழும் தேவே, போற்றி!
சென்று ஏறி எங்கும் பரந்தாய், போற்றி!
ஆவா! அடியேனுக்கு எல்லாம், போற்றி!
அல்லல் நலிய அலந்தேன், போற்றி!
காவாய்! கனகத்திரளே, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.


 - அப்பர் சுவாமிகளின் போற்றித் திருத்தாண்டகம்

கயிலை... காலடி... காஞ்சி! - 20 - ‘கடிதாசிகளை தெப்போளத்துல போட்டுடு!’

ன் பொருட்டு காஷ்ட மௌனத்தைக் கலைத்து, சைகையால் அனுக்கிரகம் செய்து, பிரசாதம் கொடுத்த மகா பெரியவாளின் கருணையை நினைத்து நினைத்து சிலிர்ப்பும் பூரிப்புமாக வெளியில் வந்த அந்தத் தொழிலாளியை அங்கிருந்தவர்கள் சற்றே பொறாமை யுடன் பார்த்தார்கள்.

அவர்களின் பொறாமைப் பார்வைகளை கண்டும் காணாதவராக அங்கிருந்து புறப்பட்ட அந்தத் தொழிலாளி, தான் மேற்படிப்பு படிக்கவும், அலுவலகப் பணியில் சேரவும் மகா பெரியவா உத்தரவு கொடுத்து விட்டதாகவே பூரித்து இருந்தார்.

அந்தப் பூரிப்புடனே சென்னைக்குத் திரும்பிய அந்தத் தொழிலாளி, மைசூருக்கு பணமும் விண்ணப்பமும் அனுப்பினார். ஒரு மாதம் ஆயிற்று, இரண்டு மாதமும் ஆயிற்று. மைசூர் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான அனுமதியும் கிடைக்கவில்லை. அனுப்பிய பணமும் திரும்பவில்லை.

அப்போதுதான், பெரியவாளிடம் தான் சமர்ப்பித்த விண்ணப்பத்தை அவர் நகர்த்தி வைத்ததுடன், பிரசாதத்தையும் தனியே தந்ததற்கான சூட்சுமத்தை அந்தத் தொழிலாளி அறிந்தார். தான் மேற்கொண்டு படிப்பதில் பெரியவாளுக்கு சம்மதம் இல்லை என்பதையும் அவர் புரிந்துகொண்டார்.

கயிலை... காலடி... காஞ்சி! - 20 - ‘கடிதாசிகளை தெப்போளத்துல போட்டுடு!’அமரபாரதி நடராஜ சர்மாவின் பிள்ளை பிற்காலத்தில் என்னவாக வரவேண்டும்? என்னவாக வரப் போகிறார் என்பது மகா பெரியவாளுக்குத் தெரியாமல் இருக்குமா என்ன?

மேல்கொண்டு படிக்கவும் அலுவலகப் பணியில் சேரவும் பெரியவாளின் அனுக்கிரகம் கிடைக்கப் பெறாத அந்தத் தொழிலாளிதான், இன்றைக்கு தம்மை முழுவதுமாக ஆன்மிகத்தில் ஈடுபடுத்திக்கொண்டு, உபந்நியாசங்கள் செய்தும் பத்திரிகைகளில் எழுதியும் வருகிறார். அவர் தம்முடைய உபந்நியாசத்தைத் தொடங்கும்போது, ‘எல்லாம் வல்ல அம்பிகையின் திருவருளாலும் கருணையே உருவான காஞ்சிப் பெரியவர் ஆசீர்வாதத்தாலும்’ என்றுதான் தொடங்குவார்.

கயிலை... காலடி... காஞ்சி! - 20 - ‘கடிதாசிகளை தெப்போளத்துல போட்டுடு!’

‘சொல்லின் செல்வன்’ என்று மகா பெரியவா பாராட்டியவரும், ‘இயல் பரசுராமவேள்’ என்று வாரியார் சுவாமிகளால் அழைக்கப்பட்டவரும், ‘பிரவசன மணி’ என்று வாலியால் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டவரும், ‘இந்து சமயக் களஞ்சியம்’ (Encyclopedia of Hinduism) என்று சோவினால் போற்றப்பட்டவருமான அந்தத் தொழிலாளி வேறு யாரும் இல்லை; பலருக்கும் குறிப்பாக சக்தி விகடன் வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமான பி.என்.பரசுராமன்தான் அந்தத் தொழிலாளி!

கான்களின் உத்தரவு இருந்தால்தான் நாம் அவரை தரிசிக்க வேண்டும். ஒருவர் என்னதான் மகானின் அணுக்கத் தொண்டராக இருந்தாலும் கூட, மகான் உத்தரவு கொடுத்த பிறகே அவரை தரிசிக்கவேண்டும். உத்தரவு இல்லாமல் தரிசிக்க முயல்வது சமயங்களில் அச்சத்தையும் துன்பத் தையும் தந்துவிடக் கூடும்.

அப்படித்தான்  நாம்  இப்போது  பார்க்கப் போகும் அன்பருக்கும் நேர்ந்தது.

அப்போது மகா பெரியவா திருச்சிக்கு விஜயம் செய்திருந்தார். பட்டணப் பிரவேசத்தின்போது ஏராளமான பக்தர்கள் மகா பெரியவாளை தரிசித்துக்கொண்டு இருந்தார்கள். அப்போது மகா பெரியவா கூட்டத்தில் இருந்து விலகி தூரமாக இருந்த ஒருவரிடம், சைகையாலேயே எதையோ கூறினார். தூரத்தில் இருந்தபடி மகா பெரியாவாளையே பார்த்துக்கொண்டிருந்த அந்த அன்பரும் சைகையாலேயே மகா பெரியவாளுக்கு எதையோ உணர்த்திவிட்டு, நேராகப் போய் நந்தீஸ்வரர் கோயில் மரத்தடியில் அமர்ந்து கொண்டார்.

பக்தர்களின் வரவேற்பை முடித்துக்கொண்டு, நந்தீஸ்வரர் கோயிலுக்கு வந்த மகா பெரியவா, தம்முடைய சைகையைப் புரிந்துகொண்டு ஏற்கெனவே அங்கு வந்து உட்கார்ந்திருந்தவரை தமக்கு அருகில் அழைத்தார்.

அன்பரும் கையில் வைத்திருந்த கடிதங்களுடன் மகா பெரியவாளுக்கு அருகில் சென்றார். மகா பெரியவா அவருக்கு சில கடிதங்களை டிக்டேட் செய்தார். பிறகு அந்த அன்பரிடம், ‘‘இந்தக் கடிதாசிகளை எடுத்துட்டுப் போய் தெப்போளத்துல (தெப்பக்குளம்) போட்டுடு’’ என்று கூறினார்.

சரி என்று புறப்படப் போனவரிடம், ‘‘நான் சொன்னேன்னு தெப்போளத்துல போட்டுடாதே. எல்லா கடிதாசிங்களும் நனைஞ்சிடும். தெப்போளத்துக்குப் பக்கத்துல உள்ள தபாலா பீஸில் போட்டுட்டு வா’’ என்று நகைச்சுவை ததும்பக் கூறினார். அந்த அன்பரும் அப்படியே போய் தெப்பக்குளத்துக்கு அருகில் இருந்த தபால் அலுவலகத்தில் இருந்த பெட்டியில் கடிதங்களைப் போட்டுவிட்டு திரும்பினார். அதற்குள் இருட்டி விட்டது. மகா பெரியவா முகாமிட்டிருந்த இடத்துக்குச் சென்றார்.

இருட்டிவிட்டதால், முகாமில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பந்தங்கள் மெல்லிய ஒளியைப் பரப்பியபடி எரிந்துகொண்டிருந்தன. அந்த அன்பர் மகா பெரியவா அமர்ந்திருக்கும் மேனாவுக்கு அருகில் வந்தவர், ‘தாம்தான் பெரியவாளுக்கு ரொம்பவும் அணுக்கமாயிற்றே’ என்ற எண்ணத்தில் மகா பெரியவா இருந்த மேனாவின் ஒற்றைக் கதவைத் திறந்தார்.

அவ்வளவுதான், அங்கே அவர் கண்ட காட்சி அவரை திடுக்கிடச் செய்துவிட்டது.

திடுக்கிடும்படியாக அவர் அங்கே கண்ட காட்சி..?

- திருவருள் தொடரும்