‘சிந்தையில் கந்தனை வைத்தால் வாழ்வில் கவலைகளே வராது’ என்பார்கள் பெரியோர்கள். ஆமாம், எக்காரியத்தைத் துவங்கினாலும் முருகப் பெருமானின் திருவுருவை, பாதாதிகேசமாக மனதில் தியானித்து வழிபட்டால், அதன்பிறகு அந்தக் காரியத்தில் வெகு எளிதில் வெற்றிபெறலாம்.

இதோ, வரும் 14.4.17 அன்று `ஹேவிளம்பி' தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புதுவருடத்தின் ராஜாதிபதி செவ்வாய்.

அவருக்கு உகந்த தெய்வமும் வேலவனே. ஆக, வரும் வருடம் வளமுடன் திகழ, நாமும் ஆனந்தவேலவனின் அழகுத் திருவுருவைத் தியானித்து வழிபட்டு வரம்பெறுவோம். அதற்குக் கீழ்க்காணும் அற்புதப் பாடல் நமக்கு உதவும்.

ஆறுமுகமும் பனிரண்டுகையும் வேலும்
அலங்கார ஆபரணமும் அணிந்த மார்பும்
திருமுகமும் வெண்ணீறும் புனைந்தமெய்யும்
ஜெகமெல்லாம் புகழ்படைத்த சுப்ரமண்யா
முருகா சரவணபவனே கார்த்திகேயா
முக்கணனார் புத்திரனே உக்ரவேலா
இருவருமே உனைப்பணிந்தோம் பழநிவேலா
இதுசமயம் அடியாரை
உயிர்க்காத்து ரட்சிப்பாயே!

- ஆறுமுகசுவாமி விருத்தம்

இந்தப் பாடலை அனுதினமும் பாடி, முருகனுக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டால், சங்கடங்கள் தீரும்; சந்தோஷம் பெருகும்.

வேலுண்டு வினையில்லை!