பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிக துளிகள்...

கண்ணாடியில் கண் விழிப்பது ஏன்?

ங்காள மக்கள் காலையில் விழித்ததும் கண்ணாடியில் முகம் பார்ப்பது வழக்கம். நம் தமிழகத்திலும் சிலரிடம் இந்த வழக்கம் உண்டு. கண்ணாடி, மங்கலப் பொருட்களில் ஒன்று என்பது ஒருபுறம் இருந்தா லும், இந்த வழக்கத்துக்கு வேறொரு காரணமும் உண்டு.

விநாயகர் சதுர்த்தி முடிந்ததும் மண்ணால் செய்யப்பட்ட பிள்ளை யாரை நீர்நிலைகளில் கரைப்பது போன்று, வங்காளத்தில் விஜய தசமியையொட்டி  துர்காதேவி சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பார்கள்.
 
விஜயதசமி முடிந்ததும் ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் நிரப்பி, அதில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைப்பார்கள். கண்ணாடிக்கு எதிரில் துர்கை சிலையையும் வைப்பார்கள். இப்போது தேவியின் பிம்பம் கண்ணாடியில் தெரியும். அதாவது அம்பிகையின் சக்தி கண்ணாடியில் சேர்ந்ததாக ஐதீகம். பின்னர் மகிழ்ச்சியாக துதிப்பாடல்கள் பாடி, துர்கையின் சிலையைய் பல்லக்கில் கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள். மீண்டும் அம்பிகை தங்கள் வீட்டுக்கு அடுத்த வருடம்தான் வருவாள் என்பதால், அதுவரை துர்கையின் சக்தி கண்ணாடியில் இருப்பதாக பாவித்து, காலையில் எழுந்ததும் கண்ணாடியைத் தரிசித்து  மகிழ்வார்கள். இதற்கு ‘கண்ணாடி விசர்ஜனம்’ என்று பெயர்.

- நவீனா தாமு, திருவள்ளூர்

கண்ணாயிரமுடையார்!

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து சுமார் ஏழு கி.மீ தொலைவில் உள்ளது குறுமாணக்குடி. சாபத்தின் காரணமாக, தன் மேனி முழுவதும் ஆயிரம் கண்கள் தோன்றியதால் பெரிதும் வருந்திய இந்திரன், சாப விமோசனம் வேண்டி தவம்செய்த தலம் இது. அவனது தவத்தால் மகிழ்ந்து, ஆயிரம் கண்களையும் தன் திருமேனியில் ஏற்றுக்கொண்டு அருள்பாலித்தவர் என்பதால், இந்தத் தலத்தின் இறைவனுக்கு `கண்ணாயிரமுடையார்’ என்று திருப்பெயர்.

- கே.என்.மகாலிங்கம், புதுச்சேரி

ஆன்மிக துளிகள்...

விக்கிரக வழிபாடும் பலன்களும்!

‘காணும் இடமெல்லாம் சக்தியடா’ எனப் பாடிவைத்தார்கள் நம் பெரியவர்கள். அதற்கேற்ப மரம், செடி கொடி முதலான எல்லாவற்றிலும் இறைவனைக் கண்ட நம் முன்னோர், மரத்தாலும் உலோகங்களாலும் இறை திருவுருவங்களை வடித்து வழிபடத் துவங்கினார்கள். அத்தகைய வழிபாடுகளால் விளையும் பலன்களையும் விளக்கியுள்ளார்கள். மரம் அல்லது களி மண்ணால் செய்த விக்கிரகத்தை வழிபட்டு வந்தால் ஆயுள் பலம் கூடும்.

சந்தனக் கட்டை:
செல்வம் சேரும்.

கருங்கல் விக்கிரகம்: அதிகாரம் மற்றும் உடல்நலம் பெறலாம்.

தங்க விக்கிரகம்: வசதி வாய்ப்பு மற்றும் ஆரோக்கியம் பெருகும்.

வெள்ளி விக்கிரகம்: பெயரும் புகழும் கிடைக்கும்.

செம்பு விக்கிரகம்: குழந்தைப்பேறு கிட்டும்.

பஞ்சலோக விக்கிரகம்: சகல தடைகளும் நீங்கும்.

- அ.யாழினி பர்வதம், சென்னை 78

செல்வ கடாட்சம் நிலைத்திருக்க...

வீட்டில் லட்சுமிவாசம் எப்போதும் நிறைந்திருக்க கீழ்க்காணும் நியதி களைக் கடைப்பிடிக்கலாம்.

அனுதினமும் வீட்டில் காலை-மாலை இரண்டுவேளையும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

சந்தனம் லட்சுமிக்கு உகந்த ஒன்று. எனவே ஸ்வாமிப் படங்கள், விளக்குகளைச் சந்தனத்திலகம் இட்டு அலங்கரிப்பதுடன், அன்பர்களும் நெற்றியில் சந்தனத்திலகம் வைத்துக்கொள்ளலாம்.

வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலைகளால் லட்சுமிதேவியை அர்ச்சித்து வழிபட்டால், செல்வ கடாட்சம் உண்டாகும்.

வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாள்களும் திருமகளுக்கு உகந்தவை. மேலும், அவள் வெண்ணெயில் வசிப்பவள் ஆதலால், இந்த இரண்டு நாள்களிலும் வெண்ணெய் உருக்குதல் கூடாது.

- சங்கரி லிங்கம், நெல்லை-4

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு