Published:Updated:

நாரதர் உலா - தீர்வு கிடைக்குமா பக்தர்களுக்கு?

நாரதர் உலா - தீர்வு கிடைக்குமா பக்தர்களுக்கு?
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா - தீர்வு கிடைக்குமா பக்தர்களுக்கு?

நாரதர் உலா - தீர்வு கிடைக்குமா பக்தர்களுக்கு?

நாரதர் உலா - தீர்வு கிடைக்குமா பக்தர்களுக்கு?

நாரதர் உலா - தீர்வு கிடைக்குமா பக்தர்களுக்கு?

Published:Updated:
நாரதர் உலா - தீர்வு கிடைக்குமா பக்தர்களுக்கு?
பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா - தீர்வு கிடைக்குமா பக்தர்களுக்கு?
நாரதர் உலா - தீர்வு கிடைக்குமா பக்தர்களுக்கு?

நாரதரின் வருகைக்காகக் காத்திருந்த வேளையில், ‘பால் மணக்குது, பழம் மணக்குது, பழநி மலையிலே! பாரைச் சுற்றி, முருக நாமம், எங்கும் ஒலிக்குதாம்!, என்று ராகத்துடன் பாடியபடி பிரசன்னமானார் நாரதர்.

‘‘என்ன நாரதரே... பாட்டெல்லாம் அமர்க்களமாக இருக்கிறதே?’’ என்ற கேள்வியுடன் வரவேற்றோம் நாரதரை.


‘‘ஆமாம், ஒரே மாதத்தில் இரண்டு முறை பழநி முருகனை தரிசித்ததால் ஏற்பட்ட பரவசத்தில்தான் பாட்டுப் பாடினேன். நாட்டில் யார் யாரெல்லாமோ, எதற்கெல்லாமோ உரிமை கொண்டாடும்போது, நாரதருக்குப் பாட்டுப்பாடக் கூட இந்த நாட்டில் உரிமை இல்லையா...’’ என்று அங்கலாய்த்துக்கொண்டார், நாரதர்.

‘‘இரண்டாவது முறையாக பழநிக்குச் சென்று வந்துள்ளீர் என்றால், முக்கியத்துவமான விஷயங்கள் நிறைய இருக்குமே...’’ - கேள்வியை முடிப்பதற்குள் நம்மை இடைமறித்து, ‘‘ஆமாம்! சொல்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன’’ என்ற நாரதர் ஒவ்வொன்றாய் சொல்லத் துவங்கினார்.

‘‘ ஸ்வாமி நகைகள் முதல் கோயில் டெண்டர் வரை ஏகப்பட்ட குளறு படிகள் பழநி கோயிலில் நடப்பதாகச் சொன்னேன் அல்லவா? அதுபற்றி முதலில் சொல்லிவிடுகிறேன்.

தமிழகம் முழுவதும் 38,630 கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றுள் பிரசித்திப் பெற்ற 320 கோயில்கள் ஒவ்வொன்றிலும் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் வருவதாகச் சொல்கிறார்கள். அந்தவகையில், தமிழ்நாட்டிலேயே அதிக வருமானம் தரக்கூடியது பழநி முருகன் கோயில். அப்படியிருந்தும், அங்கு வரும் பக்தர்களுக்கும், கோயில் ஊழியர்களுக்கும் தேவையான வசதிகளைக் கோயில் நிர்வாகம் முறையாகச் செய்து தருவதில்லை எனும் புலம்பல்கள் அதிகமாகிவருகின்றன’’ என நாரதர் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே இடைமறித்துக் கேட்டோம்.

நாரதர் உலா - தீர்வு கிடைக்குமா பக்தர்களுக்கு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘பெரும்பாலான கோயில்களில் பக்தர்களின் பாடு திண்டாட்டம்தான் என்பது தெரிந்த விஷயம்தானே. அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள் என்றால்தான் ஆச்சரியம்! அதுசரி, ஊழியர்களுக்கு என்ன பிரச்னையாம்?’’

‘‘அதுபற்றிதான் சொல்ல வந்தேன். அதற்குள்ளாக அவசரப்படுகிறீர்களே’’ என உரிமையுடன் கோபித்துக்கொண்ட நாரதர், நமது பதிலை எதிர்பார்க்காமல் மேலும் தொடர்ந்தார்.

‘‘சம்பளம் கொடுப்பதில் ஆரம்பித்து அனைத்திலும் ஊழல் குளறுபடிகள் நிலவுவதாகக்   

நாரதர் உலா - தீர்வு கிடைக்குமா பக்தர்களுக்கு?

குறைபட்டுக்கொள்கிறார்கள். கோயிலைச் சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளர்களுக்குக்கூட முறையான ஊதியம் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு கோயில் நிர்வாகத்தின் மீது எழுந்துள்ளது’’ என்றார்.

‘‘பழநி மலைக்கோயில், கிரிவலப் பாதை, படிப் பாதை, தங்கும் விடுதிகள் ஆகியவற்றுக்கான 325  துப்புரவுப் பணியாளர்கள் நியமித்ததில் இருந்தே,  இருந்துவரும் பிரச்னை ஆயிற்றே. இன்னுமா தீர்வு வரவில்லை?’’

