Published:Updated:

விழாக்கள்... விசேஷங்கள்...

விழாக்கள்... விசேஷங்கள்...
பிரீமியம் ஸ்டோரி
விழாக்கள்... விசேஷங்கள்...

விழாக்கள்... விசேஷங்கள்...

விழாக்கள்... விசேஷங்கள்...

விழாக்கள்... விசேஷங்கள்...

Published:Updated:
விழாக்கள்... விசேஷங்கள்...
பிரீமியம் ஸ்டோரி
விழாக்கள்... விசேஷங்கள்...

இது குழந்தைகளைக் காக்கும் திருவிழா!

தென் தமிழகத்து அம்மன் தலங்களில் சிறப்புப்பெற்றது, குமரிமாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லங்கோடு. கேரள விதிப்படி பூஜைகள் நடைபெறும் இந்தத் தலத்தில், இரண்டு கோயில்களில்  அருள்பாலிக்கிறாள் பத்ரகாளி அம்மன்.கொல்லங்கோடு `கண்ணனாகம்’ ஜங்ஷனிலிருந்து மேற்கில் சுமார் அரை கி.மீ தூரத்திலுள்ள வட்டவிளையில் மூலக் கோயிலும், கண்ணனாகத்தில் இருந்து கிழக்கில், அரை கி.மீ. தூரத்திலுள்ள வெங்கஞ்சியில் திருவிழாக்கோயிலும் அமைந்துள்ளன.

விழாக்கள்... விசேஷங்கள்...

இங்கே பங்குனி பரணியை முன்னிட்டு நடைபெறும் `தூக்கத் திருவிழா’ வெகுபிரசித்தம். குழந்தை பாக்கியம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விழாக்கள்... விசேஷங்கள்...

வேண்டியும், குழந்தைகள் நோய் நொடியின்றி, அறிவும் நீண்ட ஆயுளும் பெற்று வாழவும் அம்மனை வேண்டிக்கொண்டு பக்தர்கள் நிகழ்த்தும்  ‘தூக்க நேர்ச்சை’ வைபவம், சிலிர்க்கவைப்பதாகும். சுமார் 40 அடி உயரமுள்ள இரண்டு வில்கள் பூட்டப்பட்ட ரதத்தில், ஒவ்வொரு வில்லிலும் இரண்டு தூக்கக்காரர்கள் என நான்கு பேரும், அவர்கள் கையில் ஒவ்வொரு குழந்தையும் இருப்பார்கள். ஆக, ஒரு நேரத்தில் நான்கு குழந்தைகள் ரதத்தில் கோயிலை வலம் வந்து ‘தூக்க நேர்ச்சை’ நிறைவேற்றப்படுகிறது. இந்த வருடமும் இக்கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள வெகு கோலாகலமாக நடந்தேறியது தூக்கத் திருவிழா!

- த.ராம், படம் : ரா.ராம்குமார்

விழாக்கள்... விசேஷங்கள்...
விழாக்கள்... விசேஷங்கள்...

வெண்ணெய்க் கண்ணன்!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி கோயில், திருவரங்கத்துக்கு அடுத்தபடியாக 18 நாள்கள் பிரம்மோற்ஸவமும், 12 நாள் விடையாற்றியும் காணும் பெருமைக்குரியது. கோப்பிரளயர், கோபிலர் எனும் முனிவர்களின் வேண்டுகோளின்படி, இன்றளவும் பக்தர்களைத் தாமே தேடிச் சென்று, ராஜகோபாலஸ்வாமி அருள் பாலித்து வருகிறார் என்பது ஐதீகம். பெரும் புண்ணியம் தரும், இந்தத் திருத்தலத்தின் பிரசித்திப் பெற்ற வெண்ணெய்த் தாழி உற்சவத்தையே இங்கே நீங்கள் தரிசிக்கிறீர்கள்!
 
- இ.லோகேஸ்வரி
படங்கள் :க.சதீஷ்குமார்

விழாக்கள்... விசேஷங்கள்...

அதிகார நந்திக்கு 100-வது ஆண்டு!

சென்னை - மயிலையின் பங்குனிப் பெருவிழாவையும், அதன் அங்கமான அறுபத்துமூவர் வைபவத்தின் மகிமையையும் நாமறிவோம். இந்தப் பெருவிழாவின் மற்றொரு சிறப்பம்சம் 3-ம் நாளன்று நடைபெறும்

விழாக்கள்... விசேஷங்கள்...

அதிகார நந்தி சேவை. அகிலநாயகனாம் கபாலீசன் பொலிவுடன் தன் மீது எழுந்தருள, அவரைச் சுமக்கும் பெருமிதத்துடன் கனகம்பீரமாக வீதியுலா வருவார் அதிகார நந்தி.

