Published:Updated:

புதிய புராணம்! - பிள்ளையார் வழி

புதிய புராணம்! - பிள்ளையார் வழி
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்! - பிள்ளையார் வழி

ஷங்கர்பாபு, ஓவியம்: ஸ்யாம்

புதிய புராணம்! - பிள்ளையார் வழி

ஷங்கர்பாபு, ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
புதிய புராணம்! - பிள்ளையார் வழி
பிரீமியம் ஸ்டோரி
புதிய புராணம்! - பிள்ளையார் வழி

“விநாயகர் மாதிரி வேலை செய்யணும்...” என்றார் ஒரு பேராசிரியர். திகைத்துப் போனேன்.

பொதுவாக நமது கடவுள் விநாயகர் புராணங்களில் உடல் பருமன் அதிகம் கொண்டவராக சித்திரிக்கப்பட்டிருக்கிறார்.யானை முகக் கடவுள். யானைகள் வெகு நிதானமானவை. தவிர, விநாயகர் சுறுசுறுப்புக்கு உதாரணமாகச் சொல்லப்பட்ட கதைகளைப் படித்ததில்லை; கேள்வியும் பட்டதில்லை.

முதலில், விநாயகர் சப்ஜெக்ட் எதற்காக வந்தது என்பதைச் சொல்லி விடுகிறேன். அதாவது, என்னுடைய பேராசிரியர் ஒரு விவரம் கேட்டிருந்தார். நான் அதற்காக புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.

யதேச்சையாக அருகில் வந்தவர், என்னைக் கவனித்துவிட்டு மேலே சொன்ன வாக்கியத்தைச் சொன்னார். ``விநாயகர் மாதிரி வேலை செய்யணும்’’ என்று.

புதிய புராணம்! - பிள்ளையார் வழி

புத்தகத்தில் ஒரு விஷயத்தைத் தேடுவதில் ‘ஃபாலோ த விநாயகர் வே’ என்பதற்கு என்ன இருக்கிறது என்று குழம்பினேன்.

அதை அவரும் புரிந்துகொண்டிருக்க வேண்டும். தொடர்ந்து, “உங்க வொர்க்ல எஃபிஷியன்ட் இருக்குது. ஆனா, எஃபெக்டிவா இருந்தாத்தான் ரிசல்ட் கிடைக்கும்...” என்றார்.

அப்போதும் நான் புரியாமல் விழிக்கவே, ‘‘இண்டெக்ஸைப் பார்த்தாலே நான் கேட்ட விவரம் இதில் இருக்கிறதா, இல்லையா என்பதை அறிந்துகொள்ள முடியுமே. முழுப் புத்தகத்தையும் ஏன் புரட்டணும்?’’ என்று கேட்டார்.

இப்போது, அவர் சொல்ல வருவதை ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது என்றாலும், ‘இதில் ஆனைமுகனை ஏன் உள்ளே நுழைத்தார்?’ என்ற கேள்வி அப்படியே இருந்தது எனக்குள்.

என் முகபாவனையைக் கொண்டே எனக்குள் இருந்த கேள்வியை பேராசிரியர் உள்வாங்கிக்கொண்டார் போலும். வேறு வழியின்றி என் மட்டத்துக்கு இறங்கிவந்து புரியவைக்க முனைந்தார்.

“விநாயகர் உலகத்தைச் சுத்தறதுக்கு ஸ்மார்ட்டா ஒரு ஐடியாவை பிடிச்சாரே, அதுதான்... அந்த ஜாப்தான் எஃபெக்டிவ்.

முருகப்பெருமான் மஸ்ட் பீ எஃபிஷியன்ட். ஓர் அசுரனை அழிக்கறதுக்கு அந்த எஃபிஷியன்ட்தான் தேவை. ஆனா, இந்தப் போட்டிக்கு அது பொருந்தாது. இதில், விநாயகர் எடுத்த முடிவுதான் புத்திசாலித்தனமானது.

ஆக, எப்ப எஃபெக்டிவா இருக்கணும், எப்ப  எஃபிஷியன்ட்டா இருக்கணும்ங்கறதை ஒருத்தர் தெளிவா தெரிஞ்சு வெச்சிருக்கணும். அப்பதான் ஜெயிக்க முடியும். புரிந்ததா?’’

இப்போது நன்றாகவே புரிந்தது எனக்கு. சில நேரங்களில் வேகமும், சில நேரங்களில் விவேகமும் தேவை. எதை எப்போது பிரயோகிப்பது என்ற அறிதல் எப்போதும் அவசியம்.

