Published:Updated:

சக்தியர் சங்கமம் - பூஜையறையில் நீங்கள்...

சக்தியர் சங்கமம் - பூஜையறையில் நீங்கள்...
பிரீமியம் ஸ்டோரி
சக்தியர் சங்கமம் - பூஜையறையில் நீங்கள்...

பெண்களுக்கான பூஜையறை பொக்கிஷம்!சுபா கண்ணன், படம்: பா.காளிமுத்து

சக்தியர் சங்கமம் - பூஜையறையில் நீங்கள்...

பெண்களுக்கான பூஜையறை பொக்கிஷம்!சுபா கண்ணன், படம்: பா.காளிமுத்து

Published:Updated:
சக்தியர் சங்கமம் - பூஜையறையில் நீங்கள்...
பிரீமியம் ஸ்டோரி
சக்தியர் சங்கமம் - பூஜையறையில் நீங்கள்...

ங்கைய ராகப் பிறப்பதற்கே - நல்ல
மாதவஞ் செய்திட வேண்டும், அம்மா!
பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ - இந்தப்
பாரில் அறங்கள் வளரும், அம்மா!

        - கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை

க்தி சகோதரிகளே! இந்தப் பகுதி முழுக்க முழுக்க உங்களுக்காகவே. ஆலயங்கள், வழிபாடுகள், விரதங்கள், யாத்திரைகள், ஆன்மிக அனுபவங்கள் என உங்களின் படைப்புகளுக்காகவே இந்தப் பக்கங்கள். வாருங்கள் இறைச்சிந்தையோடு கரம்கோப்போம்.

சக்தியர் சங்கமம் - பூஜையறையில் நீங்கள்...

னிதர்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய நான்கு வழிபாடுகளை நமது சாஸ்திரங்கள் சொல்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சக்தியர் சங்கமம் - பூஜையறையில் நீங்கள்...

அவை: குலதெய்வ வழிபாடு, இஷ்டதெய்வ வழிபாடு, கிராமதேவதை வழிபாடு (அருகில் உள்ள கோயிலில் குடியிருக்கும் தெய்வம்), நித்ய வழிபாடு.

இவற்றில் நித்ய வழிபாடு என்பது, அனுதின மும் நமது வீட்டில் நாம் செய்யும் பூஜையாகும்.இதன் அவசியம், நியதிகள் மற்றும் தாத்பர்யங்கள் குறித்துத் தெரிந்துகொள்வோமா?

பூஜை அறையில் விளக்கேற்றி (கடலை எண்ணெய் தவிர்த்து), நமஸ்கரித்து, தெரிந்த ஸ்லோகங்களை அல்லது துதிப்பாடல்களைச் சொல்லி வழிபட வேண்டும். ஸ்லோகங்கள், துதிப்பாடல்கள் தெரியாதவர்கள், புத்தகத்தைப் பார்த்துப் படித்தும் வழிபடலாம்.

`தீப ஜ்யோதி நமாம்யகம்' என்கிறது சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்று. எவரது வீட்டில் அந்திச் சந்தியில் திருவிளக்கு பிரகாசிக்கிறதோ, அங்கே மகாலட்சுமி நித்யவாசம் செய்கிறாள். ஆகவே, அனுதினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது அவசியம்.

தினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால்,  இல்லத்தில் புறயிருள் நீங்குவது மட்டுமின்றி, நம் மனதில் உள்ள அறியாமை எனும் அக இருளும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள். விஞ்ஞான ரீதியாகவும் விளக்கொளி வீட்டுச்சூழலை புனிதப்படுத்தும் என்பார்கள் பெரியோர்கள்.

 பூஜையறைக்குள் போகும்போது அலைபாயும் கூந்தலைத் தவிர்த்துவிடுங்கள். கூந்தலில் இருந்து நீர் சொட்டுதல் கூடாது.

அதேபோல், தலையில் துண்டு கட்டியபடி விளக்கேற்றுவதும் தவறு. முடியை நன்கு உலர்த்திப் பின்னலிட்ட பிறகு, நெற்றியில் அவரவர் வழக்கப்படி திலகம் இட்டுக்கொண்டு விளக்கேற்றுதல் வேண்டும்.

பூஜையறைக்குள் கோலமிடுவது அவசியம்.

பச்சரிசி மாவால் கோலமிடுங்கள். வாய்ப்பு இல்லாதவர்கள், கோலக்கல் அல்லது கோல மாவு வாங்கி, அவற்றால் கோலமிடலாம்.

சக்தியர் சங்கமம் - பூஜையறையில் நீங்கள்...

அதேபோல், பூஜை அறையில் ஏதேனும் மலரைக்கொண்டு அலங்கரிப்பது நல்லது. ரோஜா, செம்பருத்தி, அரளி, தும்பை ஆகிய மலர்களை கடவுள் படங்களுக்குச் சமர்ப்பிக்கலாம்.

அறுகம்புல், வில்வம், துளசி, மாசிபத்ரம் ஆகிய இலைகளும் வழிபாட்டுக்கு உகந்தவை.

பூஜையறையில் சிலர் அட்சதை கொண்டு அர்ச்சிப்பார்கள். இந்த அட்சதை அரிசி முனை முறியாத அரிசியாக இருக்க வேண்டும்.  வீட்டில் அட்சதை இருப்பது மங்கலத்தைப் பெருக்கும்.

வழிபாட்டில் மனமுருகி கடவுளிடம் வேண்டும்போது, நேர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கும்படி, மனதை மலர்ச்சியுடன் வைத்துக்கொள்ளுங்கள்.

வாரத்துக்கு ஒருமுறை பூஜை பாத்திரத்தைக் கழுவி, சுத்தமாக வைத்திருங்கள். எலுமிச்சை, விபூதிகொண்டு பூஜை பாத்திரங்களைத் துலக்குங்கள். விளக்கின் மேற்பகுதி மற்றும் செல்ஃப்களில் கரிபடிந்தால், காட்டன் துணியால் அழுத்தித் துடைத்தாலே போய் விடும்.

பூஜை அறையில் நைவேத்தியம் செய்யும் போது, மணியோசை அவசியம். இந்த ஓசையைக் கேட்டு இறைவன் நமது வீட்டுக்கு வருவதாக ஐதீகம். மணியைத் தரையில் வைக்கக் கூடாது. அதேபோல், பூஜையறை தீர்த்தத்தை நாள்தோறும் மாற்ற வேண்டும்.

படுக்கச்செல்லும் முன் பூஜை அறை தீபத்தைக் குளிர்விக்க மலர்களைப் பயன் படுத்தலாம். இதுதான் சரியான வழிமுறை. வாயால் ஊதியோ, கைகளால் விசிறியோ தீபச்சுடரை அணைக்கக் கூடாது.
பூஜை அறையையும் கோயிலாகப் பாவித்து வழிபட ஆரம்பித்தால், இறையருள் நமது இல்லத்தில் பரிபூரணமாக நிறைந்திருக்கும்; லட்சுமிகடாட்சம் என்றென்றும் நிலைத்திருக் கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்​.

வாழ்க வளமுடன்!

சந்திப்பு: வே.கிருஷ்ணவேணி

மாடல்:  சுதா செல்வக்குமார்

உங்களுக்குத் தெரியுமா?

சக்தியர் சங்கமம் - பூஜையறையில் நீங்கள்...

தாமிரப் பாத்திரத் தண்ணீரும் வெண்கல விளக்கு தீபமும்!

தாமிரப் பாத்திரத்தில் வைத்து பருகும் நீரும், வெண்கல விளக்கில் ஏற்றும் தீபமும், தங்கத் தட்டில் சாப்பிடும் உணவும், மண்பாண்டத்தில் சமைக்கும் சோறும், ஈயப் பாத்திரத்தில்
வைக்கும் ரசமும், கல் சட்டியில் வைக்கும் குழம்பும் மிகவும் சிறப்பானவை.

- எஸ்.ராமச்சந்திரன், சென்னை

 சாப்பிட உகந்த பாத்திரங்கள்!

கிரஹஸ்தர்கள் வெள்ளி, தங்க, வெங்கலப் பாத்திரங்களிலும், மா, பலா, தென்னை, வாழை, வில்வம் போன்ற இலைகளில் சாப்பிடலாம்.

பிரம்மசாரி, சன்யாஸி இவர்கள் தாமரை, புரசு இலைகளில் சாப்பிடலாம். அதேபோல், பிரம்மசாரி தாமிரப் பாத்திரத்திலும் சாப்பிடலாம். கையிலும், துணியிலும், இரும்புப் பாத்திரத்திலும் ஆல், அரசு. எருக்கு இலைகளில் உணவை வைத்துச் சாப்பிடக் கூடாது என்கிறது சம்க்ஷேப தர்ம சாஸ்திரம்.

- பத்மா, பங்களாப்புதூர்

மும்முறை ஆராதனை எதற்குத் தெரியுமா?

விளக்கு தீபம் இறைவனின் ஒளி வடிவம். ஆகவே விளக்குகளைத் தரையில் வைக்கக் கூடாது. மரப்பலகையில் கோலமிட்டு, அதன் மீதுதான் வைக்க வேண்டும். அர்ச்சனையின்போது பூக்களை முழுமையாகச் சமர்ப்பிக்க வேண்டும். இதழ்களைத் தனித்தனியாகப் பிய்த்து அர்ச்சனை செய்யக் கூடாது.

கடவுளுக்கு மும்முறை ஆராதனைக் காட்ட வேண்டும். முதலாவது உலக நன்மைக்காக, இரண்டாவது ஊர் நன்மைக்காக, மூன்றாவது உயிர்களின் நன்மைக்காக.

- லட்சுமி நாராயணன், திருச்சி

சக்தியர் சங்கமம் - பூஜையறையில் நீங்கள்...

 பெண்கள் எல்லோரும் கிரகலட்சுமிகள்!

சமீபத்தில் எங்கள் உறவில் ஒரு கல்யாணம் நடந்து முடிந்தது. மணப் பெண்ணை, மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்துச் சென்றோம். அப்போது ஆரத்தி எடுத்து மணப்பெண்ணை வரவேற்றதோடு, அவள் கையில், சுடர்விடும் காமாட்சி விளக்கைக் கொடுத்து உள்ளே வரச் செய்தார்கள்.

ஆரத்தி எடுப்பதைப் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால், கையில் விளக்கோடு உள்ளே வரச் சொல்வது ஏனென்று தெரிந்துகொள்ள ஆசை. அருகில் நின்றுகொண்டிருந்த பையனின் பெரியம்மாவிடமே அதுபற்றி கேட்டேன். ‘‘வீட்டுக்கு வரும் புதுப்பெண் மகாலட்சுமி அம்சமாச்சே. அதனால்தான் இப்படி’’ என்று பொத்தாம்பொதுவாக அவர் பதிலளிக்க, அங்கேயிருந்த பெரியவர் ஒருவர், இன்னும் விரிவாக விளக்கினார்.

‘‘இங்கே காமாட்சி விளக்கு கொடுப்பதுபோல், வேறு சில இடங்களில் வாசலில் தானியப் பாத்திரத்தை வைத்திருப்பார்கள். மணப்பெண் வலக்காலால் அதை இடறி விட்டுவிட்டு உள்ளே நுழைவாள். கேரளாவில், அவள் கையில் தானியப் பாத்திரத்தைக் கொடுப்பார்கள். அவள் அதை வீட்டுக்குள் எடுத்துச் சென்று விளக்கேற்றி வழிபடுவாள். அதனால் அந்த வீட்டில் உணவு தானியங்களும், செல்வமும், அமைதியும், ஆனந்தமும் பெருகும் என்பது ஐதீகம்.

மணப்பெண் என்றில்லை... இல்லறப் பெண்கள் எல்லோருமே கிரகலட்சுமியின் அம்சம் என்று புராணங்கள் சொல்கின்றன. அதாவது அறிவு, அடக்கம், பக்தி, ஒழுக்கம் மிகுந்த பெண்களிடம் லட்சுமி வாசம் செய்கிறாளாம். அவளால்தான் அந்த வீட்டில் செல்வ கடாட்சம் பெருகும். அவளைக் கொண்டாடினால், அந்த வீட்டை லட்சுமி தன் தலைமேல் வைத்துக் கொண்டாடுவாள்!’’ என்றார் அவர்.  ஆக, பெண்களைப் போற்றும் வீட்டில் லட்சுமிகடாட்சத்துக்குக் குறைவே இல்லை!

- சங்கரி லிங்கம், கடலூர்-2