இந்த நந்தி வாகனத்தை வழங்கியவர், வந்தவாசி அருகே இருக்கும் தண்டரை கிராமத்தைச் சேர்ந்த த.செ.குமாரசாமி பக்தர் என்பவர். வைத்தியத் தொழில் மூலம், தங்கள் குடும்பத்துக்குக் கிடைத்த வருமானத்தில், நான்கில் ஒரு பங்கை ஆலயத் திருப்பணிக்காக வழங்கினார். இதையொட்டி அதுநாள்வரை மர வாகனமாக இருந்த இந்த வாகனத்தை வெள்ளித் தகடு வேய்ந்து  கலையழகுடன் வடிவமைத்து வழங்கினார். இதற்கான பணிகள் 1912 - ஆண்டு தொடங்கப்பட்டு 1917-ல் நிறைவு பெற்றன. அப்போதைய மதிப்பில் 48 ஆயிரம் ரூபாய் செலவு. இன்றளவும் குமாரசாமி பக்தரின் குடும்பத்தினர் ஆண்டுதோறும் உழவாரப்பணியாகக் கொண்டு இந்த நந்தி வாகனத்தை முறையாகப் பராமரிக்கின்றனர்.

இந்த நந்தியாருக்கு இது 100-வது வருடம்! பொலிவும் பூரிப்புமாக நம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தார் அதிகாரநந்தி!

- எஸ்.கதிரேசன்

அறுவடை திருவிழா!

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்திருக்கின்றன நெம்மாரா, வல்லங்கி கிராமங்கள். நம் ஊரில் அறுவடை முடிந்து தை மாதத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது போல் இந்தக் கிராமங்களில் அறுவடை முடிந்ததும், இரண்டு கிராம மக்களும் ஒன்று சேர்ந்து இந்த `நெம்மாரா வல்லங்கி வேலா' திருவிழாவை நடத்துகிறார்கள் (`வேலா' என்றால் திருவிழா).

விழாக்கள்... விசேஷங்கள்...

   நெம்மாரா கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் `நெல்லிக்குளங்கரா பகவதி அம்மன்' கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும் இந்தத் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.விழாவின்போது, நெம்மாரா கிராமத்திலிருந்தும் வல்லங்கியிலிருந்தும் நெல்லிக்குளங்கரா பகவதி அம்மனின் உற்ஸவர் சிலையை அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது வைத்து ஊர்வலமாக எடுத்துச்செல்வது வழக்கம்.

   முப்பது யானைகள், விண்ணை முட்டும் அலங்காரப் பந்தல்கள் என களைகட்டும் `நெம்மாரா வல்லங்கி வேலா' திருவிழாவின் ஒரு பகுதியாக இரண்டு கிராம மக்களும் தனித்தனியாக `வெடிக்கெட்டு' என்ற பெயரில் வெடிகளை வெடித்து கொண்டாடுகிறார்கள்.

- க.பாலாஜி

‘தங்கக்குடம்’காணிக்கை!

எம்பார் சுவாமிகள் ஸ்ரீபெரும்புதூருக்கு அருகில் உள்ள மதுரமங்கலத்தில் அவதரித்தவர். ஸ்ரீராமாநுஜரின் சீடர். ஸ்ரீராமாநுஜரின் 1000-வது ஆண்டு ஜயந்தி கொண்டாடப்படும் இந்த நேரத்தில், ஏப்ரல் 5-ம் தேதியன்று எம்பார் சுவாமிகளின் சார்பாக ஸ்ரீராமாநுஜருக்கு தங்கக் குடம் காணிக்கையாக வழங்கப்பட்டது.

விழாக்கள்... விசேஷங்கள்...

இந்த வைபவத்துக்காக மதுரமங்கலத்தில் இருந்து அதிகாலையில் எம்பார் சுவாமிகள் தங்கக் குடத்துடன் ஸ்ரீபெரும்புதூருக்கு எழுந்தருளினார். கோயில் சார்பாக எம்பார் சுவாமிகளுக்கு வரவேற்பு உபசாரங்கள் நிகழ்த்தப்பெற்றன, கோயிலுக்குள் எழுந்தருளி, ஸ்ரீராமாநுஜருக்கு தங்கக் குடம் காணிக்கையாக வழங்கினார் சுவாமிகள். பிற்பகலில் எம்பெருமானாருக்கும் எம்பார் சுவாமிகளுக்கும் திருமஞ்சனம் நடைபெற்றது.

அற்புதமான இந்த வைபவம் நடைபெற்ற தினம் திருநாராயணபுரம் (மேல்கோட்டை) ஸ்ரீசம்பத்குமாரனின் உற்சவ விக்கிரகத்தை டெல்லி பாதுஷாவின் அரண்மனையில் இருந்து ஸ்ரீராமாநுஜர்  திரும்பப் பெற்றுக்கொண்டு வந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

 - டி.ஏ.பக்திசாரன்
படம்: மீ.நிவேதன்

துபோன்ற ஆன்மிக வைபவங்கள், வழிபாடுகள், திருக்கோயில் தகவல்கள், படங்கள் மற்றும் வீடியோ தொகுப்புகளைத் தரிசித்துச் சிலிர்க்க...

www.vikatan.com/spirituality என்ற இணையதளப் பக்கத்தை பின்தொடருங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism