Published:Updated:

நெல்லையப்பருக்கு வர வேண்டிய பாக்கித் தொகை 2.4 கோடி ரூபாய்!

நெல்லையப்பருக்கு வர வேண்டிய பாக்கித் தொகை 2.4 கோடி ரூபாய்!
நெல்லையப்பருக்கு வர வேண்டிய பாக்கித் தொகை 2.4 கோடி ரூபாய்!

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலம் நெல்லையப்பர் ஆலயம். தற்போது இந்த ஆலயத்தை மையமாக வைத்து சர்ச்சை கிளம்பி உள்ளது.

நெல்லையப்பருக்கு வர வேண்டிய பாக்கித் தொகை 2.4 கோடி ரூபாய்!

நெல்லையப்பர் ஆலயத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்டு , அந்தப் பகுதியில் ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்படுகின்றன-இவை அனைத்தும் கோயில் நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய வாடகை மற்றும் இதர கட்டணங்களை முறையாக செலுத்துவதில்லை. அவ்வாறு கட்டாத பாக்கித் தொகை மட்டும் மொத்தம் 2.4கோடி ரூபாய் என்று கோயில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கோயில் நிர்வாகமும், வணிக நிறுவனங்களும் தனித்தனியாக நீதிமன்றத்தில் பல வழக்குகளைத் தொடர்ந்துள்ளன. இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், வழக்கில் சம்மந்தப்படாத மேலும் பல வணிக நிறுவனங்களும் நெல்லையப்பர் ஆலயத்திற்கு பாக்கித் தொகை செலுத்த வேண்டி உள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

நெல்லையப்பருக்கு வர வேண்டிய பாக்கித் தொகை 2.4 கோடி ரூபாய்!

இந்தத் தொகை சுமார் 64 லட்ச ரூபாய் ஆகும். இதை பல முறை கோயில் நிர்வாகம் கேட்டும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதைச் செலுத்தவில்லை. இதையடுத்து அதிரடியாக செயல்பட்ட கோயில் நிர்வாகம், பாக்கித்தொகை செலுத்த வேண்டியவர்களின் பெயர், அவர்கள் செலுத்த வேண்டிய தொகை உள்ளிட்ட விபரங்களை விளம்பரமாக எழுதி வைத்துள்ளது. இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த இந்து வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் குற்றாலிங்கம், "இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி இது போன்று ஏமாற்றும் கடைகளையும், வணிக நிறுவனங்களையும் எந்த வித முன்னறிவிப்பும் செய்யாமல் காலி செய்ய முடியும். இதற்கு மேலும் இதே நிலை நீடித்தால், அது போன்ற நடவடிக்கை மேற்கொள்ள செய்ய வேண்டியதை கோயில் நிர்வாகம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.  

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல். ராஜேந்திரன்