ஏதோ நமக்கும் சில விஷயங்கள் தெரியும் என்பதாகக் காட்டிக்கொள்ள நாம் முயற்சிக்க, ‘‘பரவாயில்லையே நன்றாக ஞாபகம் வைத்திருக் கிறீரே’’ என்று கேலித்தொனியில் நமக்குப் பாராட்டுப்பத்திரம் வாசித்துவிட்டு செய்தியைத் தொடர்ந்தார் நாரதர்.

“பழநி கோயில் ஊழியர்களின் சேமநல நிதி பிடித்ததில் நடந்த முறைகேட்டைக் கண்டித்து பழநியில் போராட்ட மெல்லாம் நடந்ததுகூட நினைவிருக்கும்.

அதையடுத்து ஒருசில மாதங்களுக்குத்தான் ஊதியம் முறைப்படி வழங்கப்பட்டது. தற்போது பழைய நிலைமையே திரும்பிவிட்டது’’ என்றார் நாரதர்.

நாரதர் உலா - தீர்வு கிடைக்குமா பக்தர்களுக்கு?

‘‘கோயில் நகைகளில் ஏதோ ஊழல் என்று சொன்னீரே?’’

‘‘ஆமாம்! `பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தங்க நகைகளில்கூட ஏராளமான முறைகேடுகள் நடப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். இந்தப் பிரச்னை எப்போது வேண்டுமானாலும் பூதாகரமாகலாம்’ எனக் கூறும் பக்தர்கள் தரப்பினர்,  கோயில் திருப்பணிக்கு வரும் உபயதாரர்களிடமும் தேவைக்கு அதிகமாக வசூலிக்கிறார்கள். எதற்கும் முறையான கணக்கும் வைத்திருப்பதில்லை’ என்றும் நம்மிடம் குறைபட்டுக் கொண்டார்கள். நானும் இதுகுறித்து விசாரித்து வருகிறேன். ஏதேனும் தகவல் கிடைத்தால் பகிர்ந்துகொள்கிறேன்’’ என்றவர், வேறொரு விஷயத்தையும் கூறினார்.

‘‘தங்க ரதம் இழுக்கும் பிரார்த்தனை துவங்கி, ரோப் கார் பயணம் வரையிலும் நடக்கும் முறைகேடுகள் நிறைய என்கிறார்கள். இதுதொடர்பானவர்கள் நாளொன்றுக்கு ஏறக்குறைய 18,000 ரூபாய் வரையில் சம்பாதிக்கிறார்களாம். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன். தங்க ரதம் இழுக்கக் கடைசி நேரத்தில் வருபவர்கள், ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தால், ரசீது இல்லாமல் ரதத்தை இழுக்க அனுமதி கிடைக்குமாம்! அதேபோல், சிறப்பு தரிசனத்துக்குக் குடும்பத்துக்கு மூவாயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறதாம்.’’

‘‘இதுபற்றி பக்தர்கள் எவரும் புகார் அளிக்கவில்லையா?’’

நாரதர் உலா - தீர்வு கிடைக்குமா பக்தர்களுக்கு?

‘‘புகார் கொடுத்தாலும் பயனேதும் இல்லை என்கிறார்கள்.  ஊழியர்கள் மீது புகார் வந்தால், `சஸ்பெண்ட் நடவடிக்கை’ என அறிவிக்கிறார் கள். ஆனால், சில நாள்களிலேயே அதே ஊழியர் எந்தத் தடையும் இல்லாமல் மீண்டும் வசூல்வேட்டையில் இறங்கி விடுகிறாராம்’’ என்ற நாரதர், வாட்ஸ்அப்பில் வந்து விழுந்த தகவலைப் படித்துவிட்டு, ‘‘அடடே அப்படியா விஷயம்’’ என்று தமக்குத்தாமே முணுமுணுத்தபடி, தலையாட்டிக்கொண்டார். என்ன ஏதென்று நாம் கேட்பதற்குள் அவரே முந்திக்கொண்டார்.

“உடையவர் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஜயந்தி விழா நடைபெறுவதையொட்டி, ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயிலில் அடிப்படை வசதிகளைச் செய்துதர வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்று செய்தியைச் சொன்னவர், அதுபற்றிய விவரங்களையும் பகிர்ந்து கொண்டார்.

‘‘சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ ராமாநுஜ சாம்ராஜ்ய சபாவின் செயலாளர் கோவிந்த ராமாநுஜதாசர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

‘ஸ்ரீராமாநுஜரின் அவதாரத் தலமான ஸ்ரீபெரும்புதூரில், ஸ்ரீராமாநுஜரின் 1000-வது ஜயந்தி விழா ஏப்ரல் 22 முதல் மே 1 வரை கொண்டாடப்பட இருக்கிறது. சுமார் 20 லட்சம் பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கோயிலிலும் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போதிய அடிப்படை வசதிகள் எதுவும் செய்துத்தரப்படவில்லை, என்று குறிப்பிட்டிருந்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே மாவட்ட ஆட்சியர், அறநிலையத் துறை செயலர், ஆணையர் ஆகியோருக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவருடைய மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள், ‘மனுதாரர் குறிப்பிட்டுள்ள கோயிலில் ராமாநுஜரின் 1000-வது விழா சுமுகமாக நடை பெறத் தேவையான நடவடிக்கைகளை நிர்வாகம் செய்து தர வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.’’

‘‘நல்லதே நடக்கட்டும்’’ என்று நாம்கூற, அதை ஆமோதித்தவராகத்  தலையாட்டிய நாரதர், மேலும் எதுவும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக அடுத்த நிமிடமே அந்தர் தியானமாகிவிட்டார்.