நம்மிடையே வாழும் மகான்களின் திருவுருவப் படங்களை வீட்டில் வைத்து, மாலை அணிவித்து வழிபடலாமா?

- எம்.கே.பார்த்தசாரதி, சென்னை-73

. ஸ்ரீராமன் இல்லாத நிலையில், தசரதரின் ஈமச்சடங்கை நிறைவேற்ற, மாமன் வீட்டுக்குச் சென்றிருந்த பரதனை வரவழைத்தார்கள். அவன் வரும் வழியில், நகர எல்லையில் இருந்த ஒரு மண்டபத்தில் தங்க வேண்டியிருந்தது..
புறப்படுவதற்குத் தாமதமாகும் என்று அறிந்ததால், மண்டபத்தைச் சுற்றிப் பார்க்க உள்ளே நுழைந்தான் பரதன். அங்கு அவனது முன்னோரான அரச பரம்பரை யினரின் சிலைகள் இருந்தன. பார்த்துக் கொண்டே வந்தவன், கடைசியில் தசரதரின் பதுமையைப் பார்த்தான். அவன் மனம் திக்கென்றது. அருகில் இருந்த காவலாளியிடம், 'இங்கிருக்கும் சிலைகள், இறந்தவர்களுக்கு மட்டும்தானா? உயிரோடு இருப்பவருக்கும் உண்டா?’ என்று விசாரித்தான்.

'இளவரசே! இறந்தவர்களுக்கு மட்டும்தான் சிலை எழுப்பப்படும்’ என்று பதில் வந்தது. ஆகையால், பண்டைய மரபில்... வாழ்ந்து கொண்டிருப்பவருக்குப் படங்கள் இருக்காது!

சிறு வயதில் வீட்டை விட்டு வெளியேறியவன், வளர்ந்து பெரியவனான பிறகு, வீட்டுக்குத் திரும்புகிறான். வீட்டில் நுழைந்ததும், மாலையால் அலங்கரிக்கப்பட்டு சுவரில் தொங்க விடப்பட்டிருக்கும் தந்தையின் படத்தைப் பார்த்ததும், அவர் இறந்துவிட்டதாகவே அவன் மனம் எண்ணும். இப்படிப்பட்ட காட்சியை இன்றைய சின்னத் திரையும் காட்டுவதுண்டு. வாழ்ந்து கொண்டிருப்பவரைப் படம் எடுத்து மாலை அணிவித்து வழிபடும் முறை, புது நாகரிகத்தின் வெளிப்பாடு.

கடவுளின் அவதார வடிவங்களை வழிபட்டனர், நம் முன்னோர். பிற்காலத்தில், வாழ்ந்துகொண்டிருக்கும் மகான்களையும் இறைவடிவமாகப் பாவித்து வழிபடுகிறார்கள். மாறுபட்ட மனித சிந்தனை, மரபை மீறி எதையும் செய்யும். அதற்கு வரம்பு கிடையாது.

சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற வைபவங்களை பெற்றோருக்குப் பிள்ளைகளே நடத்திவைப்பார்கள். ஆனால், பிள்ளை இல்லாத தம்பதியர், தாங்களாகவே இந்த வைபவத்தைச் செய்துகொள்ளலாமா?

பிள்ளைகள் இருந்தும், தங்கள் பெற்றோருக்கு இந்த வைபவங்களை அவர்கள் செய்யாமல் போனால், தவறாகுமா? அது, அவர்களைப் பாதிக்குமா?

- ஏ.சுப்ரமணியன், சென்னை-23

பிள்ளைகளை வைத்து சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்றவை எழவில்லை. அது மனிதனாகப் பிறக்கும் ஒவ்வொருவரது உரிமை. அன்றைய தினம் தனது மகிழ்ச்சிக்கும், சுகாதாரத்துக்கும், நீடித்த ஆயுளுக்கும் பல இறையுருவங்களை வேண்டி வழிபாடு செய்கிறான். பண்டிகையோடும் கொண்டாட்டத்தோடும் இணைந்த வழிபாடுகளில், பலரும் கலந்துகொள்ள ஏதுவாக பல நிகழ்வுகள் கலந்திருக்கும்.

சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் ஆகியன பிள்ளைகள் இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் பொருந்தும். இவை, பிள்ளைகளை எதிர்பார்த்து நடத்தும் நிகழ்வுகள் அல்ல. ஆடம்பரம் இல்லாமலே இந்த வழிபாட்டை நடத்தலாம். 60 வயது நிரம்பியவர்களுக்கும், 80 வயதும் 10 மாதமும் நிரம்பியவர்களுக்கும் இவை இரண்டும் உண்டு. பிள்ளைகள் செய்யவில்லை என்றால், தாங்களாகவே இந்த வைபவங்களை நடத்திக்கொள்ளலாம். ஏழ்மை இடையூறாக இருந்தால், அந்த தினத்தில் கடவுளை வணங்கி, இயலாமையை வெளிப்படுத்தி, அதன் நிறைவை அருளும்படி வேண்டிக்கொள்ளலாம்.

சந்திர லக்னப்படி 12, 1, 2, 4, 7, 8, 10 ஆகிய வீடுகளில் சனி இருந்தால், தோஷம் விலக பரிகாரம் செய்யும்படி ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த வீடுகளில் சனி இருக்கும் அத்தனை பேரும் சந்திக்கும் துயரத்துக்கு சனி பகவான்தான் காரணமா?

- மணிகண்டன், சென்னை-90

தர்மகர்மாதிபதி, லக்னாதிபதி, ஷட்பலம் பெற்றவன், யோக காரகனோடு இணைந்தவன், சுப கிரகங்களுடன் சேர்க்கை அல்லது பார்வை பெற்றவன், பிறக்கும்போது அஷ்டமத்தில் இருப்பவன், உபசயஸ்தானங்களில் இருப்பவன், சுபனான தசாநாதனோடும், புக்திநாதனோடும், அந்தரநாதனோடும், கேந்திரத்ரிகோண சம்பந்தம் பெற்றவன். இந்த நிலையில் இருக்கும் சனி, தனது கொடும் செயலை முடக்கி வைத்து, நல்ல பலன்களை வெளியிடுவான்.

தசை, புக்தி, அந்தரம் - இவை அசுபனாக இருக்கும் பட்சத்தில், அவனது தொடர்பு கெடுதலை இரட்டிப்பாக்கிவிடும். 3, 6, 11-ல் சனி வீற்றிருக்கும் வேளையில், அதிக துயரத்தைச் சந்தித்த ஜாதகங்கள் ஏராளம்.

பல்வேறு காரணங்களால் ஏற்படும் துயரம், சனி விரும்பாத இடத்தில் இருக்கும் வேளையில் நிகழும் போது, சனியைக் காரணம் காட்டி சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தவறு. எதையும் ஆராயாமல், கிரகத்தை ஒரு வீட்டில் பார்த்ததும், நொடிப் பொழுதில் பலன் சொன்னால்... அந்தப் பலனின் நம்பகத்தன்மை குறைந்து காணப்படும்.

ஒரு கிரகத்தின் பலனைச் சொல்லும்போது, மற்ற கிரகங்களின் தாக்கத்தையும் சேர்த்துச் சொல்ல வேண்டியிருக்கும். கண்ணுக்குப் புலப்படாத கர்ம வினையை, ஒட்டுமொத்தமான கிரகங்களின் ஒத்துழைப்பை ஆராய்ந்து- அனுமானம் செய்து, பலன் சொல்ல வேண்டும். காரணம் நிச்சயமாக இருந்தால்தான், அனுமானத்தில் நம்பகத்தன்மை இருக்கும். பொதுப்பலன் எல்லோருக்கும் பொருந்தாது. கர்மவினையின் தரம், மனிதனுக்கு மனிதன் மாறுபட்டு இருப்பதால், மாறுபட்ட பலனே தென்படும்.

சூரியனின் கிரணங்கள் விழும்போது... எந்தப் பொருளின் மீது விழுகிறதோ, அந்தப் பொருளின் தன்மைக்கேற்ப மாறுபாடு விளையுமே தவிர, எல்லாப் பொருட்களிலும் ஒரேவிதமான மாறுபாடு தென்படாது. சூரியனின் ஒளியால் தண்ணீரில் இருக்கும் தாமரை மலரும்; சேறு கட்டியாகும்; உதிர்ந்த பூக்கள் வாடும்; தண்ணீர் ஆவியாகும்; பனிக்கட்டி கரைந்துபோகும். இங்கு தாக்கம் ஒன்றுதான்; மாறுபாடு வேறு.

ஆகவே, பொறுமையோடு ஆராய்ந்து பலனை அறிந்துகொள்ள வேண்டும்.

பஞ்சாங்கங்களில், ஒவ்வொரு மாதமும் சுக்லபட்ச திருதியை நாளில்... வார்த்த கௌரி விரதம் (சித்திரை), கதளி கௌரி விரதம் (வைகாசி) என 12 மாதங்களுக்கும் வெவ்வேறு பெயர்களில் 'கௌரி விரதம்’ குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விரதங்கள் எதற்காக? கடைப்பிடிப்பது எப்படி?

- சி.ஏ.கல்யாணி, சென்னை-47

சட்டதிட்டத்தோடு இணைந்த தெய்வ வழிபாட்டு முறையைக் கடைப்பிடிப்பதை 'விரதம்’ என்று சொல்லலாம். உணவை விலக்குவது, தூக்கத்தைத் துறப்பது, முழு மனத்துடன் இறைவனை நினைவில் இருத்தி வழிபடுவது என்பன விரதத்தில் அடங்கும்.

பிரதமை முதல் பௌர்ணமி வரை யிலான திதிகளில், பல இறையுருவங் களின் விரத வழிபாட்டு முறைகளைப் புராணங்கள் எடுத்துரைக்கும். ஈசனோடு இணைந்த உமையவளை 'கௌரி’ விரதத்தில் வழிபடவேண்டும். உடல் ஆரோக்கியம், உள்ளத் தூய்மை, அமைதி ஆகியவற்றை அடைவது அதன் குறிக்கோள். மனம் மற்ற அலுவல்களில் இருந்து விடுபட்டு இறையுருவத்தில் ஈடுபட்டு, பணிவிடையில் கவனம் செலுத்தினால், நமது விருப்பம் ஈடேறும். பொருட்செல்வம், குழந்தைச் செல்வம், ஆயுள், ஆரோக்கியம், விருப்பங்கள் ஆகிய அத்தனையும் நிறைவேற, விரதங் கள் பயன்படும்.

காலமாற்றத்துக்கு இணங்க, மாறுபட்ட விருப்பங்கள் தோன்றுவது இயல்பு. அவற்றை எளிதில் பெற விரதங்கள் உதவும். ஸ்வர்ண, கதளி போன்ற அடை மொழிகள் மாறுபட்ட விருப்பத்தைச் சுட்டிக்காட்டும். இவையெல்லாமும் ஸ்ரீகௌரிக்கான பணிவிடைகளானாலும், பெயரிலும் பலனிலும் மாறுபாடு தென் பட்டால், மனம் அதில் ஈடுபட இலகுவாக இருக்கும்.

மனமானது புதிது புதிதான விஷயங் களில் தாவிக்கொண்டே இருக்கும். இறை நினைவில் நிலைத்து நிற்க, புதுப்புது இறை வடிவங்கள், அடைமொழிகள் இணைந்த இறைப் பெயர்கள் வாயிலாக பல விரதங்களை எடுத்துரைத்து, வழிபாட்டில் மனதின் ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கின்றன புராணங்கள்.

ஈசனோடு இணைந்த உமையவளின் திருவுருவத்தில், 16 உபசாரங்களைச் செய்து வழிபட வேண்டும். இரவில் உறங்காமல், அவள் பெருமையைப் பாட வேண்டும். மறுநாள் காலையில், அவளை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். அந்த ஒரு நாள் முழுவதும் இறையின் நினைவில் மனம் ஒன்றியிருக்கும். அது பழக்கத்துக்கு வந்துவிட்டால், முற்றும் துறந்த முனிவரைப் போன்று, நாம் இறைவனோடு இரண்டறக் கலக்கும் தருணம் வந்துவிடும். எளிய முறையில் வீடுபேறு பெற, இதுபோன்ற விரதங்கள் பயன்படும்.

எங்கள் கிராமத்தில் உள்ள ஸ்ரீராக்கம்மாள் கோயிலில், பக்தர்களால் அர்ப்பணிக்கப்பட்ட சாமி சேலைகள் எதிர்பாராதவிதமாகத் தீப்பிடித்து எரிந்துபோய்விட்டன. இதனால் எங்கள் ஊருக்கு ஏதேனும் பாதிப்பு விளையுமா? ஏதேனும் பரிகார வழிபாடுகள் செய்ய வேண்டுமா?

- ரா.நாகப்பன், அத்தாணி

விழிப்புடன் இருந்தும், அதையும் மீறி எதிர்பாராமல் ஏற்படும் நிகழ்வுகள், ஊரில் இருப்பவர்களைப் பாதிக்காது. இதுமாதிரியான நிகழ்வுகள் மீண்டும் தோன்றாமல் இருக்க, 'ஸம்ப்ரோக்ஷணம்’ செய்து தூய்மைப்படுத்த வேண்டும்.

அபசகுனத்தை அறவே அகற்ற அந்தப் பரிஹாரம் பயனுள்ளதாக இருக்கும்.

- பதில்கள் தொடரும்...