பூக்களால் இறைவழிபாடு செய்யப்படுவதால் அதற்கு பூசெய், பூசனை என்ற பெயர்கள் வழங்குவதாகச் சான்றோர்கள் கூறுவர்.
பூக்களை ஆய்ந்து, தூய்மைப்படுத்தி, தூயநீரில் நனைத்த பின்னரே இறைவனுக்குச் சூட்ட வேண்டும். பன்னீரில் நனைத்துச் சூட்டுவது இன்னமும் சிறப்பு. வாசனைப் புகையில் காட்டிச் சூட்டும் வழக்கமும் உண்டு.

இறைவனுக்குப் பூக்களை எண்ணிச் சார்த்தும் வழக்கமில்லை. நிறுத்து அல்லது அளந்தே அர்ச்சிப்பது வழக்கம். புராணங்கள் பூக்களை அளந்து அல்லது நிறுத்துப் பூசிக்க வேண்டும் என்று கூறுகின்றன. அதேபோல், பூக்களால் அர்ச்சிக்கும்போது, இறைவனின் திருப்பெயரைச் சொல்லி, ‘போற்றி’ கூறி அவர் மீது மலரிட்டு வழிபட வேண்டும்.
‘புஷ்பவிதி’ எனும் நூலில் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, புதர்ப்பூ என்று நான்கு வகையான மலர்களும், தளிர்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல் வாரப் பூக்கள் என்று ஒவ்வொரு கிழமைக்கும், மாதப் பூக்கள் என்று ஒவ்வொரு மாதத்துக்கும் உரிய பூக்களையும் வகைப்படுத்திச் சொல்கிறது புஷ்பவிதி.
கிழமையும் மலர்களும்
ஞாயிறு-தாமரை, திங்கள் - வெள்ளாம்பல், செவ்வாய் -செங்கழுநீர், புதன்-கயலாந்த கரை, வியாழன்-குவளை, வெள்ளி-வெண்தாமரை, சனி- நீலோற்பலம்.
மாதங்களும் மலர்களும்
ஆண்டின் 12 மாதங்களிலும் 12 வகையான பூக்களைக்கொண்டு சிறப்பு வழிபாடு செய்கின்றனர். குறிப்பாக, பெளர்ணமி அன்று அம்மாதத்துக்குரிய மலர்களால் அர்ச்சித்து வழிபட ஆயிரம் மடங்கு நன்மை கிடைக்கும்.
சித்திரை - முருக்கன்
வைகாசி - புன்னை
ஆனி - வெள்ளெருக்கு
ஆடி - அலரி
ஆவணி - செண்பகம்
புரட்டாசி - கொன்றை
ஐப்பசி - தும்பை
கார்த்திகை - கத்திரி
மார்கழி - பட்டி
தை - தாமரை
மாசி - நீலோற்பலம்
பங்குனி - மல்லிகை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூக்களும் பலன்களும்
அறுகம்புல் சூட்டி வழிபட்டால் மரண பயம் நீங்கும்; ஆயுள் விருத்தியாகும். கருவூமத்தை, பிள்ளை பாக்கியம் அளிக்கும். அகத்திப்பூ, புகழைத் தரும். துளசி, எண்ணியதை எண்ணியபடி நிறைவேற்றும். வெள்ளை ஊமத்தை, பகைவரை வெல்லும் வரத்தை அருளும். அலரிப்பூ, நோய்களை நீக்கி வலிமையான உடலையும், துளசி, லட்சுமி கடாட்சத்தையும் அருளும். மல்லிகைப்பூவால் வழிபட்டால் அருமையான மனைவி அமைவாள். மலை மல்லிகை குறைவற்ற தான்யச் சம்பத்தைக் கொடுக்கும்.