Published:Updated:

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 6

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 6
பிரீமியம் ஸ்டோரி
உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 6

டாக்டர் ஜெயம் கண்ணன்

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 6

டாக்டர் ஜெயம் கண்ணன்

Published:Updated:
உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 6
பிரீமியம் ஸ்டோரி
உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 6
உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 6

ந்தியாறு - ஊட்டத்தூர் சிவாலயத்துக்கு, ‘காசிக்கு வீசம் கூட’ என்ற பெருமையைத் தேடித் தந்தப் புண்ணிய நதி.

சோழ மன்னர்களுள் ஒருவர், தன் தந்தையின் அஸ்தியைக் கரைப்பதற்காகக் காசி தலத்துக் குச்

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 6

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்றார். வழியில், ஓர் இரவுப்பொழுது அவர் இந்த நந்தியாற்றங்கரையில் தங்கியிருந்த போது, ஓர் அதிசயம் நிகழ்ந்தது. கலசத்தில் எடுத்து வந்திருந்த அஸ்தியும் எலும்புகளும் நறுமணம் வீசும் மலர்களாக மாறிப்போயிருந்தன. ஆச்சர்யம் விலகாமலேயே காசிக்குச் சென்ற மன்னர், அங்கே கலசத்தைத் திறந்தபோது மீண்டும் அவை அஸ்தியாகவும் எலும்புகளாகவும் மாறியிருப்பதைக் கண்டு அதிர்ந்துபோனாராம்.

ஆகவே, காசியம்பதியில் அஸ்தியைக் கரைக்காமலேயே திரும்பிய சோழ மன்னர், மீண்டும் ஊட்டத்தூருக்கே வந்து, நந்தியாற்றிலேயே அஸ்தியைக் கரைத்தாராம். அதனால்தான் ‘காசிக்கு வீசம் கூட’ என்று போற்றப்படுகிறது, இந்த ஊட்டத்தூர் திருத்தலம். ஆக, புண்ணியம்பதியான காசிக்குச் செல்ல இயலாத அன்பர்கள் ஊட்டத்தூர் வந்து வழிபடலாம்;   கங்கை தீரத்துக்குச் செல்லமுடியாமல் வருந்துவோர், இந்த நந்தியாற்றில் நீராடி பெரும் புண்ணியம் பெறலாம் என்பதையே இவ்வரலாற்றுச் சம்பவம் உணர்த்துகிறது.

புனிதமான இந்த நந்தியாற்றின் கரையிலேயே காசி விஸ்வநாதர் கோயிலைச் சோழ மன்னர் கட்டியதாக வும், இப்போது அது இல்லை என்றும் கூறப்படுகிறது.

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 6

சரி... இப்போது நாம் இரண்டாவது உட் பிராகாரத்தில் இருக்கும் அம்பாள் சந்நிதிக்கு வந்து விட்டோம்.  அம்பாள் சந்நிதி ஒரு தனிக்கோயிலாகவே அமைந்திருக்கிறது. அதாவது, பிராகாரத்தின் வடமேற்கில் அகிலாண்டேஸ்வரிக்கு தனிச் சந்நிதி. கி.பி. 7-ம் நூற்றாண்டில் கட்டத்தொடங்கி, கி.பி. 11-ம் நூற்றாண்டில் நிறைவுபெற்றதாம் இந்தத் திருக்கோயிலின் திருப்பணி. அப்படி, கோயில் கட்டி முடிக்கப்பட்டு நான்கு நூற்றாண்டுகள் கழிந்தபின்னரே, அன்னை அகிலாண்டேஸ்வரி தனிச் சந்நிதியில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாள்.

வாயிலின் இருபுறமும் யோகினி சக்தி, போகினி சக்தி அமையப்பெற்றிருக்க, கருவறையில் அன்பே திருவுருவாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறாள் அன்னை. நான்கு திருக்கரங்கள், இரு செவிகளிலும் தாடங்கம் பொருந்தி நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறாள் அம்பிகை. ஆரவாரம் ஏதுமின்றி அமைதியாக, அருள்சுரக்கும் கமல நயனங்களால் நம்மை நோக்குகிறாள். உற்றார், உறவினர் எத்தனை பேர் இருந்தாலும், பெற்றவளைப் பார்க்கும்போது பேரின்பம் பொங்குமல்லவா? அப்படித்தான் இருந்தது நமக்கும்.

‘அம்மா, தாயே... அகிலாண்டேஸ்வரி!’ என்று கைகூப்பித் தொழுது வணங்கி, அம்மன் சந்நிதியை வலம்வந்து வணங்கினோம். மிகவும் பழைமையாக, பராமரிப்புக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் மண்டபம். திருப்பணி முடித்தால், ஜோராக இருக்கும். ‘அந்த அன்னையே அதற்கும் வழிசெய்வாள்’ என்று மனதில் எண்ணிப் பிரார்த்தித்தபடி வெளியே வந்தோம்.

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 6

ஊட்டத்தூரின் மகிமையை அறிந்து, தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் வருகின்றனர் பக்தர்கள். திருப்பதியைச் சேர்ந்த ஹரிபாபு என்ற அன்பர், தன்  ஏழு வயது மகனுக்குக் கிட்னி பிரச்னை வரவே, பத்திரிகைகளில் படித்ததை வைத்து ஊட்டத்தூர் வந்திருக்கிறார். இங்கே பிரார்த்தனை செய்து, வெட்டிவேர் தீர்த்தம் அருந்தியபிறகு, அவருடைய மகனுக்குப் பூரண குணம் கிடைத்து நலமாக இருப்பதால், மீண்டும் வந்து வணங்கிச் செல்ல வந்திருப்பதாகக் கூறினார். இப்படி ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரருக்கும் பஞ்சநதன நடராஜருக்கும் பிரார்த்தித்துப் பலனடைந்து, பின் மீண்டும் இந்தத் தலத்துக்கு வந்து நன்றி சொல்லிப் பணிந்து செல்வோர் பலர். இந்தச் சிவாலயத்தில் ஒரு தடவை பிரதோஷ வழிபாடு செய்பவர்களுக்கு ஒரு கோடி புண்ணியம் கிடைப்பதாக அகஸ்தியர் பெருமான் தெரிவித்துள்ளார்.

‘‘ஊட்டத்தூர் ஸ்ரீபஞ்சநதன நடராஜருக்குச் சம்மேளன அர்ச்சனை என்று சொல்லப்படும் அர்ச்சனையைத் தொடர்ந்து செய்துவந்தால், நீண்டநாள்கள் திருமணம் ஆகாதவர்களுக்கு, விரைவில் திருமணப் பிராப்தம் கிடைக்கும். சம்மேளன அர்ச்சனை என்பது சுவாமி, அம்பாள் இருவருக்கும் சேர்த்து செய்யப்படுவது’’ என்கிறார் நடராஜ குருக்கள்.

இப்படி எண்ணற்ற அதிசயங்களையும் ஆற்றலையும் சுமந்துகொண்டிருக்கும் ஊட்டத்தூர், இன்னும் பலரறியத் தெரியாமல் இருப்பது ஆச்சர்யம்தான்! அதற்கும் ஒரு சரியான நேரத்தைப் பார்த்திருக்கிறானோ பரமன் என எண்ணத் தோன்றுகிறது. ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் ஆலயம் தவிர, ஸ்ரீராமர் கோயில், ஸ்ரீசோழீஸ்வரர் கோயில், அண்ணன்தம்பி கோயில், ஸ்ரீசெல்லியம்மன் கோயில் என பல ஆலயங்கள் ஊட்டத்தூரில் இருக்கின்றன. ஆகவே, இந்த ஊருக்குச் செல்பவர்களுக்கு உயர்ந்த ஆன்மிக அனுபவமும் அனைத்து தெய்வங்களின் தரிசனமும் கிடைப்பது உறுதி. 

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 6

‘சக்தி விகடன்’ வாசகர்களுக்காக, ஊட்டத்தூர் சிவாலயத்தில் நம் தரிசனம் நிறைவுற்றது. உள்ளமும் உணர்வுகளும் ஒன்றி, அவன் மலர் தாள் வணங்கினால், உன்னத வாழ்வை அளிப்பான் ஊட்டத்தூர் இறைவன்!

இதோ, திருநாவுக்கரசரின் பதிகத்தைப் படித்துப் பாருங்கள்...

நறையூரிற் சித்தீச்சரம் நள்ளாறு   
நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை
தோணிபுரம் துருத்தி சோமேச்சரம்
உறையூர் கடலொற்றியூர் ஊற்றத்தூர்
ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்தும்
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும்
கயிலாயநாதனையே காணலாமே.


திருநாவுக்கரசர்

(6-ம் திருமுறை 70 ம் பதிகம்; 10வது பாடல்)

கருத்து: நறையூரிலுள்ள சித்தீச்சரம், நள்ளாறு, நாரையூர், நாகேச்சரம், நல்லூர், துறையூர், சோற்றுத்துறை, சூலமங்கை, தோணிபுரம், துருத்தி, சோமேச்சரம், உறையூர், கடலை அடுத்த ஒற்றியூர், ஊற்றத்தூர், ஓமாம்புலியூர், ஏடகம், கறையூர், கருப்பறியல், கன்றாப்பூர் ஆகிய இடங்களில் கயிலாயநாதனைத் தரிசித்து மகிழலாம்!

(தரிசனம் நிறைவுற்றது)

தொகுப்பு: பிரேமா நாராயணன்

படங்கள்: செ.ராபர்ட்

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 6

துர்காதேவி சரணம்!

ந்தக் கோயிலில் உள்ள துர்கை,  வாயின் இருபுறங்களிலும் கோரைப்பற்கள் வெளியில் தெரியுமாறு வித்தியாசமாகக் காட்சி அளிக்கிறாள். இந்தத் துர்கைக்கு வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் ராகு காலத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால், திருமண பாக்கியம் கிடைக்கும். துர்கைக்கு மட்டுமல்ல, இங்கே அருளும் கால பைரவர், வீரபத்திரர் ஆகிய தெய்வங்களுக்கும் ராகு கால தீபம் ஏற்றலாம் என்பது சிறப்பு. சிலர், துர்கைக்கு 11 வாரங்கள் எலுமிச்சை மாலை சார்த்தியும் வழிபடுகின்றனர்.

எப்படி செல்வது?

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில், சென்னையில் இருந்து சுமார் 276 கி.மீ தூரத்தில் உள்ளது பாடாலூர்; திருச்சியில் இருந்து சுமார் 45 கி.மீ தூரம். பாடாலூரில் இருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் ஊட்டத்தூர் அமைந்துள்ளது. திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் பெரம்பலூரில் இருந்தும் மாநகரப் பேருந்துகள் உள்ளன. காலை 6 முதல் 12 மணி வரையும், மாலை 4:30 முதல் 8 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.

வளர்பிறை பஞ்சமியில் பஞ்சாட்சர மந்திரம்!

பிராகாரத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தி, மிகவும் சக்தி வாய்ந்தவர்; மிகுந்த கலை நயத்தோடு திகழ்கிறார். கல்லால மரத்தின் கிளைகள் விசிறி போல விரிந்திருக்க, அதில் ஓர் ஓலைப்பையும் துண்டும் தொங்கும் சிற்ப வடிவம் வெகு இயற்கை! அம்மரத்தின் கீழே அமர்ந்திருக்கும் பெருமான், சாந்தமே உருவாக, அபயகரம் காட்டி ஆட்கொள்கிறார். சிற்ப அமைப்பில் அவருடைய தலைமுடி கூட வித்தியாசமாக இருக்கிறது. ரசித்துப் பார்க்க ஏராளமான நுணுக்கமான வேலைப்பாடுகள்.

‘‘வளர்பிறை பஞ்சமி திதியன்று, இந்த தட்சிணாமூர்த்தி முன்நின்று, ‘நமசிவாய’ எனும் பஞ்சாட்சர மந்திரத்தை, 108, 1008 என்று நம்மால் முடிந்த அளவு, மனம் ஒன்றி ஜபம் செய்தால், அவருடைய பூரண அருள் கிடைக்கும். தோஷங்கள் விலகும். லட்சம், கோடி என்று பஞ்சாட்சர மந்திரம் சொன்ன தேவர்களுக்கெல்லாம் அனுக்கிரஹம் செய்தவர் அல்லவா? அதுமட்டும் இல்லை; 11 வாரங்கள், வியாழக்கிழமை குரு ஓரையில் கொத்துக்கடலை மாலையிட்டு வணங்கினால், காரிய ஸித்தி கிட்டும்’’ என்கிறார் நடராஜ குருக்கள்.

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 6

இரவு நேரப் பணியாளர்கள் வணங்கவேண்டிய பைரவர்!

ட்டத்தூர் சிவாலயத்தில் எல்லா சிற்பங் களுமே கண்களில் ஒற்றிக்கொள்ளும் நேர்த்தியுடன் இருக்கின்றன. அதற்குக் கால பைரவர் விக்கிரகமும் விலக்கல்ல. தேய்பிறை அஷ்டமி தினத்தில் இங்கு நடக்கும் யாகத்தில் பங்கேற்று வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

கால பைரவருக்கு 11 வாரங்கள் சகஸ்ரநாமம் செய்தால் குழந்தைகளுக்கு மன பயம் நீங்கும். மரண பயமும் நீங்கும். வீட்டில் வளர்க்கும் மாடுகளுக்கு வியாதி நிவாரணமும் கிடைக்கும். பொதுவாக அடிக்கடி இரவு நேரத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டியவர்கள், இரவு நேரங்களில் பணிபுரிபவர்கள் ஊட்டத்தூர் ஸ்ரீபைரவரை தரிசித்தல் நல்லது. ஸ்ரீகால பைரவருக்கு ஆராதனை செய்து வழிபடுவதால், இரவு நேரத்தில் ஏற்படும் இன்னல்கள் மற்றும் விபத்துகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளலாம்.

மரண பயம் நீங்கவும், இதயநோய் போன்ற கடுமையான வியாதிகளால் பீடிக்கப்பட்டவர்களும் ஊட்டத்தூர் ஸ்ரீபைரவருக்கு சந்தனக் காப்பிட்டு, அதில் மாதுளை முத்துகளைப் பதித்து, ஸ்ரீகாலாஷ்டகத்தை ஓதியும், முழு முந்திரி கலந்த உணவை தானம் அளித்தும் மேற்கண்ட குறைகளுக்குத் தக்க நிவர்த்தி பெறலாம்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism