Published:Updated:

கேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமா?

கேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமா?

சுமங்கலியாக மறைந்துவிட்ட என் அம்மாவின் திருமாங்கல்யத்தை, வரப்போகும் மருமகளுக்காகப் பயன்படுத்தலாமா?

- சி.கேசவன், திருவிடைமருதூர்

திருமாங்கல்யத்தை, `கல்யாணம் ஆகும் பெண்ணின் தகப்பனார் போட வேண்டுமா, பையனின் வீட்டில் போட வேண்டுமா?' இப்படி ஒரு கேள்வி உண்டு. மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளைதான் தன் செலவில் மாங்கல்யம் வாங்கித் தர வேண்டும். சம்பிரதாயத்தில் ‘நம் பெண்ணுக்குத்தானே செய்கிறோம்’ என்கிற எண்ணத்தில் பெண் வீட்டாரே மாங்கல்யம் போடுவது வழக்கமாகிவிட்டது. சட்டப்படி பார்த்தால் மாங்கல்யம், கூறைப் புடைவை வாங்க வேண்டியது மாப்பிள்ளைதான். ‘எப்போது கன்னிகாதானமாகப் பெண்ணை வாங்கிக் கொண்டாயோ, அப்போதே பெண்ணுக்கு மாங்கல்யத்தையும் புத்தாடையையும் கொடுத்து சுத்தப்படுத்தி உன்னுடையவளாக ஏற்றுக்கொள்!’ என்றுதான் சாஸ்திரம் சொல்கிறது. மருமகளுக்கு என்று புதிதாகத்தான் பண்ணிப் போட வேண்டும். மாமியாரின் மாங்கல்யத்தைப் போட வேண்டியதில்லை. அப்படியே புதுத் தங்கம் வாங்கவில்லை என்றால், மாமியாரின் மாங்கல்யத்தை உருக்கிப் புதிதாகச் செய்து போடலாம்.

கேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quizநம் மனது எப்போதும் எதிரிடையான எண்ணங் களையே சிந்திக்கும். வேறு சஞ்சலங்களும் தோன்றக்கூடும். அவற்றுக்கெல்லாம் இடங் கொடுப்பானேன்? ‘எனக்கு அப்படி எல்லாம் தோன்றாது’ என்று எவராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. ‘பண்ணலாமா?’ என்று கேட்கும்போதே உங்களுக்கு ஏதோ நெருடுகிறது என்பதுதானே பொருள்? நெருடுவதைத் தவிர்த்துவிடுங்கள்!

‘இரணிய வேளை’ என்றால் என்ன?

- கே.முருகானந்தம், பெரம்பலூர்

மரணம் வரக் கூடாது என்பதற்காக இரணியன் பகவானிடம் சில வரங்கள் கேட்டான். ‘என்னை யாரும் ஆயுதத்தால் கொல்லக் கூடாது. மனிதனோ, மிருகமோ கொல்லக் கூடாது. வீட்டுக்கு உள்ளேயோ, வெளியேயோ மரணம் வரக் கூடாது. பகலிலோ, இரவிலோ நான் சாகக் கூடாது!’ என்றெல்லாம் கேட்டான். பகலும் இல்லாமல் இரவும் வராமல் இருக்கும் நேரம் மாலை. வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இல்லாமல் இருப்பது நிலைப்படி. மனிதனாகவும் இல்லாமல் மிருகமாகவும் இல்லாமல் இருப்பது நரசிம்மம். இப்படி இரணியனை வதம் செய்தார் பகவான். மாலை வேளையான அந்தச் சந்தியா காலத்தை, இரணிய வேளை, என்று சொல்லத் தொடங்கினார்கள். மற்றபடி அதில் எந்த விசேஷமும் இல்லை.

கேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமா?

உடல்நிலை சரியில்லாத நிலையில், தீர்த்தத்தை அள்ளித் தலையில் தெளித்துக்கொண்டால், தீர்த்தம் ஆடியதற்கான பலன் கிடைக்குமா?

- கல்யாணி ராமகிருஷ்ணன், தூத்துக்குடி

குளித்தால் உயிர் பிரிந்துவிடும் அல்லது நீரின் குளிர்ச்சியால் நோய் முற்றி, பல அலுவல்களை இழக்க நேரிடும் என்று தெளிவாகத் தெரிந்தால்... நீரை அள்ளித் தலையில் தெளித்துக்கொண்டால் போதும்; பலன் உண்டு. வெந்நீரில் குளித்தாலே சளி ஏற்பட்டு, பாதிப்புக்கு ஆளாவோரும் குற்றாலம் அருவியில் குளிப்பதுண்டு. உடல் நலமில்லாதவன், தந்தைக்குக் கொள்ளி வைத்த கையோடு குளிப்பதுண்டு. மாறா வியாதியில் மருந்து எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் ஏராளம். அவர்கள் அத்தனை பேரும் தலைமுழுகிக் குளிக்காமலா இருப்பார்கள்?! அவசர - ஆபத்து வேளைகளில் குளிப்பதற்குப் பதிலாகத் தெளித்துக்கொள்ளலாம் என்ற விதிவிலக்கை, குளிக்காமல் தவிர்ப்பதற்குப் பயன்படுத்தக் கூடாது. குளிப்பதற்காகத்தான் தீர்த்தங்கரை செல்கிறோம். குளிக்க முடியாத நிலையில் அங்கு போவது தவறு. உடல்நலக் குறைபாடு, தீர்த்தங்கரை ஸ்நானத்துக்கு உகந்ததல்ல. உடல் நலனோடு இருக்கும்போது, அங்கு சென்று நீராடுவது சிறப்பு. அன்றாடம் நீராடிப் பழக்கப்பட்டால், உடல் ஆரோக்கியம் சிறக்கும்; தீர்த்தங்கரையைப் பார்த்ததும் நீராடத் தோன்றும்; விருப்பமும் நிறைவேறும்.

தரையில் துணி விரித்து அதன் மீது அமர்ந்து தியானம் செய்யலாமா? அல்லது தர்ப்பைப் பாயைப் பயன்படுத்த வேண்டுமா?

- எம்.கே.சுந்தரவரதன், பெங்களூரு


தர்ப்பாசனத்தில் அமர்ந்து தியானம் செய்வது சிறப்பு. தியானத்தைச் சிறப்பிக்க வைப்பதில் ஆசனத்தின் பங்கும் உண்டு. பரிசுத்தமான பொருள் தர்ப்பை. தர்ப்பாசனம் அசையாமலும் சுகமாகவும் இருக்கும்; அதைப் பயன்படுத்துவது சிறப்பு என்று பதஞ்சலி கூறுவார் (ஸ்திர சுகமாஸனம்). அதன் மீது அமர்ந்து தியானிப்பதால், புவியின் ஆகர்ஷணம் நம்மைப் பாதிக்காது. தியானத்தின் பலனை எட்டுவதற்கு அது பயன்படும். வேதம் சொல்லும் சடங்குகளில்... தர்ப்பையில் அமர்ந்து, தர்ப்பையைக் கையில் ஏந்திச் செயல்படுவதுண்டு (தர்பேஷ ஆஸன: தர்பான் தாரயமாண:). தர்ப்பையின் பெருமை, தூய்மையான துணிக்கு இருக்காது. புவி ஆகர்ஷணத்தைத் தடுக்கும் தகுதி அதற்கு இல்லை. வேறு வழியில்லாத நிலையில், துணியைப் பயன்படுத்தலாமே தவிர, நிரந்தரமாக ஏற்கக் கூடாது. ஆமை வடிவில் இருக்கும் மரத்தாலான பலகையைப் பயன்படுத்துவதும் உண்டு. அதுவும் புவி ஆகர்ஷணத்தைத் தடுப்பதுடன், ஆசன இலக்கணத்தோடு விளங்கும். துணிக்கு இலக்கணமும் இல்லை; ஆகர்ஷணத்தைத் தடுக்கும் திறனும் இல்லை.

- பதில்கள் தொடரும்...