Published:Updated:

கேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டா?

கேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
கேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டா?

?ஆன்மிகப் பெரியவர் ஒருவரின் ஆலோசனைப்படி வீட்டில் ருத்ர பூஜை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

கேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டா?

ஆனால் சிலர், ருத்ர பூஜையை ஆலயங்களில் மட்டுமே செய்ய வேண்டும் என்கிறார்கள். இதுகுறித்து தங்களது அறிவுரையை வேண்டுகிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- க.ராமன், உடுமலைப்பேட்டை

!உலக சுகத்தையும் பேரின்பத்தையும் தரவல்ல ருத்ர பூஜையை, வீட்டில் செய்வதே உத்தமம். பொது இடங்களில் செய்யும் பூஜைக்குள் ருத்ர பூஜை வராது. பரமேஸ்வரனுக்கு `ருத்ரன்' எனும் திருநாமம் உண்டு; பஞ்சாயதன பூஜையில் ருத்ரனுக்கே முதலிடம் தருவது ஐதீகம். அந்தப் பூஜை, வீடுகளில் செய்கிற நித்தியப்படி பூஜை.

அதாவது, தனிப்பட்ட ஒருவரின் யோக க்ஷேமத்துக்காகச் செய்யப்படும் பூஜைகளை, வீட்டில் செய்ய வேண்டும். சமூக நன்மைக்காகச் செய்யும் பூஜைகளைப் பொது இடங்களில் நடத்தலாம். ஆலயங்கள், உலக நன்மையின் பொருட்டே செயல்படுகின்றன. அப்படியிருக்க, வீட்டுப் பூஜையைப் பொது இடத்துக்கு எடுத்துவரத் தேவையில்லையே?!

?நூறு சதுர் யுகங்கள் ஒரு பிரம்மனின் ஆயுள் என்று படித்தேன். இது உண்மையா? கடவுளுக் கும் ஆயுள் கணக்கு உண்டா?

- கே.வேல்மணி, திருச்சி-2

!நான்கு யுகங்களின் ஒரு சுற்று, இந்த உலகத்தின் ஆயுள். இப்படி, ஆயிரம் சுற்றுகள் முழுமை பெறுவது, பிரம்மனின் ஒரு பகல் பொழுது. இன்னும் ஓர் ஆயிரம் சுற்றுகள் பூர்த்தியானால் பிரம்மனுக்கு ‘ஒரு நாள்’ முழுமை பெறும். இப்படி ஒரு கணக்கு புராணத்தில் உண்டு.

இதையே ஆதாரமாகக் கொள்ள லாம்; நம்பலாம். மாற்று விளக்கங்கள் ஆதாரமற்றவை. ஆயுள் முடிவடைகிறது என்றால், படைப்பின் ஆயுள் முடிகிறது என்றே பொருள். பிரம்மாவுக்கு முடிவு இல்லை. எங்கும் நிறைந்த பரம்பொருள், படைப்புத் தொழிலை நிறைவேற்ற பிரம்மனின் வடிவத்தில் தோன்றியது.

கேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டா?

அறுபது வயதில் ஒருவன் ஓய்வு பெறுகிறான் என்றால், அவன் வேலையில் இருந்து ஓய்வு பெறுகிறான்; வாழ்க்கையில் இருந்து அல்ல. அதுபோல், ‘படைப்பு எனும் தொழிலில் இருந்து விடுபடுகிறான் பிரம்மன்!’ என்றே நாம் பொருள் கொள்ள வேண்டும்.

ஒரு பிரம்மனின் காலம் முடிந்து விட்டால், பரம்பொருள் வேறொரு வடிவில் படைப்பைத் தொடரும். அவருக்கும் பிரம்மன் என்றே பெயர். ஒரு நிறுவனத்தின் இயக்குநர் ஓய்வு பெறுகிறார் எனில், வேறொருவர் அந்தப் பொறுப்பை ஏற்பார். அதுபோலவே பிரம்மப் பதவியும். பரம் பொருளின் தொழிலை வைத்து வந்த பெயரே பிரம்மா!

?‘நதி மூலம்- ரிஷி மூலம் பார்க்கக் கூடாது!’ என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். சக்தி விகடனிலும் இதுகுறித்த கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லியிருக்கிறீர்கள். எங்களுக்காக, மீண்டும் ஒருமுறை விளக்கினால், பயனுள்ளதாக இருக்கும்.


-எம்.பழனியப்பன், கடையம்

!மலையில் தோன்றும் சிறிய அருவி, சமதளத்தை அடைந்ததும் விரிந்து பரந்து அகண்ட நதியாக வளர்ந்துவிடும். சிறு சிறு வாய்க்கால்களும் அதனுடன் கலந்து நதியின் பரப்பளவை அதிகரிக்கச் செய்யும்.

சூரிய வெப்பம், சந்திரனின் குளிர்ச்சி மற்றும் காற்று ஆகியவற்றின் தாக்கத்தால் அந்த நதி நீர் சுத்தமாக இருக்கும். ஆனால், மலையில் அருவி உற்பத்தியாகும் இடம், சுத்தமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அந்த இடம் அருவருப்பாகக் காட்சி தரலாம். மலையில் உள்ள மாசுக்களும் அங்கு இறந்துபோன உயிரினங்களின் உருப்படி களும் அருவி நீரில் கலக்க வாய்ப்பு உண்டு. அதைக் கண்ணுற்றவனுக்கு, நதியின் தூய்மையில் சந்தேகம் வந்து விடும்.

கேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டா?

எனவே, நதியின் மூலத்தைப் பார்த்து அதன் தரத்தை நிர்ணயிக்கக் கூடாது என்பர். மலையில் இருந்து சம தளத்தை அடைந்து நதியாக ஓடும்போது அதற்குப் பெருமை அதிகம். ரிஷிகேசத்தைவிட, ஹரித்வாரில் நீராடுவது சிறப்பு. சமையலறையைப் பார்த்து, அதன் சுகாதாரக் குறையை மனதில் கொண்டால், அங்கிருந்து வெளிவரும் பொருள்களை ஏற்க மனம் மறுக்கும்.

சேற்றில் தோன்றியது செந்தாமரை. அதற்காக தாமரையைப் பார்த்ததும் சேற்றின் ஞாபகம் வரக் கூடாது. ‘புனுகு’ தரும் நறுமணத்தை நுகர வேண்டும்; அது வெளியாகும் விலங்கினத்தின் உருப்படியைப் பார்க்கக் கூடாது. ‘வெண் சாமரம்’ வீசி, கடவுளை வழிபடுவோம். அது கௌரிமானின் ரோமங்கள் என்ற எண்ணம் வரக் கூடாது.

பறவையினம் பழத்தை  உண்டு, அதன் விதையை மல துவாரம் வழியே வெளியேற் றும். அந்த விதை முளைத்து, உருவாகும் அரச மரம், தெய்வாம்சம் நிறைந்ததாகக் கொண் டாடப்படுகிறது. ஆனால், அதன் ஆரம்பத்தை ஆராயக் கூடாது. 

தேன் அடையைப் பிழிந்து தேன் எடுக்கும் போது, தேனீக்கள் சில மடிந்திருக்கலாம். அவற்றை அகற்றிவிட்டு தேனைப் பயன்படுத்துவோம். அப்போது மடிந்த தேனீக்களை மனதில் கொண்டு வரக் கூடாது.

ஊர்ந்து செல்லும் ஓர் உயிரினத்தின் வாழ்விடம் சங்கு. அதை கடவுள் அபிஷேகத்துக்குப் பயன்படுத்துவோம். இங்கெல்லாம் மூலத்தைப் பார்க்கக் கூடாது என்பார்கள்.

அதுபோலவே ரிஷி மூலத்தையும் பார்க்கக் கூடாது. பராசர முனிவருக்கு மீனவப் பெண்ணின் வாயிலாகத் தோன்றியவர் வியாசர்.  எமதர்மனின் கணக்குப் பிள்ளையான சித்திரகுப்தன், பசுவின் வயிற்றில் இருந்து தோன்றியதாகக் கதை உண்டு. அது, அவனது பெருமைக்கு இழுக்கல்ல. குடத்தில் தோன்றியவர் ஆயினும் கடல் நீர் முழுவதையும் குடித்துப் பெருமை பெற்றவர் அகத்தியர்.

கேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டா?

முனிவர்கள், ரிஷிகள் மற்றும் அறிஞர்கள் ஆகியோரது செயல்பாடுகளில் சில, அறத்தை மீறுவதுபோல் தோற்றமளிக்கும். ஆனால், அவர்களது சாகசச் செயல்களுக்கு அறத்தில் இடம் இருக்கும். அவர்களிடத்தில் நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும் எனில், அவர்களது மூலத்தை ஆராயக் கூடாது.

ஆதிசங்கரரை இழிவுபடுத்த எண்ணிய ஒருவன், அவரைப் பின்தொடர்ந்து சென்று கண்காணித்தான். ஒருநாள் சங்கரருக்குத் தாகம் மேலிட்டது. அவர், அருகில் உள்ள தாழ்ந்தவன் ஒருவனது வீட்டுக்குள் நுழைந்து நீர் பெற்று அருந்தினார். அவரைப் பின்தொடர்ந்தவன், ‘இதை வைத்தே சங்கரரை வீழ்த்திவிடலாம்!’ என்று அகமகிழ்ந்தான்.

மேலும் அவரை பின்தொடர்ந்து சென்றான். சற்று தூரத்தில் ஆசார்யருக்கு மீண்டும் தாகம். உடனே, சாலை ஓரம் இருந்த கொல்லப் பட்டறையில் நுழைந்தார். அங்கு இரும்பை உருக்கி வைத்திருந்தனர். அதையே நீராகக் கருதி பருகினார் சங்கரர்.
பின்தொடர்ந்தவன் திடுக்கிட்டான். ‘ஆதிசங்கரருக்கு, தாழ்ந்தவன் வீட்டுத் தண்ணீரும் கொல்லப் பட்டறையின் காய்ச்சி உருக்கப் பட்ட இரும்பும் ஒன்றே!’ என்பதைப் புரிந்து கொண்டான். அவரது சிந்தனையைத் தன்னால் எட்ட இயலாது என்று ஒதுங்கி விட்டான் என்றொரு செவிவழித் தகவல் உண்டு.

‘ராமனின் நடத்தையைப் பின்பற்ற வேண்டும். கிருஷ்ணனின் நல்லுரையைக் கேட்க வேண்டும்!’ எனச் சொல்லும் பெரியோர்கள், கிருஷ்ணனின் சாகசச் செயல்களைப் பின்பற்றக் கூடாது என்பார்கள். தலைவருக்குப் பாராட்டு விழா. அப்போது அவரது சிறப்பைப் போற்றிப் புகழ்வோம். அவரை எதிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அவரது குறைகளைப் பட்டியலிடு வோம். விமர்சனம் செய்வதே இயல்பாக மாறிப் போனால் அது, சொந்த வாழ்க்கையில் ஏற்படும் விஷயங்களில் பாகுபாடின்றி ஊடுருவி மனதைக் கலக்கிவிடும். இதைத் தவிர்க்கவே ‘மூலத்தைப் பார்க்காதே!’ என்றார்கள்.

தங்களது சிந்தனைக்கு ஒரு வார்த்தை... நதிகளும், ரிஷிகளும் பரோபகாரத்துக்காக வேதங்களை அர்ப்பணித்தவர்கள். அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜீவாதாரமாகத் திகழ்வது நதி. சிந்தனையாளர்களுக்கு வழிகாட்டுபவர்கள் ரிஷிகள். அவர்களது தன்னலமற்ற செயல்பாடுகளைப் பார்க்க வேண்டுமே தவிர, அவர்களது மூலத்தை ஆராய்ந்து குறைகளைச் சுட்டிக்காட்டுவது தவறு.

?தெய்வ ஸ்லோகங்களை டி.வி.டி பிளேயரில் ஒலிக்கவிட்டுக் கேட்பதால், உரிய பலன் கிடைக்குமா?

-சு.சரஸ்வதி. சென்னை-44


!புனிதமான ஸ்லோகங்கள், நம் வாய் மொழியாக... வேத கோஷமாக வெளிவர வேண்டும். தேசியகீதம் இசைக்கப்படும்போது... எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும் அதிலிருந்து விடுபட்டு, நம் மனம் தேசியகீதத்தில் ஒன்றிவிடும். காரணம், உயிரினும் மேலாக தேசியகீதத்தை நாம் மதிக்கிறோம். அதுபோல, எழுதாக் கிளவியாகிய வேதத்தின் ஸ்லோகங்களையும் நாம் போற்ற வேண்டும்.

‘வேத கோஷத்தில்... வேத ஸ்லோகங்களை உச்சரிக்கும்போது, எத்தனை எழுத்துகள் வெளிப்படுகின்றனவோ, அத்தனை முறை பரம்பொருளின் திருநாமத்தை (ஹரி நாமத்தை) சொன்ன பலன் கிடைக்கும்’ என்கிறது தர்ம சாஸ்திரம் (யாவந்தி வேதாக்ஷராணி...).

சங்கீதக் கச்சேரி, காலட்சேபம் மற்றும் திரைப்பாடல்கள் முதலானவற்றை டேப் ரெக்கார்டர் அல்லது சி.டி. பிளேயரில் ஒலிக்க விட்டு, அவற்றைக் கேட்டுக்கொண்டே வேலையில் ஈடுபடுவது உண்டு. ஆனால் வேத ஸ்லோகங்களைக் கேட்பதில், இந்த அணுகுமுறை கூடாது. வேதம் கற்பதற்கும், வேத ஸ்லோகங்களை உச்சரிப்பதற்கும் கடும் கட்டுப்பாடுகளை வேதமே விதித்திருக்கிறது. இதை, கடைச் சரக்காக மாற்றுவதில் தர்ம சாஸ்திரத்துக்கு உடன்பாடில்லை.

கேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டா?

அதே நேரம்... தங்களின் ஆதங்கமும் புரிகிறது. வேதம் கற்க இயலவில்லை; வேதம் ஓதுவோரை அழைத்து வேதம் ஓதச் செய்து கேட்கலாம் எனில்... அதற்குப் பொருளாதாரச் சூழல் இடம் தரவில்லை.  ஆகவே, ஸ்லோகங்களை சி.டி-க்கள் மூலம் கேட்க ஆசைப்படுகிறீர்கள். உங்களின் ஆர்வம், ‘விஞ்ஞானத்தின் உதவியால் வேதம் கேட்கும் வாய்ப்பைப் பயன்படுத்துவதில் தவறில்லை’ என்பதாக எண்ணி இப்படிச் செயல்பட வைக்கிறது. தங்களின் ஆர்வத்தின் பொருட்டு, இறைவனின் திருநாமங்கள் அடங்கிய சி.டி-க்களைப் பயன்படுத்துங்கள். அதற்கேற்ற அளவில் பயன் உண்டு!

?என் மகனுக்குக் கல்யாணப் பேச்சை ஆரம்பித்துவிட்டோம். இதையொட்டி, அவனது ஜாதகத்தை ஜோதிடர் ஒருவரிடம் கொண்டு சென்றோம். ‘இரவில் ஜாதகம் பார்க்கக்கூடாது’ எனக் கூறி மறுநாள் வரச் சொன்னார். அவர் கூறுவது போன்று, இரவில் ஜாதகம் பார்த்தால் பலிக்காதா?

- சொ.ஜெயலட்சுமி, திருநெல்வேலி-2

!இரவில் ஜாதகம் பார்க்கக் கூடாது. திருமணத்துக்காக ஆண்- பெண் இருவரது ஜாதகங்களையும் ஆராயலாம்.

கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால், ஜாதகம் பார்க்க வேண்டி இருக்காது. நினைத்த போதெல்லாம் ஜாதகம் பார்ப்பது நமது பலவீனம். முன்னேற்றத்துக்கான முயற்சிகள் எதையும் மேற்கொள்ளாமல், ஜாதகம் அதிர்ஷ்டம் தரும் என்று எண்ணக் கூடாது. இந்த எண்ணமே, நம்மை அடிக்கடி ஜாதகம் பார்க்கத் தூண்டும்.

- பதில்கள் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism