Published:Updated:

வேல் மாறல் பாராயணம்

வேல் மாறல் பாராயணம்
பிரீமியம் ஸ்டோரி
வேல் மாறல் பாராயணம்

வேல் மாறல் பாராயணம்

வேல் மாறல் பாராயணம்

வேல் மாறல் பாராயணம்

Published:Updated:
வேல் மாறல் பாராயணம்
பிரீமியம் ஸ்டோரி
வேல் மாறல் பாராயணம்

ரம்பொருளின் பேரருள், பேராற்றல், பேரறிவு ஆகிய மூன்றும்  ஒன்றிணைந்து திகழ்வதே வேலாயுதம். இத்தகைய மகிமைமிகு வேலாயுதத்தை துதித்து துன்பம் நீங்க அருள்பெற உதவும் வழிபாடே, வேல்மாறல் பாராயணம்.

வேல் மாறல் பாராயணம்

அருணகிரிநாதர் அருளிய வேல் வகுப்பு பாடலின் 16 அடிகளை, முன்னும் பின்னும் இடையிலுமாக மாற்றி மாற்றி 64 அடிகள் வருமாறு, வேல்மாறல் பாராயணமாகத் தொகுத்து அருளியிருக்கிறார் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த ஸ்வாமிகள். முருகப் பெருமானுக்கு உகந்த திருநாட்களில் வேல்மாறல் பாராயணம் செய்து வழிபட்டு வருகிறார்கள், முருகனடியார்கள், அவ்வகையில், வாசகர்களின் குடும்பங்கள் நலம்பெறவும், அவர்களது வாழ்வில் மகிழ்ச்சி பொங்கவும்... திருப்பூரில் இருந்து கொடுவாய் செல்லும் வழியில், சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ள அலகுமலை அருள்மிகு முத்துக் குமார பாலதண்டாயுதபாணி ஸ்வாமி திருக்கோயிலில், வேல்மாறல் பாராயணம்-பூஜை நடைபெறவுள்ளது (அலகுமலை கோயில் குறித்த கட்டுரை, இந்த இதழிலேயே, பக்கம் 44-ல் இடம்பெற்றுள்ளது).

பிப்ரவரி-5, ஞாயிறு அன்று காலை 7 மணியளவில்   பூஜை நடைபெறும்.சக்திவிகடனும், அலகுமலை காலைநேர கிருத்திகை வழிபாட்டுக் குழு மற்றும் குன்றுதோறாடல் வழிபாட்டுக் குழுவும் இணைந்து நடத்தும் இந்த பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகர்கள், அருகிலுள்ள எண்ணுக்குத் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.

பூஜை முன்பதிவுக்கு: 044 - 28524054

ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர (காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை)

* பூஜையில் கலந்துகொள்ள எந்தவித கட்டணமும் கிடையாது.