திருத்தலங்கள்
தொடர்கள்
இளைஞர் சக்தி
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

இந்த வழிபாடுகள் இதற்காகத்தான்!

இந்த வழிபாடுகள் இதற்காகத்தான்!
பிரீமியம் ஸ்டோரி
News
இந்த வழிபாடுகள் இதற்காகத்தான்!

எஸ்.ராமச்சந்திரன், படம்: ந.வசந்தகுமார்

 விநாயகருக்கு 11 செவ்வாய்க்கிழமைகளில் `கணேச த்ரிஸதீ’ அர்ச்சனை செய்து வழிபட்டால், வெவ்வினைகள் அனைத்தும் நீங்கும். ஜாதகத்தில் கேது கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, நற்பயன்கள் கிடைக்கும்.

இந்த வழிபாடுகள் இதற்காகத்தான்!

• பௌர்ணமி தினங்களில் குரு பகவானுக்கு பசு நெய்யூற்றி ஐந்து தீபங்கள் ஏற்றி வழிபட்டால், குரு பார்வை கிடைக்கும்; அவரின் திருவருளால் திருமணப்பேறு வாய்க்கும்.

• ஸ்வயம்வர பார்வதிதேவியைக் கலசத்தில் எழுந்தருளச் செய்து,  அம்பாளுக்கு உகந்த நாள்களில் சிரத்தையோடு பூஜித்து வழிபட்டு வந்தால், தடைகள் நீங்கி, விரைவில் கல்யாண யோகம் கூடிவரும்.

• செவ்வாய்க்கிழமைகளில் அங்காரக மங்கள ஸ்தோத்திரத்தைப் படித்து, செவ்வாய் பகவானுக்குத் தீபமேற்றி வழிபடுவதால், செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள் மட்டுப்படும்.

• கல்யாண அஷ்டபதியை திவ்யநாம கீர்த்தனையோடு, ராதா கல்யாணமுறை செய்தால் இனிமையான கணவனை அடையலாம்.

• தினமும் காலையில் கிருஷ்ண பகவான் முன்பு தீபமேற்றிவைத்து, கோதை ஆண்டாள் அருளிய வாரணமாயிரம் பாடலை மனமுருகப் பாடி வழிபட்டு வந்தால், விரைவில் கல்யாண வரம் கிடைக்கும்.

• சஷ்டி திதி நாள்களிலும், விசாகம் மற்றும் கிருத்திகை நட்சத்திரத் தினங்களிலும் முருகப்பெருமானுக்கு சிவப்பு வண்ணப் பூக்களைச் சமர்ப்பித்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபட்டால், புத்திர சம்பத்து உண்டாகும்.