சென்னை-பிராட்வே பகுதியில் ராஜமுதலி தெருவில் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு சென்னகேசவப் பெருமாள். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் அலங்காரப் பிரியர் என்றால், இந்தச் சென்னகேசவப் பெருமாள் அன்னப் பிரியர்!

இவருக்கு நாள்தோறும் விதவிதமான அமுதுகள், அமுதுபடி செய்யப்படுகின்றன. சாதாரண நாள்களில் கேசரி, சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், ஓரை வகைகள் அமுதுபடி செய்யப்படுகின்றன. விரத (அமாவாசை, ஏகாதசி போன்ற) நாட்களில் தோசை அமுதுபடியா கும். காஞ்சிபுரம் இட்லியும் இவ்வாலயப் பெருமாளுக்குக் குறிப்பிட்ட விசேஷ நாள்களில் அமுது செய்யப்படுகிறது. இந்தக் கோயிலின் பிரதான பிரசாதம் ஷீரான்னம் ஆகும்.

இது உடையவருக்கும் உகந்த அமுதாகும். திருவரங்க பெருமாளுக்குச் சமர்ப்பிக்கப்படும் அமுதுகளிலும் இந்த ஷீரான்னம் உண்டு என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த அமுதை சமைத்து, உங்கள் வீட்டில் அருளும் பெருமாளுக்கும் அமுதுபடி செய்து அருள் பெறலாமே. எப்படிச் செய்வது எனத் தெரிந்துகொள்வோமா?

தேவையான பொருள்கள்:

பொன்னி பச்சரிசி: 500 கிராம், பசும்பால்: 1 லிட்டர், பெரிய கற்கண்டு: 1.25 கி.கி, சர்க்கரை: 1 கி.கி, நெய்: 700 கிராம்; ஏலக்காய், பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ, அக்ருட், முந்திரி, திராட்சை ஆகியன தேவையான அளவில்.

செய்முறை: இளஞ்சூடு கொண்ட நீரில் பச்சரிசியை ஊற வைக்க வேண்டும். அடிப்புறம் கனமான ஒரு பாத்திரத்தில் கால் லிட்டர் தண்ணீர் நிரப்பி, அது கொதிநிலையை அடைந்ததும், ஏற்கெனவே ஊறவைத்திருக்கும் அரிசியை அதில் சேர்க்கவும். அரிசி பாதி வெந்து பாத்திரத்தில் தண்ணீர் குறைந்ததும், காய்ச்சி வைத்துள்ள பாலைச்சேர்க்க வேண்டும். இந்தக் கலவையில் அரிசி நன்கு வெந்தவுடன், பொடி செய்து வைத்துள்ள கற்கண்டை, 200 கிராம் நெய்யுடன் பாத்திரத்தில் சேர்த்து (கைபடாமல்) கலக்க வேண்டும். சர்க்கரையையும் தேவையான அளவு சேர்க்கலாம். நன்றாகப் பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

இதற்கிடையே... நன்றாகப் பொடி செய்யப்பட்ட ஏலக்காயை குங்குமப்பூவுடன் சேர்த்து வைத்துக்கொள்ளவும். முந்திரி, பிஸ்தா, பாதாம் ஆகியவற்றை ஒரு பத்து நிமிட நேரம் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, பிறகு தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைத்துக் கொள்ள வும். இப்போது, மீதமுள்ள நெய்யுடன் ஏலக்காய் பொடி-குங்குமப்பூ கலவை யையும், முந்திரி, பிஸ்தா, பாதாம் கலவையையும் பாத்திரத்தில் சேர்த்து நன்றாக ஒரு சேரக் கலந்து, இளஞ் சூட்டில் தனிப் பாத்திரத்தில் மாற்றி எடுத்து வைத்துக்கொண்டு பெருமாளுக்கு அமுதுபடி செய்து வழிபடுவோம்.

ஒருங்கிணைப்பு: ஜி.லட்சுமண்