அன்றாட வாழ்வில் நடமாடும் பல்கலைக்கழகங்களாகத் திகழும் பலபேரைப் பார்க்கிறோம். அவர்களில், வாழ்வில் வெற்றி பெற்று சந்தோஷமாக வாழ்பவர்களைக்காட்டிலும், ‘இவ்வளவு அறிவாளியா இருந்தும் நம்மளால ஏன் சாதிக்க முடியவில்லை’ என்ற ஆதங்கத்தோடு வாழ்பவர்களே அதிகம்.

அறிவு இருந்தால் மட்டும் போதாது; அதை எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற மேலாண்மைக் கருத்தையே ‘விநாயகர் உலகைச் சுற்றிய’ கதை நமக்குச் சொல்கிறது.

சரி! வேறென்ன விஷயங்களை அந்தக் கதை கற்றுத் தருகிறது?

‘அம்மையப்பனே உலகம்; உலகமே அம்மையப்பன்’ இதுதான் இந்தக் கதையின் மையக்கரு.

உண்மையில் உலகம் என்பது என்ன?

உலகம் என்பது நாற்புறமும் கடலாலும், விண்ணாலும் சூழப்பட்ட இடம் மாத்திரமா அல்லது நான் என் மனதிலிருந்து உலகைப் பார்ப்பதற்குத் தக்கபடி உலகம் காட்சியளிக்குமா, அல்லது நாம் காணும் உலகம் நம் மனதை உருவாக்குகிறதா?

உலகம்தான் மனதை உருவாக்குகிறது என்றால், அது ஏன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக உருவாக்குகிறது? ஒரே  உலகம் என்றால், அது எல்லோருக்கும் ஏன் ஒரேவிதமான அனுபவத்தைத் தருவதில்லை!

ஆக, என் மனம்தான் எனக்கான உலகை உருவாக்க முடியும்.

 ஒவ்வொருவரும் அவரவருக்கான உலகத்தை, சிறு குழந்தையாக இருக்கும் போதிருந்தே உருவாக்கத் தொடங்குகிறார்கள்.

ஒரு குழந்தையின் உலகம் எப்படி இருக்கிறது? ஒரு குழந்தையின் உலகத்தை யார் உருவாக்குகிறார்கள்? ஏன் ஒரு குழந்தையின் உலகம், இன்னொரு குழந்தையின் உலகத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது?

ஒவ்வொரு குழந்தைக்கும் உலகைப் பார்க்கிற கண்களை யார் தருகிறார்கள்?

நிச்சயமாக, அவர்களின் பெற்றோர்களைத் தவிர வேறு யார் இந்தப் பாத்திரத்தை வகிக்க முடியும்? ஒரு குழந்தை தனது பெற்றோரின் வழியாகத்தான் உலகைப் பார்க்கிறது. குழந்தைகளுக்கு அதன் பெற்றோர்தான் உலகை அறிமுகம் செய்கிறார்கள்.

பெற்றோர் காட்டும் உலகம் பாலைவனமாக இருந்தால், குழந்தை ஒட்டகத்தையும், வியர்வையையும் அறிந்து கொள்ளும். பெற்றோரின் உலகில் கவிதைகள் இருந்தால், குழந்தையின் உலகில் கவிதை எழுத காகிதக் கடைகளின் முகவரி இருந்தே தீரும்.

விநாயகரின் உலகம் அவரது பெற்றோர் காட்டிய உலகம். விநாயகர், பெற்றோரிடத்தில் உலகைப் பார்க்கிறார் என்றால், `பெற்றோர் வழியாக உலகைப் பார்க்கிறார்’ என்றுதான் அர்த்தம். பெற்றோர் அல்லது அந்தப் பாத்திரங்களுக்கு ஈடான பொறுப்பை வகிக்கிறவர்கள், நல்லதைச் சொல்லிக் கொடுத்தால் குழந்தைகளும் நல்லதைக் கடைப்பிடிப்பார்கள். எனவே, இந்தக் கதை விநாயகரின் உலகைச்சுற்றும் கதை மட்டுமல்ல; குழந்தை களுக்கு உலகைக் காட்ட வேண்டிய பெற்றோரின் உன்னதப் பொறுப்பை உணர்த் தும் கதையும்கூட!

- புராணம் தொடரும்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதிய புராணம்! - பிள்ளையார் வழி
புதிய புராணம்! - பிள்ளையார் வழி

பொதுவாகவே ஓவ்வொரு மனிதனுக்குள்ளும் இருவகையான இறைநம்பிக்கைகள் உண்டு.

அன்றாட உடனடி பலனுக்காக நம்பும் உருவவழிபாடு. இரண்டாவது, மற்றொரு கடவுள் பிரபஞ்சம் முழுவதும் விரிந்த உருவமற்றது.

எல்லா நம்பிக்கையாளர்களும் இந்த இரண்டுக்கும் இடைப்பட்டவர்களே.

ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை.

நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

- ராம், கோவை.