பாற்கடல் பாடம்

எனது நிறுவனத்தில் குறிப்பிட்ட ஒரு பிரிவுக்கு நான் பொறுப்பு. எனது பணியிடத்தில் என்னிடம் சிலரைப் பற்றி வேறு சிலர் புகார் செய்வார்கள்.

“சார், அவன் வேலையே செய்ய மாட்டான்! நான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க.’’

“குறிப்பிட்ட அந்த ஆள் நீங்க இல்லாதபோது நடந்துகிட்ட விதம் சரியில்லை சார். நிர்வாக விதிகளுக்குப் புறம்பானது.’’

“அந்த அம்மா வேணும்னே வேலையை மெதுவா செய்யுது சார்...”

இப்படி, வரிசையாக நீளும் அந்தப் புகார் பட்டியல்.

என்ன செய்யலாம்? புகார் உண்மை என்று சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிடலாமா?

குற்றம் சாட்டப்பட்டவரின் மீது, சம்பிரதாய நடவடிக்கைகள் சிலவற்றை எடுத்து விட்டு அவரைப் பணியிலிருந்து நீக்கலாமா?

அப்புறம்?! நாம் எதிர்பார்த்தது நடந்துவிடுமா? அதற்கான சாத்தியம் குறைவுதான்!

துரை என்ற நண்பருடன் காரில் வெளியூருக்குப் பயணித்துக் கொண்டிருந்தேன். வழியில் ஓரிடத்தில் நண்பரின் நண்பர் ஒருவரும் காரில் ஏறிக்கொண்டார். வாகனத்தில் இடம் இருந்ததாலும், துரையின் நண்பர் என்பதாலும், துரை அவரையும் அழைத்துச் செல்ல விரும்பினார். நான் எப்படி தடுக்க முடியும்?

இப்போது வாகனத்தில் மூன்று பேர். கொஞ்ச நேரம் எனக்கும் துரையின் நண்பருக்கும் நடுவில் நிலவிய மெளனத்தை நானே உடைத்தேன். எனது போனில் இருந்த திரைப்படப் பாடல்கள், பக்திப் பாடல்கள் சிலவற்றைப் போட்டுக் காட்டினேன். சில பாடல்களின் வரிகளை ரசித்துக் கேட்டதுடன், இருவரும் சேர்ந்து வாய்விட்டுப் பாடவும் செய்தோம்.

அந்த நண்பர் இறங்கும் இடம் வந்தது. விடைபெற்றுக் கொண்டார். இப்போது, துரை என்னிடம் கேட்டார்.

“பாட்டுக் கச்சேரி களைகட்டியதே... அந்த நண்பரை உங்களுக்குப் பிடிக்குமோ?’’

எனக்கு அந்த நண்பரைப் பிடிக்காது. ‘‘உண்மையாகச் சொல்வதானால், நான் மறுபடியும் சந்திக்க விரும்பாத மனிதர் அவர்’’ என்று உண்மையை ஒப்புக்கொண்டேன் துரையிடத்தில். கார் பயணத்தில் மட்டுமல்ல, பேருந்து, ரயில் பயணங்களிலும் இதுபோன்ற நிலைமைகள் வாய்க்கும். நம் இயல்புக்கு, மனதுக்குப் பிடிக்காத மனிதர்களுடனும் பயணிக்க வேண்டிவரும்.

வாழ்க்கைப் பயணமும் அப்படித்தான். சொல்லி வைத்தமாதிரி நமக்குப் பிடிக்காத வர்கள், நம் கருத்துகளுடன் அனுசரித்துப் போகாதவர்கள், ஏனோ பிடிக்காமல் போனவர்கள் என நமது பணி இடத்தில், வீட்டுக்குப் பக்கத்தில், உறவுகளில்... என நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.

நாம் விரும்பியவருடன் மட்டும்தான் பயணம் செய்ய முடியும் என்று உட்கார்ந்திருந்தால், நாம் எங்குமே போக முடியாது. நமக்கு விருப்பம் இருக்கிறதோ, இல்லையோ ஒன்றாகப் பயணித்தாக வேண்டிய அந்தச் சூழலில் நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் பிரச்னை!

இப்படியான வாழ்க்கைக்கடலில் வெற்றி பெற வழிகாட்டுகிறது, பாற்கடல் திருக்கதை.

பதினோராயிரம் யோஜனைகள் மேலெழுந்த வாரியாகவும், அதே அளவு கீழிறங்கியவாறும் உள்ள பிரமாண்டமான மந்தர மலையை மத்தாகக் கொண்டு கடையப்பட வேண்டிய பிரமாண்ட பாற்கடல் என்கிறது புராணம்.

இந்த உலகுக்கு அமிர்தம் வர வேண்டும் என்றால், பாற்கடல் கடையப்பட வேண்டும்.

பாற்கடலைக் கடைய, தேவர்கள் யாரைத் தங்களின் உதவிக்கு அழைத்துக்கொண்டார்கள்? தங்களுடன் கருத்து அனுசரித்துபோகாத வர்களை, மாற்றுக்கருத்துக் கொண்டவர்களை, ஏறக்குறைய எதிரிகளை - அசுரர்களை! அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் எந்தக் காலத்தில் அனுசரித்துபோனது?

ஆனால், பாற்கடலை இருவரும் சேர்ந்துதான் கடைந்தார்கள். மந்தர மலையை மத்தாகவும், வாசுகியைக் கயிறாகவும் கொண்டு தலைப்பக்கம் அசுரர்களும், வால்பக்கம் தேவர்களுமாக நின்றுதான் பாற்கடலைக் கடைகிறார்கள்.

விளைவு... காமதேனு, லட்சுமி, சந்திரன், குதிரை, ஐராவதம்... என ஒவ்வொன்றாக பாற்கடல் தருகிறது. நிறைவாக அமிர்தம் எனும் பொக்கிஷமும் கிடைத்தது. ஆக, இப்படியான நன்மைகளை அடைய தேவர்களுக்கும் எதிரிகளின் உதவி தேவைப்பட்டது.

இதுதான் வாழ்க்கைத்தத்துவம்.

வாழ்க்கை என்னும் கடலில் நாமும் பயணிக்கின்றபோது, உங்களின் கருத்துகளோடு மாற்றுக் கருத்துக்கொண்டவர்களும், எதிரிகளும் உங்களோடு பயணிப்பார்கள். அவர்களை நாம் என்ன செய்ய முடியும்? அவர்களை வராதே என்று சொல்லிச் சொல்லி எத்தனை பேரைத்தான் கழற்றிவிட முடியும்?

நான் எனது கருத்துடன் அனுசரித்து போகாத அந்த நண்பருடன் பயணம் செய்ய நேரிட்டபோது, வாகனத்தில் சண்டை போட்டிருக்கலாம், பேசாமல் இருந்திருக்கலாம் அல்லது பாதி வழியிலேயே இறங்கியிருந்திருக்கலாம். கார் பயணம் அல்லது ரயில் பயணம் போன்று சில மணி நேர பயணங்களில் வேண்டுமானால் இவை சாத்தியமாகும். ஆனால், வாழ்க்கைப் பயணம் அப்படியல்லவே!

எங்கு இறங்க, எங்கு ஓட..?!

ஆகவே, பிடிக்கவில்லை என்பதற்காக முரண்பட்டு அந்தத் தருணங்களை பாழடிப்பதை விட, இனிமையாக்கிக் கொள்வதுதான் புத்திசாலித்தனமானது. மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள் என்பதற்காக அசுரர்களை தேவர்கள் தவிர்த்திருந்தார்கள் என்றால், அவர்களுக்கு அமிர்தம் கிடைத்திருக்காது.

இந்த நோக்கில், பாடல்களை ரசித்ததும் படித்ததும் பயணத்தை இனிமையாக்கும் பொருட்டுதான்.

இதை துரையிடம் நான் விவரித்ததும் அவர் கேட்டார், “இதுதான் பாற்கடல் தத்துவமா?” என்று!

‘‘இன்னொன்றும் உண்டு’’ என்றேன் நான்.

‘‘அதென்ன?’’ எனக் கேட்டார் துரை. மீண்டும் விளக்கினேன் நான்.

‘‘பாற்கடல் கடையப்பட்டது டீம் வொர்க் அல்லவா?

நமது பணியில், வாழ்க்கையில், உறவில் நமக்குப் பிடிக்காதவர்கள், நம்மை வெறுப்பவர்கள், காலை வாரி விடுகிறவர்கள், புறம் பேசுகிறவர்கள் என்று எல்லோரும்தான் இருப்பார்கள். இவர்களை எப்படித் தவிர்க்க முடியும்? எத்தனைப் பேரை வேலையில் இருந்தும் வாழ்க்கையில் இருந்தும் கழற்றிவிட முடியும்?

அப்படியே கழற்றிவிட்டாலும், புதிதாக வருபவர்கள் பத்தரை மாற்றுத் தங்கங்களாக, உதாரண மனிதர்களாக இருப்பார்கள் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது?

ஆகவே, நம்முடன் இருப்பவர்களின் குறைகளைப் புறக்கணித்து விட்டு, அவர்களிடம் உள்ள நிறைகளை, திறமைகளை அடையாளம் கண்டு பயன்படுத்திக்கொள்வது சிறப்பல்லவா? அப்படிச் செயல்படும்போதுதான் டீம் வொர்க்கும் பலப்படும்; பயன் தரும்.’’

நண்பன் துரை புரிந்துகொண்டவராய் ஆமோதித்து தலையாட்டினார். எங்களது பயணம் இனிதே தொடர்ந்தது.

பாற்கடல் சொல்லும் பாடத்தைப் புரிந்துகொண்டால், நமது வாழ்க்கைக் கடலில் ஆவேச அலைகள் இருக்குமா, என்ன?

- புராணம் தொடரும்...