Published:Updated:

கல்யாண வரம் தருவார் `காட்சி தந்த ராமன்’

கல்யாண வரம் தருவார் `காட்சி தந்த ராமன்’
பிரீமியம் ஸ்டோரி
கல்யாண வரம் தருவார் `காட்சி தந்த ராமன்’

திருமலை

கல்யாண வரம் தருவார் `காட்சி தந்த ராமன்’

திருமலை

Published:Updated:
கல்யாண வரம் தருவார் `காட்சி தந்த ராமன்’
பிரீமியம் ஸ்டோரி
கல்யாண வரம் தருவார் `காட்சி தந்த ராமன்’

திருநெல்வேலிக்கு அருகில் அருகன்குளம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது, காட்டுராமர் ஆலயம். இந்தக் கோயிலைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, ‘காட்டுப் பகுதியில் இருப்பதால் இப்படியொரு திருப்பெயர் வந்திருக்கலாம்’ என்றே எண்ணத் தோன்றும். ஏனெனில், அமைதியான வனச்சூழலிலேயே இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. ஆனால், ஸ்தல புராணம் வேறோர் அற்புதமான காரணத்தைச் சொல்கிறது.

கல்யாண வரம் தருவார் `காட்சி தந்த ராமன்’

ராவணன், சீதையைக் கடத்திச் செல்லும்போது, அவனைத் தடுத்து போராடிய ஜடாயுவின் இறக்கைகளை வெட்டி வீழ்த்தி னான். குற்றுயிராகக் கிடந்த ஜடாயு, ராமனைத் தரிசித்து விவரம் சொன்னபிறகு மோட்ச கதி அடைந்தார். அவருக்கு ஸ்ரீராமன் மோட்சம் அளித்த இடமாக பல திருத்தலங்கள் கருதப்படுகின்றன. அவற்றில் இந்தத் தலமும் ஒன்று.

அப்படி, ஸ்ரீராமனைத் தரிசித்த ஜடாயு, அவருடைய மணக் கோலத்தைத் தனக்குக் காட்டும்படி வேண்டினாராம். ஆனால், அப்போது சீதாதேவி இலங்கையில் இருந்ததால், தமது மணக் கோலத்தைக் காட்டமுடியாத ராமபிரான்,  ஸ்ரீலட்சுமி நாராயணராக அருள்கோலம் காட்டினாராம். பிறகு, ஸ்ரீராமன் இலங்கையில் இருந்து திரும்பும்போது, சீதாதேவி சமேதராக ஜடாயுவுக்கு மணக் கோலத்தைக் காட்டியருளினாராம். இவ்வாறு திருமணக் கோலத்தைக் காட்டி அருளியதால், காட்சியளித்த ராமன் என்று திருப்பெயர் ஏற்பட, அதுவே வழக்கில் ஸ்ரீகாட்டுராமன் என்று மருவியதாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கல்யாண வரம் தருவார் `காட்சி தந்த ராமன்’

இந்தக் கதையோடு தொடர்புடைய வேறு இரண்டு திருக்கோயில்களும் உண்டு. ஆமாம். இந்தக் கோயிலுக்கு அருகி லேயே ஜடாயுவுக்கு முதலில் காட்சியளித்த ஸ்ரீலட்சுமி நாராயணர் கோயில் கொண்டிருக்கிறார். அதேபோல், ஸ்ரீராமன் வழிபட்ட தாகச் சொல்லப்படும் ஸ்ரீராமலிங்க ஸ்வாமி கோயிலும் உள்ளது. இந்தச் சிவாலயத்தில் ஸ்ரீராமன் `பிண்டராமன்’ எனும் திருப்பெயருடன் அருள்பாலிப்பது விசேஷமாகும்.

கல்யாண வரம் தருவார் `காட்சி தந்த ராமன்’

ஸ்ரீலட்சுமி நாராயணர் ஆலயத்துக்கு அருகில் ஜடாயு தீர்த்தம் உள்ளது. முன்னோர் ஆராதனைக்கு உகந்த நாள்களில் இங்கு வந்து ஸ்வாமியை வழிபட்டுவிட்டு, முன்னோர்களை வழிபடுவதும், ஆராதிப்பதும் சிறப்பு என்கிறார்கள். இதனால் பித்ருதோஷங்கள் நீங்கும், முன்னோர் ஆசியால் நம் சந்ததி சிறக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

கல்யாண வரம் தருவார் `காட்சி தந்த ராமன்’

காட்டுராமர் ஆலயத்தில் ராமநவமி வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கல்யாணக் கோலம் காட்டிய தலம் இது என்பதால், தோஷங்களாலும் கல்யாணத் தடையாலும் வருந்தும் அன்பர்கள், இங்கு வந்து வழிபட்டால், விரைவில் அவர்களுக்குக் கல்யாண வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஸ்ரீகாட்டுராமர் ஆலயத்தில், சந்நிதிக்கு எதிரில் அபூர்வக் கோலத்தில் தரிசனம் காட்டுகிறார் ஸ்ரீஆஞ்சநேயர். ஆமாம்... இவர் வயோதிகக் கோலத்தில் அருள்கிறாராம். இவருக்கு, நீராஞ்சன தீபம் ஏற்றி வழிபட்டால், கல்வி, உத்தியோக பாக்கியம், திருமணம், புத்திரப்பேறு, ஆரோக்கிய வாழ்வு, செல்வபோகம் ஆகிய  ஆறு பாக்கியங்களை அருள்வார் என்கிறார்கள். 

கல்யாண வரம் தருவார் `காட்சி தந்த ராமன்’

அனுதினமும் ஸ்ரீராம பிரானைத் தரிசித்துக் கொண் டிருக்கும் ஸ்ரீஆஞ்சநேயர், அதன் பலனாக, தாம் பெற்ற பாக்கியத்தை, பக்தர்களுக்கு வழங்குவதாக ஐதீகம்.

வரும் ராமநவமி புண்ணிய தினத்தில், நெல்லைச்சீமையில் திகழும் இந்த மூன்று கோயில்களுக்கும் சென்று வழிபட்டு வாருங்கள், உங்கள் வாழ்க்கையில் நல்லதொரு முன்னேற்றத்தைக் காட்டி அருள்வார் ஸ்ரீகாட்டுராமன்!

படங்கள்:எல்.ராஜேந்திரன்

எப்படிச் செல்வது?

திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்தில் (நெல்லைச் சந்திப்பு) இருந்து, அருகன்குளத்துக்கு பேருந்து வசதிகள் உள்ளன.

இந்த ஊரிலிருந்து நாரணம்மாள் புரம் எனும் இடத்துக்குச் செல்லும் பேருந்துகளில் ஏறினால், கோயிலின் அருகிலேயே இறங்கிக்கொள்ளலாம். அருகன்குளத்தில் இருந்து ஷேர் ஆட்டோக்களும் உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism