Published:Updated:

கடலூரில் ஒரு கந்தசாமி கோயில்!

கடலூரில் ஒரு கந்தசாமி கோயில்!

##~##

'கந்தசாமி’ படம் பார்த்திருப்பீர்கள். மக்கள்  தங்கள் குறைகளைச் சீட்டில் எழுதி, கோயிலில் உள்ள மரத்தில் கட்டிவைக்க, விக்ரமும் அவரது நண்பர்களும் அந்தப் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார்கள். கடலூரிலும் அப்படி ஒரு 'கந்த சாமி’ கோயில் நிஜமாகவே இருக்கிறது!  

 கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ள மணவாளநல்லூரில் உள்ளது கொளஞ்சி யப்பர் கோயில். பக்தர்கள் தங்கள் கஷ்டங்களை வெள்ளைத் தாளில் மனுவாக எழுதி அங்கிருக்கும் வேலில் கட்டிவிட்டு வந்தால், கண்டிப்பாக 90 நாட்களில் அந்தப் பிரச்னை தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை!

இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல் பட்டுக்கொண்டு இருக்கும் கொளஞ்சியப்பர் கோயில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாம். இந்தப் பகுதி மக்களுக்குப் பெண் குழந்தை பிறந்தால் கொளஞ்சியம்மாள் என்றும், ஆண் குழந்தை பிறந்தால் கொளஞ்சியப்பன் என்றும் பெயர் சூட்டும் அளவுக்கு கொளஞ்சியப்பர் மீது மணவாளநல்லூர் மக்களுக்குப் பக்தி அதிகம். இந்தக் கோயில் தோன்றிய கதை சுவாராஸ்யம்...

கடலூரில் ஒரு கந்தசாமி கோயில்!

தினமும் இந்தப் பகுதியில் ஒரு பசு மாடு மேய்ந்துவிட்டு அருகில் உள்ள கொளஞ்சி மரத்தடியில் இருக்கும் சுயம்பு வடிவிலான கல்லுக்குத் தன் பாலைச் சுரந்துவிட்டுப் போகுமாம். அந்தச் சுயம்புதான் இன்று வளர்ந்து கொளஞ்சியப்பராக வடிவம் எடுத்திருக்கிறது என்று கதை உண்டு.  

கடலூரில் ஒரு கந்தசாமி கோயில்!

தங்கள் கஷ்டங்களை வெள்ளைத் தாளில் எழுதி முனீஸ்வரன் சந்நிதியில் உள்ள வேலில் கட்டுவதை 'சீட்டுக் கட்டுதல்’ என்கிறார்கள். உள்ளூர் மக்கள் சீட்டுக் கட்டினால்

கடலூரில் ஒரு கந்தசாமி கோயில்!

20 கட்டணம். இதுவே வெளியூர், வெளி மாநில பக்தர்களாக இருந்தால் கி.மீ-க்கு 25 பைசா வீதம் பணம் கட்ட வேண்டும். அந்த சீட்டைக் கட்டிய 90 நாட்களில் வேண்டிய காரியம் நிறைவேறிவிடுமாம். அப்படி நிறைவேறிவிட்டால்  உடனடியாக 50 ரூபாய் கட்டி 'என் சீட்டை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்’ என்று வெள்ளைத் தாளில் எழுதி அய்யனார் காலடியில் வைத்துவிட வேண்டும். ஒருவேளை 90 நாட்களுக்குள் நினைத்த காரியம் நிறைவேறாவிட்டால் மாதம் ஒருமுறை படிப் பணமாக

கடலூரில் ஒரு கந்தசாமி கோயில்!

50 கட்ட வேண்டுமாம். வெளியூரில் இருப்பவர்கள் டி.டி அல்லது மணியார்டர் மூலமாக இந்த படிப் பணத்தை அனுப்புகிறார்கள்.  

இந்த நம்பிக்கை இந்தப் பகுதியில் உள்ளவர் களுக்கு மட்டும் இல்லை; வெளியூர், வெளி மாநிலம் தொடங்கி சிங்கப்பூர் வரை பரவி நிற்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் கோயிலில் நிற்கக்கூட இடம் இல்லாமல் பக்தர்களும், சீட்டுக் கட்டுபவர்களும் குவிந்துவிடுகிறார்கள்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு மனு கொடுத்து கோரிக்கை நிறைவேறாத மக்கள், கடவுளுக்கு மனு கொடுத்து காரியம் சாதிக்க முயல்வதில் ஆச்சர்யம் இருக்கிறதா என்ன?

- க.பூபாலன், படங்கள்: எஸ்.தேவராஜன்

அடுத்த கட்டுரைக்கு